(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - உன்னி அப்பம் - ரஞ்சி

unniyappam

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு - 1 கிலோ

தேங்காய் - 1/2 மூடி

வெல்லம் - 3/4 கிலோ

ஏலக்காய் - 10

மஞ்சள் வாழைப்பழம் - 1

எண்ணெய் - தேவையான அளவு

unniyappam Vessel

ன்னி அப்பம் செய்ய மேலே படத்தில் இருப்பதை போன்ற பனியார (அல்லது) உன்னியப்ப பாத்திரம் வேண்டும்.

செய்முறை

  1. ஏலக்காயை தூளாக பொடித்து வைக்கவும்.
  2. தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  3. வெல்லத்தையும் தூள் செய்யவும்.
  4. வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு நன்கு குழைய அரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் பச்சரசி மாவையும், ஏலக்காய் தூளையும் சேர்த்து கலக்கி தனியாக வைக்கவும்.
  6. வேறு ஒரு பாத்திரத்தில் தூள் செய்த வெல்லத்தை போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  7. வெல்லம் கரையும் வரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து கிளறி விடவும்.
  8. வெல்லம் கரைந்து பாகான பிறகு இறக்கி விடவும்.
  9. காய்ச்சிய வெல்லப் பாகை சூடாக இருக்கும் போதே, மேலே கலந்து வைத்திருக்கும் பச்சரசி மாவு கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியால் கிளறி விடவும்.
  10. அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழத்தையும், தேங்காய் துண்டுகளையும்  கலவையில் சேர்த்து, இட்லி மாவு பதம் வரும் வரை கிளறவும்.
  11. பின் குழி பனியார (அல்லது உன்னியப்பம்) பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.
  12. பாத்திரம் சூடானதும், அந்த பாத்திர குழிகளில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும் (அப்போது தான் பலகாரம் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்)
  13. எண்ணெய் சூடான உடன் கரைத்து வைத்திருக்கும் மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.
  14. அடுப்பை மிதமான தீயில் வைத்து, உன்னி அப்பம் ஒரு புறம் வெந்ததும், மெல்ல மறுபக்கம் திருப்பி போடவும்.
  15. உன்னி அப்பம் இரண்டு பக்கமும் பொன்னிற பிரவுன் கலரில் வந்தவுடன் எடுக்கவும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.