கோலிவுட் கிசு கிசு - 'கோடி'க்கு மாறிய நடிகை
மலையாள கரையோரம் இருந்து வந்து தமிழில் நான்கே படங்கள் நடித்து முடித்திருந்தாலும் சம்பளத்தை ஒரு கோடிக்கு உயர்த்தி விட்டாராம் அந்த கீர்த்தியான நடிகை.
நடித்த நாகு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படங்கள் என்பதுடன், அடுத்து இளைய சேனாதிபதியுடன் ஜோடியாக நடிப்பதும் இந்த திடீர் சம்பள உயர்வுக்கு காரணம் என பேசிக் கொள்கிறார்கள்.
சமீபத்தில் நடிகையை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை துவங்கிய ரத்தினமான தயாரிப்பாளர் நடிகையின் புதிய சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி ஆகி விட்டார் என்பது கூடுதல் செய்தி.
காற்றுள்ளே போதே தூற்றிக் கொள்ள நினைக்கிறார் போலும்!