(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - அரிசி முறுக்கு - ரஞ்சி

murukku

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ

புழுங்கல் அரிசி - 200 கிராம்

உளுத்தம் பருப்பு - 400 கிராம்

ஓமம் - 4 டீஸ்பூன்

ஜீரகம் - 4 டீஸ்பூன்

எள் - 50 கிராம்

டால்டா - 200 கிராம்

ஆப்பசோடா - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

பெருங்காயம் - 20 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

murukku Press

முறுக்கு செய்ய மேலே படத்தில் இருப்பதை போன்ற அல்லது வெரி விதமான பிழியும் கருவி வேண்டும்.

செய்முறை

  1. உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  2. பச்சரிசியை நன்கு கழுவி, தண்ணீர் வடிகட்டி, வெயிலில் காய விடவும்.
  3. ஓமத்தையும், புழுங்கல் அரிசியையும் தனி தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. பச்சரிசி நன்கு காய்ந்ததும், அதனுடன் ஜீரகம், வறுத்து எடுத்து வைத்திருக்கும் ஓமம், உளுத்தம் பருப்பு, புழுங்கல் அரிசி அனைத்தையும் சேர்த்து, அரவை மில்லில் நன்கு 'நைஸாக' அரைத்துக் கொள்ளவும்.
  5. அரைத்த மாவை பேப்பரில் கொட்டி சிறிது நேரம் காய விடவும். பின் மாவை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி வைக்கவும்.
  6. அடுப்பில் பாத்திரத்தை வைத்து அது சூடான உடன், டால்டாவை கொட்டி காய்ச்சவும்.
  7. பின் சூடாக இருக்கும் டால்டாவை அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவில் ஊற்றவும்.
  8. எள், உப்பு, ஆப்பசோடாவையும் மாவில் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு முறுக்கு பிழியும் பருவத்திற்கு வரும் வரை வேண்டிய தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  9. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
  10. எண்ணெய் சூடாகும் நேரத்தில், மாவை பிழியும் அச்சில் போட்டு பிழிந்து வைக்கவும்.
  11. எண்ணெய் காய்ந்ததும், பிழிந்து வைத்திருக்கும் மாவை எண்ணெய்யில் போடவும்.
    1. வாணலியின் அளவை பொறுத்து ஒரே நேரத்தில் பல முறுக்குகள் எண்ணெய்யில் போடலாம்.
  12. முறுக்கு ஒருபுறம் வெந்ததும், கம்பியினால் திருப்பி போடவும். மறுபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.
  13. சுவையான கருக் முருக் முறுக்கு தயார்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.