(Reading time: 4 - 7 minutes)

கிரீடம் - நெட்ஃப்ளிக்ஸ் [ The Crown - Netflix ]

The Crown

மீப நாட்களாக கிடைத்திருக்கும் ஒய்வு நேரத்தில் நான் பார்க்கும் புது சீரீஸ் The Crown. யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறட்டுமே என்று அந்த தொடரின் கதையை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன் smile

Princess, Queen என்றாலே நாம் அனைவரும் சந்தோஷமான வாழ்வை கற்பனை செய்துக் கொள்கிறோம். ஆனால் நிஜ வாழ்வில் ஒரு இளவரசியாக, ராணியாக இருப்பது சுலபமானதா? அந்த வாழ்வில் சந்தோஷம் மட்டுமே பூத்து குலுங்குமா?

ஒரு இளவரசியால் சராசரி பெண்ணை போல மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக, தோழியாக இருக்க முடியுமா?

இந்த The Crown தொடர் இங்கிலாந்தின் மஹாராணி எலிசபெத் அவர்களின் இளவயது வாழ்க்கையை பற்றிய தொடர். இந்த தொடர் நம்முடைய கேள்விகக்ளுக்கான பதில்களை வழங்கும் என்று நம்புவோம்.

முதல் அத்தியாயம்

1947

ங்கிலாந்தில் ஆறாவது ஜார்ஜ் மன்னராக இருக்கும் காலம்...

இங்கிலாந்தின் கடற் படையில் பணியாற்றும் கிரேக் & டென்மார்க் இளவரசரான பிலிப், தன்னுடைய பிறந்த நாட்டின் இளவரசு பட்டதை கை விட்டு விட்டு, இங்கிலாந்தின் குடிமகனாக மாறி இளவரசி எலிசபெத்தை திருமணம் செய்துக் கொள்கிறார்.

திருமணத்திற்கு பிறகு அந்த இளம் தம்பதிகள், பிலிப் கடற் படையில் லெப்டினன்ட்-கமாண்டரக பணி புரியும் தென் ஐரோப்ப தீவான மால்ட்டாவில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சார்லஸ், ஆனி என இரண்டு குழந்தைகளும் பிறக்கிறார்கள்.

1951

ங்கிலாந்தில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறார் என்பத்தி மூன்று வயதாகும் வின்ஸ்டன் சர்ச்சில். சர்ச்சில் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார் மன்னர்.

ந்தோஷமாக சென்றுக் கொண்டிருக்கும் எலிசபெத் - பிலிப் வாழ்வில் திடீரென லண்டனில் இருந்து வரும் செய்தி சின்ன பதற்றத்தை கொடுக்கிறது. எலிசபெத்தின் தந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை நடக்க போவதாக செய்தி வர, இருவரும் குழந்தைகளுடன் லண்டனுக்கு பயணம் செய்கிறார்கள்.

மன்னர் ஜார்ஜிற்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடை பெறுகிறது. ஆனாலும் ஜார்ஜின் உடல் நிலையில் அதிக முன்னேற்றம் இல்லை. 

மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதை கண்டு பிடிக்கிறார்கள். மேலும் அவர் இன்னும் சில மாதங்களே உயிருடன் இருப்பார் என்பதையும் சொல்கிறார்கள்.

திகைத்து போகும் ஜார்ஜ் தனக்கு பின் மஹாராணியாக எலிசபெத்தை தயார் செய்ய தனக்கு குறைந்த நாட்கள் மட்டுமே இருப்பதை அறிகிறார்.

ஜார்ஜின் உடல் நலம் குறித்த விஷயத்தை சர்ச்சில் தவிர மஹாராஜாவின் குடும்பத்தினரிடமும் கூட பகிர்ந்துக் கொள்ளாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

லிசபெத்தின் தங்கை மார்கரெட்டிற்கு அரண்மனையில் அரச குடும்ப உதவியாளராக இருக்கும் ராணுவ உயர் அதிகாரி பீட்டர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.

தங்கையின் நடவடிக்கைகளை கவனிக்கும் எலிசபெத், திருமணமான பீட்டர் மீது மார்கரெட் ஈர்ப்புக் கொள்வது சரி இல்லை என ரகசியமாக அறிவுறுத்துகிறார்.

லிசபெத்தை மகாராணியாக பொறுப்பு வகிக்க தயார் செய்ய, தான் செல்ல வேண்டிய காமன்வெல்த் தேசங்களுக்கான சுற்றுபயணத்திற்கு எலிசபெத்தை செல்ல சொல்கிறார் ஜார்ஜ். 

தந்தை இன்னும் முழுவதுமாக உடல் நலம் தேறாததால் தன்னை போக சொல்வதாக நினைக்கும் எலிசபெத், தன் கணவரிடம் அனுமதி கேட்கிறாள். குழந்தைகளை விட்டு மாதக் கணக்கில் பிரிந்திருக்க வேண்டுமே என்று கவலை படுகிறார் பிலிப். ஆனாலும் மனைவிக்காக விட்டுக் கொடுக்கிறார்.

இவர்களின் உரையாடலை தொலைவில் இருந்து கவனிக்கும் ஜார்ஜ், பிலிப்பிடம் இளவரசியான எலிசபெத்தை கவனித்துக் கொள்வதும் , பாதுகாப்பதும் பிலிப்பின் கடமை என்று அறிவுரை வழங்குகிறார். அதை பிலிப்பும் ஏற்றுக் கொள்கிறார்.

கொஞ்சம் மெதுவாக நகரும் தொடர் என்றாலும் சுவாரசியமான களம் என்பதால் தொடர் ஆர்வத்தை தூண்டுவதாகவே இருக்கிறது.

The Queen படம் பார்த்தது முதலே இங்கிலாந்த் அரச குடும்பத்தினர் அதுவும் குறிப்பாக எலிசபெத் ராணியை பற்றிய கதை, தொடர், ஆவணப் படங்கள் பார்ப்பது பிடிக்கும் என்பதால், நான் தொடர்ந்து பார்க்க போகும் தொடர் இது.

நீங்களும் பார்த்திருந்தால் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

விரைவில் இரண்டாவது அத்தியாயத்தின் கதை சுருக்கத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

{kunena_discuss:1084}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.