(Reading time: 4 - 8 minutes)

01. Chillzee Stories Memorable quotes collection - January 2016

Memorable

1. 

...ஆனால் அவனிடமிருந்த அமைதி அவனுக்குள் இதைப் பற்றி ஏதோ திட்டமிருக்கும் என்று ஒரு அரை ஆறுதலை தர இதுவரை வந்த தெய்வம் இனியும் வரும் என்ற நினைவு முழு சமாதானம் செய்வித்தது...

- ANNA SWEETY - Ennai thanthen verodu episode # 06 - Shared by Vathsala

 

2. 

A simple smile is contagious! A kid’s smile is absolutely endearing!
As if to prove that ‘it takes just one small smile to stop one thousand tears’, Akshu’s innocent giggle changed the whole situation. A simple smile can do wonders!

SANDHYA - In Search of love episode # 12 - Shared by Anna Sweety

3.

அவனிடத்தில் ஒரு பெருமூச்சு எழுந்தது. வாடிப்போயிருந்த அவள் முகம் அவனை வருத்தியது. அவளை எதுதான் சந்தோஷப்படுத்தும் யோசித்தபடியே காரை செலுத்தினான் விவேக்.
கார் நேராக சென்று நின்றது ஒரு நகைக்கடையின் வாசலில்.
கண்ணை பறிக்கும் விளக்குகளினூடே ஜொலி ஜொலித்துக்கொண்டிருந்த அந்த பல மாடி நகைக்கடைக்குள் நுழைந்த போதும் அவள் முகம் மலரவில்லை.
'என்னென்ன வேணும். எல்லாத்தையும், எல்லாத்தையும் வாங்கிக்கோ அர்ச்சனா.' குரலில் சேர்ந்த உற்சாகத்துடன் அவளை மகிழ்ச்சியாகிவிடுவதே நோக்கமாய் சொன்னான் விவேக்.
அவள் கண்கள் எதன் மீதும் நிலைக்கவில்லை.
'எனக்கு எதுவும் வேண்டாமே வீட்டுக்கு போகலாம்.' என்றால் அவள்.
'எதுவுமே வேண்டாமா' வியப்பாய் கேட்டான் விவேக். நிஜமாவே உனக்கு என்னதான் பிடிக்கும்?.
அந்த நொடியில் அந்த குரல் கேட்டது. யாரோ யாரையோ அழைத்தார்கள் 'வசந்த்'
அந்த குரலில் ஏனோ சரேலென்று விரிந்து திரும்பி ஒரு நொடி அலைபாய்ந்து திரும்பின அவள் கண்கள்

- VATHSALA - Manathile oru paatu # 17 - Shared by Jansi

4. 

"....பைபிள் பக்கத்தில இருந்தா கூட பேய் வருதுன்னு...சொல்லிகிட்டு இருந்த... உங்க லா புக்கை கோர்ட்ல கொண்டு போய் வச்சுட்டா... கேஃஸ்ல நியாயம் கிடைச்சுடுமா..? அந்த புக்ல இருந்து பேச வேண்டியதை பேசனும்...அந்த புக்ல உள்ளபடி நாம நடந்துகிடனும்....இப்படி நாம செய்ய வேண்டியது நிறைய இருக்குதே....பைபிளும் கடவுள் குடுத்த சட்ட புத்தகம் தானே...அதை இம்ப்லிமென்ட் செய்தாதான்....ஜெயிக்க முடியும்..."

- ANNA SWEETY - Katraga naan varuven episode # 10 - Shared by Jansi

5.

காலம் காலமா கஷ்டம் என்றால் உடனே யார் காலிலாவது போய் விழ வேண்டும்.. கடவுளிடம் முறையிட வேண்டும்... அழ வேண்டும்...இல்லை என்றால் இது திருஷ்டி, முன் ஜென்ம பாவம் இப்படி ஏதாவது சொல்லி தப்பித்து கொள்ள வேண்டும்... இதை தானே எப்போதும் நமக்கு சொல்லி தராங்க.. எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது அருணா ...  ஆனால் இதை எல்லாம் கடவுளிடம் முறையிட்டு தப்பித்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.... அரவிந்த் அடி பட்டு இருக்கும் போது உன்னால் என்ன செய்ய முடியும்ன்னு அவன் என்னிடம் தானே கேட்டான்? நான் தான் அவனுக்கு பதில் சொல்ல வேண்டும்... சொல்ல தான் போகிறேன்... அதற்கு நான் தனியாக போய் கும்பிட்டால் தான் பிள்ளையார் அருள் புரிவார் என்று எனக்கு தோன்றவில்லை... கடவுள், நான் செய்வது சரியாக இருந்தால் என் கூடவே இருந்து எனக்கு வழி காட்டுவார்... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது...

