(Reading time: 6 - 11 minutes)

From my desk - December 2016 - Edition 11

From my desk

ன்பு chillzee மக்களே,

லம் நலமறிய ஆவல்!

சிறுகதைப் போட்டி களைக் கட்டிக் கொண்டிருக்கும் நேரம்...! எல்லோரும் என்ஜாய் செய்றீங்கன்னு நம்புறேன்...!

போட்டி பற்றிய விபரங்கள் தெரிந்துக் கொள்ள இந்த அறிவிப்பை பாருங்கள்.

2016 முடிய போகிறது என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வருடம் வந்ததும் தெரியலை, போனதும் தெரியலை!

ஆனால் புது வருடம் புது புது நலன்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு 2017ஐ வரவேற்போம்...

இந்த முறையும் சில புதிய அறிவிப்புகளோடு வந்திருக்கிறேன்...

 

தொடர்கதை பகுதி

முதல் முக்கியமான அறிவிப்பு, தொடர்கதை பகுதி பற்றியது.

தற்காலிகமாக புதிய தொடர்கள் தொடங்குவதை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும்.

ஜனவரி 1 முதல் தொடர்கதை பகுதி மீண்டும் அனைவருக்காகவும் திறக்கப் படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்கதை பகுதி பற்றிய அறிவிப்பு பார்த்து ஈமெயிலில் ஏன்? என்ன? வேண்டாம்... என்றெல்லாம் கருத்து தெரிவித்த அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.

தவிர்க்க இயலாத காரணங்களால் ஒவ்வொருவருக்கும் தனியாக பதில் அனுப்ப இயலவில்லை. மன்னிக்கவும்!

டந்ததை பற்றி மேலே பேசாமல் விட்டு விட்டு re-open ஆக போகும் தொடர்கதை பகுதி பற்றி பேசுவோம்.

புதிய தொடர்கள் தொடங்க இருக்கும் முன் தேவைகளில் (Pre-requisites) ஒரே ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தொடர் தொடங்க ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்பது மூன்று கதைகள் எழுத வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தை நாங்கள் கேட்பது எங்களுக்காக அல்ல, எழுதும் ஆர்வம் இருக்கும் உங்களுக்காக தான்.

ஒரு பத்திரிக்கையில் சிறுகதை மற்றும் நாவல் பற்றி கேட்டதற்கு அழகாக பதில் சொல்லி இருந்தார்கள்.

ஃபவுன்டேஷன் இல்லாமல் கட்டடம் கட்ட இயலாது, அதே போல தான் சிறுகதை எழுதாமல் நாவல் எழுதுவதும் சரியானது அல்ல!

தொடர் எழுதுவதற்கு உங்களை நீங்களே தயார் செய்துக் கொள்ள இந்த சிறுகதைகள் உதவும்.

இதை பற்றி உங்களுக்கு கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் எங்களுக்கு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் போல புதிய எழுத்தாளர்களை அன்புடன் இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்! ஆர்வம் உள்ளவர்கள் விபரங்களுக்கு இந்த அறிவிப்பை பாருங்கள் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள்.

 

ஃபேஸ்புக்

ரண்டாவது அறிவிப்பு ஃபேஸ்புக் குறித்தது.

இன்றைய காலக்கட்டத்தில் social media network வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது.

எனவே நாங்களும் அதை நம் எழுத்தாளர்களுக்காக பயன் படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.

ஜனவரி 1 முதல் தொடர்கதை எழுத்தாளர்களின் ஃபேஸ்புக் பக்கம், / ஃப்ரோபைல் அவர்களின் அத்தியாயம் பற்றி பேஸ்புக்கில் பகிர்ந்துக் கொள்ள படும் போது tag செய்யப் படும்.

Pre-requisites

Tag செய்யப்படும் பேஸ்புக் profile / பக்கத்தில் chillzee பக்கத்தை லைக் செய்திருக்க வேண்டும்.

குறைந்தது ஐந்து அத்தியாயங்களாவது இடைவெளி இல்லாமல் chillzeeயில் எழுதி இருக்க வேண்டும்

ந்த புதிய திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தொடர் கதை எழுத்தாளர்கள் எங்களின் பக்கத்தை லைக் செய்து விட்டு, உங்களின் பேஸ்புக் page / profile idயை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சலில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

தொடர்கதை பகுதியில் ஆரம்பமாகும் இந்த திட்டத்தை, மெல்ல மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம்.

 

Chillzee அவார்ட்ஸ்!

Chillzee அவார்ட்ஸ் பற்றிய அறிவிப்பை ஏற்கனவே நிறைய பேர் பார்த்திருப்பீர்கள். இதுவரை படிக்காதவர்கள் இப்போது இங்கே சென்று படியுங்கள்.

தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்தவர்களுக்கு vote செய்யுங்கள்.

