(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 03. ஃபிரெஞ்ச் டோஸ்ட் - நந்தினி

 

சில நேரங்களில் அவசரமாக சமையல் செய்ய வேண்டி இருக்கலாம் (உதாரணமாக எதிர்பாராத விருந்தினர் வருகை). அது போன்ற நேரங்களில் நமக்கு கை கொடுக்கும் அவசர சமையல் குறிப்புகளை ஒரே இடத்தில தொகுத்தளித்தால் அனைவருக்கும் உதவும்.

தொடரை நான் தொடங்கினாலும், யார் வேண்டுமென்றாலும் தங்களின் கைவசம் இருக்கும் இது போன்ற அவசர சமையல் குறிப்புகளை பகிர்ந்துக் கொள்ளலாம். தெரிந்த, பழகிய எல்லா விதமான குறிப்புகளும் வரவேற்கப் படுகின்றன smile

தேவையான பொருட்கள்

ஃப்ரெட் - 8 - 10

பால் - 2/3 கப் [ 160 ml ]

முட்டை - 4

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - 1 ஸ்பூன் [ தேவையென்றால்]

பட்டர் - 1.5 டேபிள் ஸ்பூன்

உப்பு - 1/4 ஸ்பூன்

 

செய்முறை

  1. ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு அடிக்கவும்.
  2. பின் மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  3. அனைத்து பொருட்களும் கலந்து சீராக வந்த பின்பு, ஒரு ப்ரெட்டை எடுத்து அண்ட் கலவையில் இரண்டு பக்கமும் முக்கவும்.
  4. Panல் பட்டரை போட்டு உருக்கவும்.
  5. பின் பால் கலவையில் முக்கி எடுத்த ப்ரெட்டை போட்டு வேக விடவும்.
  6. சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும்.
  7. இரண்டு பக்கமும் தங்க நிறமான உடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

நான் கொடுத்திருக்கும் சர்க்கரை அளவிற்கு அதிக இனிப்பு தெரியாது. உங்களுக்கு இனிப்பாக வேண்டுமென்றால் மேலும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை பரிமாறும் போது மேலே போடி செய்த சர்க்கரையையை தூவியும் உண்ணலாம்.

இது சுவையான, எளிதான ஒரு உணவு. செய்து பாருங்கள்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.