- BINDU VINOD - Puyalukku Pin 15 Shared by Nanthini

6. 

உழைப்பால் கிடைக்கும் பொருள் செலவானால் இங்குதான் மீண்டும் உழைத்துப் பொருளீட்டி அதனைப் பிற்ருக்குகாக செலவு செய்து அதனால் கிடைக்கும் இன்பத்தைப் பெற முடியும்.சுவர்க்கத்தில் இன்பம் ஒரு நாள் நம்மை விட்டு விலகிவிடுமே என்று அச்சப் படவேண்டும். ஆனால் இங்கு அந்த பயம் இல்லை.சுவர்க்கத்தில் கிடக்கும் நிலையில்லா இன்பத்தைவிட இங்கே பிறருக்காக உழைத்து அதனைப் பகிர்ந்தளித்து அதனால் கிடைக்கும் புண்ணியமும் அந்த புண்ணியத்தால் கிடைக்கும் இன்பமுமே பெரியது.எனவே எனக்கு சுவர்க்கம் வேண்டாம்.இங்கேயே இருந்து இறைபணியும், பிறர் பசிபோக்கும் அறப்பணியும் செய்து வாழ்வதையே பெரிதாக நினைக்கிறேன்.

- THANGAMANI SWAMINATHAN - Suvarka neekam - Shared by Prama

7.

இனிய இல்லறம் உண்மைக் காதலில் மட்டும் முழுமையடையாது. ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் மகிழ்ச்சியான வாழ்விற்க்கு வழிவகுக்கும். மனதில் உள்ளதை வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டாலே பாதி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சந்தேகம் சங்கடத்தையே தரும். காதலோடு நம்பிக்கையும், நம் மேல் சந்தேகம் கொள்ளா துணையும் அமைந்து விட்டாலே வாழக்கை நந்தவனத் தோட்டம் தான் அனைவருக்கும்.

- KEERTHANA - Pirivendra solle ariyathathu - Shared by Thenmozhi

8. 

காதல் என்பது இயற்கையானது. அதை செயற்கையா உருவாக்க முடியாது

- BINDU VINOD - Veesum katrukku poovai theriyaathaa - 22 - Shared by Thenmozhi

9.

அன்புக் கொண்ட இரு மனங்களின் வெற்றியை தடுக்க தான் இயலுமா??? இவனுக்கு,இவள் என்று எழுதிய கணக்கு வெவ்வேறு பாதையில் பிரியலாம்!!!! ஆனால்,பிரிந்த பாதை சேர வழிவகை உண்டு என்பது ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம் போலும். அதனால் தான்,அவன் அனைத்தையும் ஆண்டவனாய் இருக்கிறான்.நாம் அற்ப மானிடராய் இருக்கிறோம் போலும்!!! 

- SAKI - Vaarayo vennilave - 05 - Shared by Thenmozhi

10.

பணம் இருக்றவங்கல்லாம் ரிச் கிடையாது….அன்பு இருக்றவங்க…அதுவும் நதி மாதிரி பொங்கி ஓடுற அன்பு இருக்றவங்கதான் ரிச்…..பணம் இல்லாதவனுக்கு பணம் குடுத்தா அவன் வாழ்க்கை செழிக்கும்னு எந்த கேரண்டியும் இல்லை….ஆனா இந்த அன்புங்குற ஜீவ நதி இருக்கே அது ஓடுற கரைல பாலை மண்ண அள்ளிப் போட்டா கூட நனைக்கும்…..என்ரிச் செய்யும்…செழிக்க வைக்கும்…

- ANNA SWEETY - Nanaikindrathu nathiyin karai - 20 - Shared by Thenmozhi

Feb 2016 quotes 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.