நாங்களே தேர்வு செய்தால் autonomous ஆக இருக்கும் என்பதால் தான் உங்களையும் கலந்துக் கொள்ள சொல்கிறோம்.

ஏற்கனவே விபரங்களை பகிர்ந்துக் கொண்ட, இனிமேல் பகிர போகும் அனைவருக்கும் என் நன்றிகள்.

 

Most active Chillzee user

Most active Chillzee user “Chillzee reader celebrity’ என்ற புதிய பெயரில் மீண்டும் வந்திருக்கிறது. அதை பற்றிய விபரங்கள் தெரிந்துக் கொள்ள இந்த அறிவிப்பை படியுங்கள்.

நம்முடைய ஒவ்வொரு வரி கருத்தும், எழுதுபவர்களை மேலே மேலே கொண்டு செல்லும் ஒரு படிக்கல் என்பதை நினைவில் கொண்டு, கதைகள் / கவிதைகள் / கட்டுரைகள் படிக்கும் போது மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

 

ந்த மாதத்திற்கான updates அவ்வளவு தான். இதை தவிர chillzeeயில் எழுதுபவர்கள் மற்றும் எழுத விரும்புபவர்களுக்கு நம் chillzee டீம் பற்றி சொல்ல விரும்புகிறேன். எங்களில் ஒருவராக இருப்பவர்கள் என்பதால் டீமை பற்றி நீங்கள் அனைவரும் தெரிந்துக் கொள்வது நல்லது.

Chillzee டீம்

Chillzeeயில் core team ஆக இருப்பவர்கள் கொஞ்சம் மாறுப்பட்டவர்கள்.

ஒரு ரூபாய்க்கு வேலை செய்ய சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு சளைக்காமல் வேலை செய்பவர்கள்.

இது ஏன் என்றால் Chillzee அவர்களின் மனதிற்கு நெருக்கமானது. ஜஸ்ட் ஒரு வேலை, ஏதோ ஒரு site என்றில்லாமல் ownership & responsibility எடுத்து நம்ம site என்ற உணர்வோடு எதையும் செய்பவர்கள்.

இதை நீங்கள் பல் வேறு வடிவங்களில் நேரடியாகவே பார்த்திருக்கலாம்.

Chillzee தளம் மற்ற siteகளில் இருந்து மாறுப்பட்டு இருக்க இது தான் முக்கிய காரணம்.

சில சமயம் கொஞ்சமாக over-do செய்தாலும், நீங்கள் ஒன்றை உறுதியாக நம்பலாம். chillzeeக்கு உதவும் விதத்திலும், எழுதுபவர்களை ஊக்குவித்து முன்னேற்றும் விதத்தில் மட்டுமே இவர்கள் எதையும் செய்வார்கள். இதை நீங்கள் உறுதியாக நம்பலாம்!

இதை நீங்கள் எப்படி பார்க்க வேண்டும் என்றும் சொல்கிறேன்

எழுத்தின் மீது இருக்கும் உங்களின் ஆர்வம் என்பது உங்களின் love. அதை உங்களோடு சேர்த்து வைக்க இணைக்கும் திருமணம் போன்ற ஒரு மீடியம் தான் chillzee site. அதன் கூடவே வரும் கூடுதல் உறவுகள் தான் நம்ம டீம் மக்களும். கொஞ்சம் possessivenes, அன்பு, பாசம் எல்லாம் நிறைந்தவர்கள்... ஆனால் harmless, good people.

சரியா மக்களே!

Chillzee டீமை பற்றி நீங்களும் தெரிந்துக் கொண்டீர்கள் smile 

Chillzee எங்களுக்கு குழந்தை போல... chillzeeக்கு ஏழு வயதாகி விட்டது என்றாலும், இன்னும் பத்து பன்னிரெண்டு ஆண்டுகள் போனாலும் கூட, எல்லா அம்மாக்களையும் போல எங்களுக்கு chillzee எப்போதும் chubby and cute little பாப்பா தான்.

எனவே தொடர்ந்து pamper செய்துக் கொண்டே தான் இருப்போம் wink

ந்த blade ஒரு மாதத்திற்கு தாங்கும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்.

மறுப்பிறவி ஒன்று இருக்கிறதா இல்லையா என்பது நமக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும், இன்று இருக்கும் உறவுகள், நட்புக்கள், நினைவுகள் எதுவும் மீண்டும் கிடைக்கக போவதில்லை...

எனவே இந்த கிடைபதற்க்கரிய பிறவியை கோபம், சண்டை, மனஸ்தாபம் என்று வீணாக்காமல், அதை எல்லாம் தூக்கி போட்டு விட்டு, நட்புடன், அன்புடன் இருப்போம்.

வரும் ஆண்டு உங்களுக்கு மிக சிறந்த ஆண்டாக அமைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

 

மீண்டும் அடுத்த மாதம் உங்களை மேலும் பல பல இனிய செய்திகளுடன் சந்திக்கிறேன்.

Shanthi...

www.Chillzee.in

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.