(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - அச்சு முறுக்கு - ரஞ்சி

achuMurukku

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு - 1 கிலோ

தேங்காய் - 1

மைதா - 200 கிராம்

சர்க்கரை - 3/4 கிலோ

ஏலக்காய் - 10

முட்டை - 2

எண்ணெய் - தேவையான அளவு

achuMurukkuAchu

ச்சு முறுக்கு செய்ய மேலே படத்தில் இருப்பதை போன்ற அச்சு வேண்டும்.

செய்முறை

  1. தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்
    1. தேங்காய் பால் எடுக்கும் முறை:

      1. தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
      2. அரைத்த விழுதை பிழிந்து அதிலிருந்து பாலை தனியே எடுக்கவும்.
  2. ஏலக்காயை தூளாக பொடித்து வைக்கவும்.
  3. முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும் (பீட் செய்யவும்)
  4. தேங்காய் பாலுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  5. பின் ஏலக்காய் தூள், ஜீரகம், முட்டை ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும்.
  6. பச்சரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.
  7. இப்போது மைதா மாவையும் மெதுவாக கட்டி ஆகாமல் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கி வைக்கவும்.
  8. அரை மணி நேரம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  9. எண்ணெய் சூடானதும் முறுக்கு செய்யும் அச்சை எண்ணெயில் போட்டு, அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் அளவிற்கு மூழ்குவது போல் போட்டு எடுத்து எண்ணெய்யில் போடவும்.
    1. குறிப்பு: அச்சு மாவில் முழுவதுமாக மூழ்குவது போல் போட்டால் அச்சை எண்ணெய்யில் வைக்கும் போது முறுக்கு அச்சில் இருந்து கழன்று வராது.
  10. சிறிது நேரத்தில் அச்சை அசைத்து அசைத்து விடவும் (மெல்ல எண்ணெய் மேலே தெறிக்காத வண்ணம் கவனமாக அசைக்கவும்)
  11. முறுக்கு அச்சில் இருந்து கழன்று விடும்.
  12. அச்சை எண்ணெய்யில் வைத்து முன்பு செய்தது போல் மீண்டும் அடுத்த முறுக்கிற்கு செய்யவும்.
  13. முறுக்கு சிறிதாக தங்க நிறம் ஆன உடன் எடுத்து விடவும்.
  14. சுவையான அச்சு முறுக்கு தயார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.