(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 06. 10 நிமிட பால்கோவா - நந்தினி

சில நேரங்களில் அவசரமாக சமையல் செய்ய வேண்டி இருக்கலாம் (உதாரணமாக எதிர்பாராத விருந்தினர் வருகை). அது போன்ற நேரங்களில் நமக்கு கை கொடுக்கும் அவசர சமையல் குறிப்புகளை ஒரே இடத்தில தொகுத்தளித்தால் அனைவருக்கும் உதவும்.

தொடரை நான் தொடங்கினாலும், யார் வேண்டுமென்றாலும் தங்களின் கைவசம் இருக்கும் இது போன்ற அவசர சமையல் குறிப்புகளை பகிர்ந்துக் கொள்ளலாம். தெரிந்த, பழகிய எல்லா விதமான குறிப்புகளும் வரவேற்கப் படுகின்றன smile

தேவையான பொருட்கள்

மில்க்மெய்ட் (அல்லது) வேறு ஸ்வீட்டென்ட் கன்டென்ஸ்ட் மில்க் - 1 டின்

தயிர் - 1 ஸ்பூன்

நெய் - 1 ஸ்பூன்

ஏலக்காய் - 1

 

செய்முறை

  1. ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
  2. கன்டென்ஸ்ட் மில்க், தயிர், நெய் அனைத்தையும் ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
  3. அதை மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடம் டைம் செட் செய்து வைக்கவும். இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து கிளறி விட்டு மீண்டும் வைக்கவும்.
  4. இப்பொழுது ஏலக்காய் பொடி தூவி நன்கு கலந்து மேலும் 30 வினாடிகள் மைக்ரோவேவில் வைக்கவும்.
  5. சுவையான பால்கோவா தயார்!

வீட்டிற்கு வந்த ஒரு பிரெண்டிற்காக செய்த பால்கோவா பிரெண்ட்ஸ். போட்டோ எடுக்க நான் மொபைல் எடுப்பதற்குள் பாதிக்கு மேல் காலி ஆகி விட்டது laughing நீங்க செய்ய வாய்ப்பு கிடைத்தால் சுவை எப்படி இருந்ததுன்னு மறக்காமல் சொல்லுங்க...! 

மைக்ரோவேவ் இல்லாமல் பாலகோவா செய்ய இந்த ரெசிபியை பாருங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.