(Reading time: 2 - 4 minutes)

Chillzee 2016 Blockbuster Countdown - # 05

Verenna venum nee pothume

துவும் ஒரு முதல் கதை! காதல் - நட்பு - குடும்பம் என அனைத்தும் சமவிகிதத்தில் கலந்த இனிய கதை.

புவனேஸ்வரி எழுதிய 'வேறென்ன வேணும் நீ போதுமே' நம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட ஒரு கதை.

யதில் சிறியவர் என்றாலும் பாத்திரங்கள் படைப்பில் அசத்தி இருக்கிறார் புவனேஸ்வரி.

பல ஜோடிகளை இருந்தாலும் குழப்பாமல், நேர்த்தியாக கதையை கொண்டு சென்றது சிறப்பு.

அர்ஜுன் - சுபத்ராவின் ஆழமான காதல், கிருஷ்ணா - மீராவின் ஊடல் கலந்த காதல், கார்த்தி - நித்யாவின் நட்புடன் கூடிய காதல், ரகு - ஜானகியின் உள்ளம் புரிந்த காதல் என ஒரே கதையில் பல வண்ண காதலை எடுத்துக் காட்டி இருப்பது சிறப்பு.

இளம் தலைமுறையினர் மட்டும் அல்லாமல் பழைய தலைமுறையினரும் கதையில் நம் மனதில் பதிகிறார்கள்.

சிறிது நேரம் என்றாலும் புவனாவாக வரும் புவனாவும் நம் மனதில் நிற்கிறார்!

கதையில் ஆங்காங்கே இருக்கும் நல்ல கருத்துக்கள் கதாசிரியரின் சமுக நல அக்கறையையும் காட்டுகிறது.

தையை பற்றி புவனேஸ்வரி என்ன சொல்கிறார்கள் என்றால்,

வில் ஏந்தி கீர்த்தி பெறவில்லை

அர்ஜுனன் சொல் ஏந்தி அவளின் மனம் கொய்ந்தான்..

மனம் திருடியவனுக்கு சுபிட்சம் தர

தன்னை தந்தனள் சுபத்ரா..

 

காதலனாய் காவியம் பாடியவன்,

அவளுக்கு காவலனாகவும் தோன்றினான்

அன்னையை இழந்தாள், தந்தையை இழந்தாள்,

அன்னையாகும் ஸ்தானமும் இழந்தாள்,

இழந்த அனைத்தையும் மீட்டு தந்தான் அவன்

மீராவின் கிருஷ்ணனாய்!

 

கண்டதும் காதல் கொண்டான்

அவளின் துயரெனும் வில்லை உடைத்தான்

பவித்ரத்தின் பாசுரம் உணர்த்தி

கைபிடித்தான் ஜானகியின் ரகுராமன்

 

கற்பனையில் ஜனித்த குழந்தை,

வலைத்தளத்தில் தவழ்ந்து

புத்தகமாய் நடைப்போட்டு இன்று

சில்சீ வாசகர்களின் உள்ளத்தில் செல்லப்பிள்ளை!

கன்னத்தில் முத்தமிட்டு,

உள்ளத்தில் ஏந்தி ரசித்த அன்பு நெஞ்சங்களுக்கு

பெற்றவளின் நன்றி கடன்கள்!

- புவனேஸ்வரி

 

வேறென்ன வேணும் நீ போதுமே.... அன்பான பார்வை...!

 

துவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'வேறென்ன வேணும் நீ போதுமே' பக்கம் சென்று படியுங்கள். 

 

 


* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016

 

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.