(Reading time: 5 - 10 minutes)

From my desk - September 14 - Edition 05

Dear friends,

Happy September!

We had a very eventful August ;-) And I am very delighted about September too!

Entire onus of August was the Independence Day contest! And we were excited to see the enthusiasm of the contestants!

Thanks a bunch for that!

From my desk

Now its announcement time…

Series:

1. New series starting 11th September.

Most of you might have already seen the announcement for the new series. This series is a family oriented story touching a sensitive topic.

All the very best RR for this series.

 

2. Enakku pidithavai to resume!

This was a series started and stopped long time back. Now Nanthini is all set to resume it. This will be an ad-hoc series and will be updated as per her convenience.

 

3. Change in series schedule

All series written by Vinodha (aka Bindu Vinod) are converted to ad hoc series since she is busy with her new professional responsibilities.

But don't worry, she has promised to keep all her stories rolling with regular updates.

All the very best madam for your new role. 

 

4. Chillzee award

We have made small modification to our current Chillzee award program.

One winner will be selected based on the regular comments section.

Writer selected chillzion award

The second winner will be chosen by one of our writers.

Every month the ball will be passed to one of the writer… And while announcing the winner you will know the writer who chose the winner and the reason for the same.

We believe this makes it more interesting. Your feedback is most welcome :-)

 

My heart felt special thanks to all our August month contributors:

Vathsala, Buvaneswari Kalaiselvi, Vinodha (Bindu Vinod), Murugalakshmi, Madhu, Vindhya, Health Chill team, Swetha, Parimala Kathir (Kayal Vizhy), Preethi, Saki, Priya, Bala, Sangeetha, KK, Sandhya, Vasanthi, Meena, Vaidegi Aravamuthan, Rajagopalan, Malathi, Nandini S, Saranya, Femina Gaffar, Gajalakshmi, Aathira, Padmavathy K, Shini, Sumathi Palanisamy, Keerthana, Sudhakar, Anu.R, Meera, Valarmathi, Jaya Shree and Chillzee News team.

Before I conclude this edition, I would like to share a small write-up. My Tamil is a bit rusty so please pardon my mistakes if any!

சின்ன வயசில எப்போதுமே எனக்கு மொட்டை மாடியில் உலாவுவது ரொம்ப பிடிக்கும்... இதுக்கு நிறைய காரணம் உண்டு, அந்த பின் மாலை நேர காத்து, வானம் இன்னும் நிறைய... படிக்க நான் எப்போதுமே மாடியை தான் விரும்புவேன்... இப்படி படிக்கும் போது ஒரு விஷயம் எனக்கு புரியாத புதிராக இருந்தது...

சில தினங்கள் நிறைய காக்கைகள் கூட்டமா வந்து ஒரே சத்தம் போடும். என்னடா ஏன் இப்படி சத்தம் போடுதுன்னு நானும் ஆச்சர்யமா பார்ப்பேன்... ஆனால் காரணம் தெரியலை. ஒரு இருபது முப்பது நிமிஷம் ஒரே கா கா கான்னு சத்தம் மட்டுமே கேக்கும்...

நாம எல்லாம் Curious George விட ஆர்வக் கோளாறு உள்ளவங்களாச்சே, விட்ருவோமா, அம்மா அப்பா கிட்ட கேட்டேன்... அப்பா சொன்னார், அது சின்ன காக்கை குஞ்சு முதல் முதலா பறக்கும் போது அதுக்கு சொல்லி கொடுக்க, உற்சாகமூட்ட, காவலா இருக்கன்னு...

எனக்கு ஒரே ஆச்சர்யமா இருந்தது, அத்தனை காக்காவும் உறவா இருக்க முடியாது, எல்லோரும் நட்புக்களாகவும் இருக்க முடியாது, ஆனாலும் அந்த சின்ன குஞ்சு பறக்க உற்சாகமூட்டவும், பாதுகாப்புக்காகவும் எவ்வளவு பெரிய படையே வருதேன்னு...

மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லி தரனுமான்னு சொல்வாங்க, காக்கை குஞ்சுக்கு வேற மாதிரி போலும்! இந்த சின்ன பாப்பா பறக்கும் போது கொஞ்சம் ஸ்லிப் ஆச்சுன்னு வைங்க, மனுஷங்களா இருந்தா இந்த இடத்தில் வேற மாதிரி ரியாக்ட் செய்வாங்க ஆனால் நம்ம காக்காங்க இருக்கே என்ன பண்ணும் தெரியுமா, உடனே இன்னும் சத்தமா கா கான்னு கோஷம் போடுங்க... எப்படி இருந்தாலும் அந்த பாப்பா பறக்கும் இருபது – முப்பது நிமிடங்கள் கா கா சத்தம் தான் எதிரொலிக்கும்...

இந்த விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது... அது முதல் காக்கைகளின் ரசிகையே ஆகிட்டேன்னு வச்சுக்கோங்களேன்! சில சமயம் என் குழந்தைக்கு சாதம் ஊட்டும் போது, ஒரே ஒரு செகண்ட் என்னோட கவனம் திரும்ப காத்திருந்து, அலேக்கா வீட்டு பக்கம் சுத்தும் காக்கா தட்டில் இருக்கும் முட்டையை தூக்கிட்டு போய்டும் smile எனக்கு எரிச்சல் வந்தாலும் கோபம் வராது அந்த அளவுக்கு மேலே சொன்ன விஷயத்தால் காக்காவுடைய ரசிகை நான்...

