Chillzee சமையல் குறிப்புகள் - ஜவ்வரிசி தோசை - கிருத்திகா
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
ஜவ்வரிசி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெங்காயம் - சிறிதளவு ( சின்ன வெங்காயம் )
பச்சை மிளகாய் - 2-3
இஞ்சி - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பில்லை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் , கடுகு - தேவையான அளவு
செய்முறை
அரிசி , ஜவ்வரிசி , உளுந்தை தனி தனி யாக ஊறவைக்கவும் ...
ஜவ்வரிசி பெரிய பாத்திரத்தில் போட்டு ஊறவைக்கவும் ..
நன்கு ஊறியதும் அரிசி பின் ஜவ்வரிசி போட்டு அரைக்கவும் , உளுந்தை தனியாக அரைத்து சேர்க்கவும் ...
நல்ல வார்ம் இடத்தில 2 மணி நேரம் வைக்கவும் ..
பின் மேற்கூறியவற்றை தாளித்து கலந்து ... தோசை வார்க்கவும்
பொன்னிறமானதும் தக்காளி /புதினா சட்னியுடன் பரிமாறவும் .
கம கம தோசை ரெடி ..