(Reading time: 2 - 4 minutes)

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Gethu

Music - Harris Jayaraj

Lyrics - Thamarai

Singers - Haricharan, Shashaa Tirupati

Actors - Udhayanidhi Stalin, Amy Jackson

Released in 2016


 

Watch it in You Tube:

 

Lyrics:

தேன் காற்று வந்தது
தேம்பவானியாய் கொஞ்சுது
உன்னை என்னை தீண்ட தானே வந்தது
அது என்னை மட்டும் ஏனோ தீண்டி சென்றது

தேன் காற்று வந்தது
தேம்பவானியாய் கொஞ்சுது
உன்னை மட்டும் தீண்டி போக வந்தது
அது என்னை என்றோ
தீண்டி தீண்டி கொன்றது

இந்த ஒரு நாள் வருமா
இல்லை ஒடிந்தே விழுமா
என பல நாள் பல நாள்
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா

நான் பனியா பனியா
நீ வெயிலின் துளியா
நான் கரையும் கரையும்
வரை நீ வரை நீ
வாகை தொடவா

தேன் காற்று வந்தது
தேம்பவானியாய் கொஞ்சுது
உன்னை மட்டும் தீண்டி போக வந்தது
அது என்னை என்றோ
தீண்டி தீண்டி கொன்றது
என் கனவு கனக மனம்
உலக உலக கணம்
எடையிட முடியாது
இங்கு நான் உனதெனில்
ஆகணும் எனில்
முதுகில் கோது

உன் அழகு அழகு முகம்
பழக பழக சுகம்
ஒரு துளி திகட்டாது
உன் அன்பெனும் குணம்
ஆயிரம் வரம்
நிகரும் எது

இருவரும் நடந்தால்
தரையினில் இருகால்
சுமப்பது நீ அல்லவா

தேன் காற்று வந்தது
தேம்பவானியாய் கொஞ்சுது
உன்னை என்னை தீண்ட தானே வந்தது
அது என்னை மட்டும் ஏனோ தீண்டி சென்றது

நான் அலையும் அலையும் அலை
கரையை அடைவதில்லை
கடலிலும் இடமில்லை
ஒரு காதலன் நிலை
மாபெரும் அலை
முடிவே இல்லை

நான் பொழியும் பொழியும் மழை
பெருகும் பொழுது பிழை
திரும்பிட வழி இல்லை
ஒரு காதலி நிலை
மழையெனும் கலை
விளையாட்டு இல்லை


நீ விடி விளக்கு
முகத்திரை விளக்கு
அதன் பின் நான் கிறுக்கு


தேன் காற்று வந்தது
தேம்பவானியாய் கொஞ்சுது
உன்னை மட்டும் தீண்டி போக வந்தது
அது என்னை என்றோ
தீண்டி தீண்டி கொன்றது

இந்த ஒரு நாள் வருமா
இல்லை ஒடிந்தே விழுமா
என பல நாள் பல நாள்
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா

நான் பனியா பனியா
நீ வெயிலின் துளியா
நான் கரையும் கரையும்
வரை நீ வரை நீ
வாகை தொடவா

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.