Chillzee சமையல் குறிப்புகள் - பீட்ரூட் சூப் - ஜான்சி
தேவையான பொருட்கள்
இரண்டு பீட்ரூட் ( மீடியம் சைஸ்)
ஒரு வெங்காயம்
இரண்டு அல்லது மூன்று மிளகாய்
ஒரு தக்காளி
கொத்துமல்லித் தழை
உப்பு
எண்ணெய்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் சிறிதளவு
செய்முறை
* பீட்ரூட்டை வேக வைத்து, தோல் அகற்றி, வெட்டி, மிக்ஸியில் அரைத்து கூழாக்கவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி,எண்ணை சூடானதும் பொடியாக அரிந்த வெங்காயம், மிளகாயை இட்டு வதக்கவும்.
* இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
* சற்று வதங்கியப் பின் பொடியாக அரிந்த தக்காளியை இட்டு வதக்கவும்.
* உப்புச் சேர்க்கவும்.
* நன்கு வதங்கியவுடன் பீட்ரூட் கூழைச் சேர்க்கவும்.
* தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
* உப்புச் சரிப்பார்க்கவும்.
* அரிந்த கொத்துமல்லித் தழையைச் சேர்த்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
பீட்ரூட் இரும்புச் சத்து மிக்கது.ஆனால், அதை அப்படியே சாப்பிட பலருக்கும் பிடிப்பதில்லை. இப்படி சூப் செய்து கொடுத்தால் அனைவருக்கும் பிடிக்கும்.