(Reading time: 3 - 6 minutes)

02. Chillzee Stories Memorable quotes collection - February 2016

Memorable

1. 

தன்னிரக்கமும், சுய பச்சாதாபமும் தான் யாருக்கும் முதல் எதிரி, அதை நம்ம பக்கத்துல கூட வர விட கூடாது! நான்னு இல்லை இந்த உலகமே உன்னை என்ன சொன்னாலும் கூட ஹர்ட் ஆவதும் ஆகாததும் உன் கையில தான் இருக்கு! உன் வாழ்க்கையை நீ தான் வாழ்ந்தாகணும்! நமக்காக மத்தவங்க வாழ முடியாது! அதே போல அடுத்தவங்க சொல்றது என்னை காயப் படுத்திரும்னு சொல்றது ஸ்டுப்பிடிட்டி

- BINDU VINOD - Kathal nathiyena vanthaai episode # 12 - Shared by Thenmozhi

 

2. 

அறியாதோர் கொண்டாலும் இங்குண்டு காதல் வரம்

கல்யாணம்

தொடங்கும்போதே கனிந்து இருக்கும் காதல் இங்கு

கனிவனம்

ஆரம்பமே அதி பூரணம்

நிரந்தரம் !

- ANNA SWEETY - Kaniyatho kathal enbathu episode # 13 - Shared by Chitra

3.

ஆனால் இந்த பிரிவுக்கு இன்னொரு முகம் இருப்பதை நாம் உணர்ந்தது உண்டா. அருகில் இருக்கும்வரை அலட்சியமாய் கூட இருந்திருப்போம்.... அப்படி அலட்சியத்தில் அசரும் நம்மை சுத்தியால் அடைத்து தெளியவைப்பது பிரிவுதானே?

பிரிவில்தான் ஒருவரின் அருகாமையை தேடுகிறோம்.....!

பிரிவில்தான் ஒருவரின் அன்பினை புரிந்துகொள்கிறோம்...!

பிரிவில்தான் ஒருவர் நமக்காக நிரப்பிய வெற்றிடங்களை புரிந்துகொள்கிறோம்...!

பிரிவில்தான் ஒருவரின் கோபத்தினில் உள்ள நியாயத்தை உணர்கிறோம்....!

- BUVANESWARI - Moongil kuzhalanathe # 09 - Shared by Vathsala

4. 

பதி தவிர பத்தினி தொடுபவன் சிரமறுக்கும் சட்டம் இயற்றியவன் நான்

- ANU R - Narumeen kathal # 04 Shared by Mano Ramesh

5.

“நான் ஊருக்கு போனா ஒன்னும் இல்லையா....செத்தா மட்டும்தான் உங்களுக்கு ப்ரச்சனையா?..” வெடித்தேன்.

அவன் அணைப்பின் வேகத்தில் எலும்பு நொறுங்கிவிடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் அது வலிக்கவில்லை.

“சொல்லுங்க...நான் ஊருக்கு போனா ஒன்னும் இல்லையா?” கோபம் கூட காணமல் போய் இது வெறும் சிணுங்கலாய் செல்ல குழைவாய் வருகின்றது.

“லூசாடி நீ ...ஊருக்கு போறதுன்னா இந்த வழியாதான வருவ..... “ சில நொடி மௌனம்.

- ANNA SWEETY - Katrathu kathal - Shared by Mano Ramesh

6. 

திருமணத்திற்கு பின் காதல் எங்கே போகிறது?

அன்பு, பாசம், கனிவு, அக்கறை, நேசம் என்று பல வடிவங்களாக மாறி அப்படியே தான் இருக்கிறது!

மற்றபடி காற்றில் கரைந்து மறைந்து போக அதென்ன கற்பூரமா....???!!!!

- BINDU VINOD - Ithu thaan kathala? - Shared by Anusha

7.

“ஏன் பிரியா இந்த எறும்பு, நாய் குட்டி எல்லாம் விட்டுட்டு சக மனுஷ ஜீவன்களையும் பார்க்கலாம்ல?”

“பார்த்து என்ன செய்றது? அந்த ஜீவன்கள் தானே இந்த வாயில்லா ஜீவன்களை எல்லாம் கொடுமை படுத்துறது...”

“அப்படியா சொல்றீங்க, எங்கே கையை அந்த எறும்புங்க லைனுக்கு நடுவில் வைங்க பார்ப்போம்... அப்புறம் தெரியும் யாரு வாயில்லா ஜீவன்னு...”

பிரியா திரும்பி அவனை நேராக ஒரு பார்வை பார்த்தாள்... விக்கிராந்திற்கு அதன் பொருள் புரியவில்லை...

“என்ன?”

“எறும்பு கடிப்பது தற்காப்புக்காக. தெரியாமல் கை வைத்து அது கடிச்சா கூட அதை தப்பு சொல்ல முடியாது, அதுங்க சைசுக்கு மான்ஸ்டர் போல இருக்க நாம

தெரிஞ்சே கை வச்சுட்டு அது கடிக்குதுன்னு கம்ப்ளெயின்ட் செய்தால் எப்படி?”

- BINDU VINOD - Kathal nathiyena vanthaai - 08 - Shared by Keerthana R

8. 

தந்தையும் தாயாக்கிய அழுகை.

தொப்புள் கோடி பந்தம் உருவாக வித்திட்டவனையே அதை வெட்ட சொல்லி கத்திரியை கொடுத்தார் மருத்துவர்... குணாவிற்கு கத்தரியை தூக்க கூட சக்தியற்ற கிழவன் போல் கை கிடுகிடுவென நடுங்கியது.தகப்பனுக்கும் தாய்மை உண்டன்றோ!உணர்ச்சி பெருக்கில் திளைத்தான்.

- USHA - Eppa pei mathiri iruka - 31 - Shared by Keerthana

Jan 2016 quotes

Mar 2016 quotes 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.