(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - அரிசி வடாம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ

பச்சை மிளகாய் - 200 கிராம்

எலுமிச்சை - 3

உப்பு - 100 கிராம்

பெருங்காயத்தூள் - 1.5 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

  1. பச்சரிசியை சுத்தம் செய்து 8 - 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் அதை கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  3. பச்சை மிளகாய், பெருங்காயம் அம்ற்றும் உப்பை மிக்ஸியில் ஒன்றாக போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  4. குக்கரை அடுப்பில் வைத்து, அரைத்த விழுதுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. ஒரு கொதி வந்த உடன், அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை சேர்த்து கிளறி விடவும்.
  6. ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரை மூடி வேக விட்டு, ஒரு விசில் வந்த உடன் அடுப்பில் இருந்து எடுத்து வைக்கவும்.
  7. மறுநாள் கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  8. பின் கலவையை முறுக்கு அச்சில் நிரப்பி வெள்ளை ஈரத்துணியில் பிழிந்து நன்றாக வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
  9. இதை ஒரு ஏர் டைட் கண்டெயினரில் வைத்திருந்து, தேவை படும் பொழுது எண்ணெயில் பொரித்து சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.