(Reading time: 2 - 4 minutes)

Chillzee 2016 Blockbuster Countdown - # 09

Nenjamellam Kathal

காதலும் நட்பும் கலந்த அழகான கதை இது. இன்னுமொரு புது கதாசிரியரை நமக்கு அறிமுகப் படுத்திய கதையும் கூட.

ப்ரியா எழுதிய 'நெஞ்சமெல்லாம் காதல்' கதை செப்டம்பர் மாதம் 2015ல் நிறைவு பெற்றது.

டலால் பிரிந்து செல்லும் காதல் ஜோடிகள் மீண்டும் சேர்வதை பற்றிய கதை.

கதாநாயகன் ஆதி மற்றும் கதாநாயகி மது நம் மனதிலேயே நிற்கும் இனிமையான ஜோடி.

ரகு - மது நட்பு நம் மனதில் நிற்பது சிறப்பு.

நெஞ்சமெல்லாம் காதல் குறித்து ப்ரியா என்ன சொல்கிறார்கள் என்றால்,

நெஞ்சமெல்லாம் காதல் 

இந்த கதையை துவங்கி நடுவில் திக்கி திணறி சரியாக அத்தியாயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க முடியாமல், நான் என் தனிப்பட்ட பிரச்சனைகளோடு போராடிய படி இருக்கையில் முடித்த ஒரு கதை!!! என் முதல் கதை.. கஷ்டத்தின் பலனாய் கிடைக்கும் எதுவும் பொக்கிஷம் தான்.. எனக்கும் இந்த கதை அப்படி தான்..!!

எப்போதுமே முதல் முயற்சிகளில் பல தடங்கல்கள் இருக்கும்.. அதிலும் நமக்கு தெரியாத இது வரையில் இருந்திடாத ஒரு துறையில் முதல் அடியை எடுத்து வைப்பது அவ்வளவு எளிதன்று!! எனக்கும் அப்படி தான்.. இந்த கதையை எழுத ஆரம்பித்த நாட்களில் ஒரு முறை நந்தினி அவர்கள் கேட்ட கேள்விக்கு என் கவியில் பதில் கூறும் வகையாக "சில்சீ என் கதையின் தாய்" என குறிப்பிட்டிருந்தேன். இன்றும் அதில் சிறிதும் மாற்றமில்லை. கரு கொடுத்தது நானாக இருந்தாலும்.. உரு கொடுத்து உயர்த்தி விட்டது சில்சீ தான்.. என் கதையை முதல் அத்தியாயம் முதல் இறுதி அத்தியாயம் வரை கைபிடித்து கூட்டி வந்த, கருத்துக்களை பகிர்ந்து ஊக்கமளித்த அனைத்து தோழியருக்கும்  தோழர்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்..!!

கதைக்கான அறிவிப்பு முதல் அது புத்தகமாக வெளிவந்து அதையும் ஆதரித்து சில்சீ ஷாப் -இல் பதிவேற்றியது வரை "நெஞ்சமெல்லாம் காதல்" கதையில் சில்சீயின் ஒத்துழைப்பும் ஊக்கமும் என்னை தொடர்ந்து எழுத செய்த உற்சாகமும் என்றும் மறக்க முடியாதது..!! நெஞ்சமெல்லாம் காதலுடன் சில்சீயுடன் நான் கொண்ட அழகான பயணம்..!! 

- ப்ரியா

நெஞ்சமெல்லாம் காதல்.... நெஞ்சம் எல்லாம் இனிமை...!

இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'நெஞ்சமெல்லாம் காதல்' பக்கம் சென்று படியுங்கள். 

 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.