(Reading time: 5 - 10 minutes)

1. எனக்கு பிடித்தவை - பொன்னியின் செல்வன்

 

 

பொன்னியின் செல்வனை போல் என் மனம் கவர்ந்த புத்தகம் வேறு எதுவும் இல்லை. என்னை போலவே பலரும் இதைசொல்ல கேள்வி பட்டிருக்கிறேன். இந்த கதையைநான் எத்தனை முறைபடித்திருக்கிறேன் என்று எனக்கே தெரியாது ஒருவேளை 100 அல்லது 1000 முறை படித்திருப்பேன். ஆனால் இன்றும் அந்த கதையை கையில் எடுக்கும் பொது அதே ஆர்வம் தோன்றுகிறது. கல்கி அவர்களின் நடையில், வார்த்தைகளில் என்ன மாயம் இருக்கிறதோ தெரிய வில்லை, பொன்னியின் செல்வன் படிக்கும் ஒவ்வொருவரின் மனதையும் கொள்ளை கொள்கிறது.

நான் பொன்னியின் செல்வனை முதல் முதலில் 20 ஆண்டுகளுக்கு முன் படித்தேன். அதற்கு முன்பேஎனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்க தான் செய்தது, ஆனாலும் இந்த கதை தான் என் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் கருவியாய் இருந்தது என்பதை மறுக்கமுடியாது.

இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்த கதாபத்திரங்கள் மூன்று - குந்தவை, வந்திய தேவன், நந்தினி. இந்த கதையை படித்த போது பெரும்பாலான ஒய்வு நேரங்களில் இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் என் எண்ணத்தை நிறைந்திருக்கும். சில சமயம் என்ன இது பைத்தியகாரத்தனம்எனஎன்னை நானேதிட்டி கொண்டதும் உண்டு.ஆனால் என் தோழி இந்த கதையை படித்து விட்டு அவள் கனவில் வந்திய தேவனும் குந்தவையும் வந்ததாக சொன்ன போது தான் என்னை போல் பல பைத்தியங்கள் உண்டு என்பதை அறிந்து கொண்டேன்J

அதன் பின் ஒவ்வொரு பள்ளி பரீட்சை விடுமுறையிலும் பொன்னியின் செல்வனை படிப்பது எனக்கு பழக்கம் ஆனது.நந்தினிக்கும் குந்தவைக்கும் நடுவே நடக்கும் பனி போரும், வந்திய தேவனின் சாகசங்களும், ஆழ்வார்க்கடியானின்பேச்சும், கல்கிஅவர்கள் நடு நடுவே விவரிக்கும்சரித்திர கதைகளும்எனக்கு எத்தனை முறை படித்தும் அலுப்பே தட்டாமல்செய்தன.

பல வருடங்களுக்கு பிறகு, சென்ற மாதம்மீண்டும் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன அதிசயம்! இப்போதும் கூட என் ஆர்வத்திலும்கதை ஓட்டத்தில் இருக்கும்சுவாரசியத்திலும்சிறிதும்குறைவில்லை. இன்னும் இருபது வருடம் கழித்து படித்தாலும் கூட பொன்னியின் செல்வன் இதே போல தான் சுவாரசியமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கல்கி அவர்களின் படைப்புகளில் இது masterpiece என்றே சொல்ல வேண்டும்.

இந்த கதையில் எனக்கு பிடித்த மறக்க முடியாத சில பகுதிகளை பார்ப்போம்.

 
  1. முதல் பாகம்:

 

  • ஆடிபெருக்கு என்னும்ஒரு திருநாளை இந்த கதை படிக்கும் முன் நான் அறிந்திருக்கவில்லை. கல்கி அவர்கள் கதைக்கு நம்மையும்,வந்தியதேவனைநமக்கும் அறிமுகம் செய்யும் முதல் அத்தியாயம்போல்சிறப்பான அறிமுகம் பல கதாநாயகர்களுக்குகிடைப்பதில்லை
  • வந்தியத்தேவன்கடம்பூர் மாளிகையில் சிற்றரசர்களின்சதி திட்டத்தைபற்றி தெரிந்துகொண்ட பின் பல்லக்கில் இருப்பதுயார் என்றுஅவனுக்கு மட்டும்அல்லநம் அனைவருக்கும்கூட ஆர்வம் அதிகரிப்பதில்அதிசயம் இல்லை.
  • வந்தியத்தேவன்குந்தவையைமுதன்முறை குடந்தைஜோதிடர் வீட்டில் சந்திப்பதும் பின் ஜோதிடரிடம்அவளைபற்றி தெரிந்து கொள்ளமுயற்சிப்பதும்அதற்குஜோதிடர் தரும் பதில்களையும்இப்போதுநினைத்தாலும்சிரிப்பு வருகிறது
  • வந்தியதேவன்தஞ்சாவூர் கோட்டையில்செய்யும் சாகசங்களும் அதிசயமானவைதான்!
  • அதித்த கரிகாலன்நந்தினியைபற்றி கூறும்சிறு வயதுசம்பவங்கள்...
  • ஆனால்இதில்குந்தவை நந்தினியைகண்டுபொறாமை பட்டதாகசொல்லுவதுதான் அவ்வளவாகபிடிக்கவில்லை.... என்ன செய்வதுகதாநாயகியும் தவறுசெய்யலாம்என எண்ணும் மன பக்குவம்எனக்கு இன்னும்வரவில்லை!

