(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 07. வெங்காய சட்னி - நந்தினி

Onion chutney

சில நேரங்களில் அவசரமாக சமையல் செய்ய வேண்டி இருக்கலாம் (உதாரணமாக எதிர்பாராத விருந்தினர் வருகை). அது போன்ற நேரங்களில் நமக்கு கை கொடுக்கும் அவசர சமையல் குறிப்புகளை ஒரே இடத்தில தொகுத்தளித்தால் அனைவருக்கும் உதவும்.

தொடரை நான் தொடங்கினாலும், யார் வேண்டுமென்றாலும் தங்களின் கைவசம் இருக்கும் இது போன்ற அவசர சமையல் குறிப்புகளை பகிர்ந்துக் கொள்ளலாம். தெரிந்த, பழகிய எல்லா விதமான குறிப்புகளும் வரவேற்கப் படுகின்றன smile

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 15 - 20 அல்லது ஒரு பெரிய வெங்காயம்

மிளகாய் - 3

புளி - சிறிய அளவு

கறுவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவைக்கு

கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு

 

செய்முறை

  1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் மிளகாயை வதக்கவும்.
  2. வதக்கியதை ஆற வைத்து விட்டு, புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தேவைக்கு தண்ணீரையும் சேர்க்கவும்.
  3. இப்போது தாளிக்க கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  4. இதை அரைத்த வெங்காய கலவையில் ஊற்றவும்.
  5. சுவையான வெங்காய சட்னி தயார்! இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். சட்டென செய்யக் கூடிய ஆரோக்கியமான, சுவையான சட்னி.

{kunena_discuss:794}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.