ஐந்தறிவுள்ள ஜீவனுக்குள் தான் எத்தனை ஒற்றுமை... எப்படி ஒரு சின்ன குழந்தைக்கு சப்போர்ட் செய்றாங்க!

ப்போ ஏன் இதை சொல்றேன்னு கேட்குறீங்களா எல்லாம் விஷயமா தான்!

நம்ம சைட்டில் கதை எழுதும் மக்கள் ஒவ்வொருத்தரும் தங்களுடைய ஆசையை நிறைவேத்திக்க மெல்ல சிறகை விரித்து பறக்க துடிக்கும் அந்த சின்ன சிறு காக்கை குஞ்சை போல தான்...

அவங்க எல்லோரும் வானை முட்டும் அளவுக்கு வானத்தில் சிறகடிச்சு பறக்கனும்னா முதல் முதல் அடி எடுத்து வைக்கும் போது அந்த உற்சாகமூட்டும் சுழல் வேணும்... சிறகை விரிச்சு பறக்கும் போது, லேசா ஸ்லிப் ஆகுற மாதிரி இருந்தா இன்னும் கொஞ்சம் தட்டி கொடுத்து, பறக்க வைக்கணும்...

சுருக்கமா சொன்னால் அது போல ஒரு உற்சாகமான, ஊக்கம் அளிக்கும் சுழலை தந்து, பலருக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளி கொண்டு வரும் மந்திரத்தை செய்ய தான் நாங்க ஆசை படுறோம்... அது தான் chillzeeயோட objective, motto, goal எல்லாமே!

அதை செய்ய உங்க எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை smile

தை, கவிதை, கட்டுரை படித்தால் முடிந்த அளவில் கமண்ட்ஸ் போஸ்ட் செய்ங்க!

கேள்வி கேட்பதா இருந்தால் தட்டிக் கொடுப்பது போல் கேளுங்க... மற்ற கருத்துக்களுக்கும் அதே போல தான்...

எழுதுபவர்கள், படிப்பவர்கள் எல்லோருமே சக மனிதர்கள் தானே! ஒவ்வொருவர் கருத்து ஒவ்வொரு விதம், ரசனை ஒவ்வொரு விதம்... நான் வேலைக்கு சேர்ந்த புதுசில் தங்கி இருந்த ஹாஸ்டலில் என்னோட இருந்த ரூம்மேட் பாலகுமாரனின் ரசிகை. நான் அப்போ படு தீவிர ரமணிச்சந்திரன் ரசிகை.

நான் நைட்டெல்லாம் விழுந்து விழுந்து படிக்குறதை பார்த்துட்டு நாலஞ்சு புக் வாங்கி பார்த்துட்டு அவ சொன்னாள் இது என்ன இது இவங்க கதையில் எல்லாம் ஹீரோ எப்போது பளிச்சிடும் புன்னகையோட இருக்கார், ஏதாவது பேஸ்ட் விளம்பரத்தில் நடிக்குறவங்க போலன்னு... எனக்கு செம கோபம் வந்தது, ஆனால் நான் வேற எதுவும் சொல்லலை, ஏன்னா சொன்னது அவளோட கருத்து! அது என்னோடதாகவே இருக்கணும்னு அவசியம் இல்லையே.. காதல் / குடும்ப கதைகள் படிப்பது அதுவும் ரமணிச்சந்திரனின் ஸ்டைலில் படிப்பது எனக்கு பிடிக்கும் அதையே தான் அவள் செய்யனும் அதே போல் இருந்தால் தான் நல்லா இருக்கும்னு நான் சொல்ல முடியாதே...

அவளோட தொல்லை தாங்க முடியாமல் நானும் பாலகுமாரனின் கதைகள் படிக்க ஆரம்பித்தேன்... இரண்டு பேரும் அப்பப்போ அடிச்சுக்குவோம், ஆனால் இரண்டு டைப் கதையையும் மெல்ல ரசித்து படிக்க ஆரம்பிச்சிட்டோம்... ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்குன்னு அப்போ தான் எதோ கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது!

It’s all upto us and all in our mind set smile

ன்னாடா இப்படி போயும் போயும் காக்காவோட கம்பேர் செய்து சொல்றேன்னு பீல் செய்யாதீங்க, அந்த காக்காவெல்லாம் பார்த்து நாம கத்துக்க வேண்டிய நிறைய விஷயம் இருக்கு wink

Hope you liked that one! அறுவையா இருந்தால் கூட படிச்சிட்டு ரொம்ப திட்டாதீங்க, கொஞ்சமா, அதுவும் மனசுக்குள்ள பக்கத்துல இருக்கவங்களுக்கு கேக்காத மாதிரி திட்டுங்க சரியா? ஆனால் நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுதுல (புரியலைனாலும் ஆமான்னு சொல்லிடுங்க, இல்லைன்னு சொன்னால் heart break ஆகிடும்ப்பா tongue-out )

Enjoy and have fun!

 

Shanthi...

www.Chillzee.in

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.