 

  1. இரண்டாம்பாகம்
  • பூங்குழலியின்கொள்ளி வாய்பிசாசுகாதலர்கள்!!!
  • குந்தவைக்கும் நந்தினிக்கும் நடுவில் நடக்கும் பனி போர். நந்தினி குந்தவையிடம் வந்திய தேவன் இறந்திருக்கலாம் என கூறும்போதுகோபமாகதான் வருகிறது!
  • வந்தியதேவனும்அருள்மொழிவர்மனும்சந்திக்கும் அந்த சண்டைஇடும் பகுதி
  • அருள்மொழிவர்மன் கூறும் மந்தாகினியின் கதை!
  • வந்தியதேவன் நடு கடலில்செய்யும் சாகசங்கள்J

 

  1. மூன்றாம் பாகம்
  • பூங்குழலி அருள்மொழிவர்மன் மீது வைத்திருக்கும் அன்பையும்,புத்தவிஹாரத்தில்அருள்மொழிவர்மனைவிட்டுபிரிந்து வருவதையும் சொல்லும் பகுதி
  • கொல்லரையில் வந்தியதேவனின் கனவு
  • வந்தியதேவனுக்கும்நந்தினிக்கும் நடுவில் நடக்கும் இரண்டு சந்திப்புகள்... நந்தினியின்மனதைமறைமுகமாகசொல்லும் கல்கியின்சிறப்பே தனி தான்.
  • குந்தவை வந்தியதேவனிடம்சிறைசாலையில் தன் மனதில் உள்ளதைவெளிசொல்லும் பகுதி

 

  1. நான்காம்பாகம்
  • மலையமான் கரிகாலனுக்கு சொல்லும் அறிவுரையும் அதற்கு கரிகாலன் சொல்லும் பதிலும்!!!!!!
  • சுந்தர சோழரும்மந்தாகினியும் சந்திக்கும்பகுதி
  • கடம்பூர் மாளிகையின்ரகசியசுரங்க பாதையில்வந்தியதேவன் செய்யும் சாகசங்கள்J
  • மணிமேகலை!!!!!!!
  • நந்தினி கரிகாலனிடம் வந்திய தேவனை பற்றி தவறாக சொல்வதும்,அதற்கு கல்கி அவர்கள் தரும் விளக்கமும்!!!
  • நந்தினி நல்லவளோகெட்டவளோஆனால் பரிதாபத்துக்குரியவள்என்பதை கல்கி அவர்கள் நமக்குஎடுத்துரைக்கும்பகுதி

 

  1. ஐந்தாம் பாகம்
  • அதித்த கரிகாலனின்மரணம்
  • மந்தாகினியின் தியாகம்
  • அருள்மொழிவர்மனின்சமயோசிதஅறிவு
  • தியாகசிகரமாய்அருள்மொழி வர்மன்சேந்தன் அமுதனுக்குசிம்மாசனத்தைவிட்டு கொடுப்பது
  • வந்தியதேவனும்குந்தவையும்சந்திக்கும் பழையாறைகாட்சி
  • மணிமேகலையின் மரணம்

 

பல பல நூற்றாண்டுகளுக்குமுன் நடந்ததை நம் கண் முன் கொண்டுவந்திருக்கும் கல்கியின் இந்தநாவல்எல்லா விதத்திலும் சிறப்பானது தான். சமீபத்தில்வெளி வந்தஆயிரத்தில் ஒருவன்படத்தை பார்த்தபோது எனக்கு கோபமாக வந்தது!!! சோழமன்னன்தோற்பதாகமட்டுமல்லாமல்மனதை பாதிக்கும்விதத்தில்அமைந்திருந்தஅந்த கிளைமாக்ஸ்காட்சிகள்ஏனடாஇந்த படத்தை பார்க்கவந்தோம்என்று எண்ண வைப்பதாகஇருந்தது. ஆனால் உண்மையில்யோசித்து பார்த்தால் பொன்னியின் செல்வன் படித்து படித்து நானும்சோழ நாட்டுபிரஜையாகவேமாறி விட்டேனோஎன்று தான் சந்தேக பட வேண்டி இருக்கிறது.

 

இன்னும் கூட பொன்னியின் செல்வனை பற்றி எழுதி கொண்டே போகலாம் தான்.............

 

அடுத்த பகுதியில் எனக்கு பிடித்த மற்றொரு கதையுடன் உங்களை சந்திக்கிறேன்

நந்தினி

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.