Chillzee சமையல் குறிப்புகள் - மணத்தக்காளி வத்தல் குழம்பு - நந்தினி
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 10
மணத்தக்காளி வத்தல் – 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
புளி – சின்ன எலுமிச்சை அளவு
உப்பு ,கருவேப்பிலை-தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
மிளகு - 10
சீரகம் - அரை ஸ்பூன்
தக்காளி - 1
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
செய்முறை
- தேங்காய் துருவல், மிளகு , சீரகம் மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்
- கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், கடுகு ,வெந்தயம் ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
- பின் மணத்தக்காளி வத்தலை போட்டு நன்கு வறுக்கவும்.
- பின் சின்னவெங்காயம், நசுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.
- அதன் பின் அனைத்து தூள்களையும் சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாசனை போய் தூள் நன்கு கலந்த பிறகு, தக்காளியை சேர்த்து வதக்கவும்
- தக்காளி நன்கு வெந்து கலந்த உடன், புளியை கரைத்து ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் கலவையையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்
- சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்!