(Reading time: 1 - 2 minutes)

அதிசய உலகம் - 03. 175 வருடமாக ஒலித்துக்கொண்டிருக்கும் மணி - கிருத்திகா

Wow news

கதைகளை படிக்கும் போது இப்படி எல்லாம் நடக்குமா என சில சமயம் வியக்கிறோம்...! நடக்கவே நடக்காது என்று அடித்து சொல்கிறோம்...!

ஆனால் நிஜ உலகில் கதைகளில் வரும் கற்பனை சம்பவங்களை விட நம்ப முடியாத பல பல அதிசயங்கள் நடக்க தான் செய்கின்றன....

அது போன்ற சில சம்பவங்களை தான் இந்த தொடரில் தொகுத்தளிக்க போகிறோம்..

வியப்படைய தயாராகுங்கள்...!

க்ஸ்போர்ட  கல்லூரியில் ஒரு மணி உள்ளது இது மின்கலத்தினால் (பேட்டரி) இயங்கக்கூடியது .

இது 1840 முதல் தொடர்ந்து இயங்கி வருகிறது . இந்த மின்கலம் எதனால் செய்யப்பட்டது என்பதற்கான அனுமானங்கள் இருந்தாலும் தெளிவான விபரங்கள் இல்லை. 

ஒரு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் இந்த மணி இயந்திரம் அடிப்பதை நிறுத்தினால் மட்டுமே அதை பிரித்து எதனால் செய்யப்பட்டது என்று உறுதியாக சொல்ல முடியும்.

இதுவரை ஆயிரம் கோடிக்கும் அதிகமான முறை அடித்திருக்கும் இந்த மணி, கின்னஸிலும் இடம் பெற்றிருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bell

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.