(Reading time: 6 - 11 minutes)

உங்கள் வருங்கால கணவர் உங்களுக்கு சரியானவர் தானா என அலசி ஆராய 12 டிப்ஸ்!

திருமணம் என்பது வாழ்க்கையில் மிக மிக பெரிய விஷயம்! வாழ்க்கையில் உங்கள் பெற்றோருடன் செலவிடும் நாட்களை விட உங்கள் கணவருடன் தான் அதிக நாட்கள் செலவிடுவீர்கள்.

முன்பு போல் இல்லாமல் இப்போதெல்லாம் பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களிலும், பெரும்பாலும் பெண்ணிடமும் விருப்பம் கேட்ட பின்பே முடிவு எடுக்கிறார்கள்.

பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணம் என்றாலும், காதல் திருமணம் என்றாலும், உங்களின் இன்னொரு பாதி உங்களுக்கு ஏற்றவர் தானா என தெரிந்துக் கொள்ள சில டிப்ஸ்....

 

Kalyana Kanavugal01. அன்பை வெளிபடுத்துபவரா?

திருமணமான பின் பொதுவாக பெரும்பாலானோர் சொல்லும் கம்ப்ளெயின்ட், அவர் என்னிடம் அன்பாக இல்லை என்பது தான்...

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று பிஸியாக இருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் இதுபோன்ற புகார்கள் மிக அதிகம்....

தான் தன் கணவனின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம்.... அவருக்கு தன் மீது பிரியம் அதிகம்... என்றெல்லாம் கணவர் வாயால் கேட்க பெண்களுக்கு ஆசை / ஆர்வம் அதிகம்....

பேச கிடைக்கும் சில மணித்துளிகளில் உங்களவர் உங்களிடம் தன் அன்பை தன் பேச்சில் வெளிபடுத்துகிறாரா???

 

02. உங்களை தன் துணையாக பெறுவதில் பெருமை படுபவரா?

ண்பர்களிடமோ, உறவினர்களிடமோ உங்களை அறிமுகப் படுத்தும் போது, நீங்கள் அழகாக வெட்கப் படும் அளவிற்கு உங்களின் சிறிய பெரிய திறமைகள், பண்புகள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் பெரிது படுத்தி பெருமையாக சொல்பவரா....????

 

03. உங்களுக்கு உறுத்துணையாக நிற்பவரா???

வ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான லட்சியம் இருக்கும்... திருமணம் எனும் பந்தத்தால் தன் லட்சியம் தடை பட்டு விடக் கூடாது என நினைக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்...

உங்களவரிடம் உங்கள் மனதில் இருக்கும் லட்சியத்தை பற்றி வெளிப்படையாக பேசி அதற்கு அவரிடம் ஆதரவு உண்டா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

04. நம்பிகையானவரா???

ணவன் – மனைவி எனும் வாழ்க்கை முழுவதுற்குமான பந்தத்தில் பரஸ்பர நம்பிக்கை என்பது மிக மிக முக்கியம்...

ஆனால் நம்பிக்கை என்பது சட்டென்று ஏற்பட்டு விடுவது இல்லை... அது புரிதலில் தொடங்கி அன்பினால் மெல்ல ஏற்படுவது...

இதை உங்களை போலவே அவரும் புரிந்து வைத்திருக்கிறாரா என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

05. சிறிதளவேனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவரா?

திருமணம் என்பது ஒரு பெண்ணை பொறுத்தவரை முழுக்க முழுக்க புதிய சுழலில் தொடங்கப் படும் வாழ்க்கை...

இதில் கணவரின் உறவினர் தொடங்கி, அவர் வீட்டு பழக்க வழக்கங்கள் வரை புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பது அந்த பெண்ணின் மீதிருக்கும் எதிர்பார்ப்பு...

இது அவ்வளவு எளிதான விஷயமில்லை... நீங்கள் கொஞ்சமேனும் விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும்....

பெரும்பாலான பெண்கள் தங்களை போலவே கணவரும் சில பல விஷயங்களில் தனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு....

திருமணத்திற்கு முன் இதை பற்றி எல்லாம் முழுமையாக பேசி தெரிந்துக் கொள்ள முடியாது என்றாலும், உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப உங்களவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவரா என்பதை புரிந்துக் கொள்ள பாருங்கள்...

 

06. வெளித் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவரா?

ழகில்லாதவர் என்று யாருமில்லை... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான அழகு இருக்க தான் செய்கிறது....

உங்களவர் வார்த்தைகளால் மட்டுமில்லாமல், உங்களை நடத்தும் விதத்தில், பார்க்கும் விதத்தில் என உங்களை அழகானவள் என மனதார எண்ண வைக்கிறாரா???

திருமணத்திற்கு பின் முழு நாளும் உங்களால் மேக்கப்புடன் இருக்க இயலாது....

எனவே அவருக்காக நீங்கள் பிரத்தியேகமாக ஒப்பனை செய்துக் கொள்ளும் போது உங்களை பாராட்டுபவர், நீங்கள் சாதாரண தோற்றத்தில் இருந்தாலும், ஏன் வேர்த்து எண்ணெய் வடியும் தோற்றத்தில் இருந்தாலும் அதே ஆர்வத்தை காட்டுகிறாரா என்பதையும் கவனியுங்கள்.

 

07. நீங்கள் சொல்லாமலே உங்களின் விருப்பங்களை புரிந்துக் கொள்பவரா???

வாழ்க்கையில் பெரிய பெரிய விஷயங்களை விட சின்ன சின்ன நிகழ்வுகள் தான் மகிழ்ச்சியை தரக் கூடியவை...

கணவன், தான் மீண்டும் மீண்டும் சொல்லாமலே தனக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று ஆசை படாத பெண்ணே இல்லை என்று சொல்லலாம்...

உங்களவரிடம் அதற்கான ‘glimpse’ இருக்கிறதா என்று பாருங்கள்....

உதாரணமாக, உங்களுக்கு ரோஜா பிடிக்கும் என்று சொன்னால், ஒரு முறையேனும் அதை உங்களுக்கு வாங்கி தருகிறாரா.... உங்களுக்கு சாக்லேட் பிடிக்கும் என்று தெரிந்த பின் அதை உங்களுக்கு நினைவாக வாங்கி வருகிறாரா....

 

08. ஊடலிலும் மரியாதை தருபவரா???

சிறு சிறு மோதலேனும் இல்லாத உறவே இல்லை என்று சொல்லலாம்...

உங்களுக்குள் ஊடல் ஏற்பட்டால், உங்களை பற்றி தெரிந்தவர் என்பதால் உங்களின் பலவீனத்தை சொல்லி இகழாமல், அவமானப் படுத்தாமல், அதிகமாக புண் படுத்தாமல் இருக்கிறாரா?

நூறு சதவிகிதம் perfect ஆனவர்கள் யாருமில்லை...

திருமணத்திற்கு பின் நீங்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ தவறு செய்வது இயல்பு தான்... அந்நேரங்களில், மனதளவிலோ, உணர்வளவிலோ, ஏன் உடலளவிலோ உங்களை புண் படுத்தாதவராக உங்கள் கணவர் இருப்பது நல்லது

எனவே இதை பற்றி தெரிந்துக் கொள்வது பிற்காலத்தில் நீங்கள் கண்ணீர் சிந்தாமல் இருக்க உதவும்.

அதே போல் தன் பக்கம் தவறு இருப்பது தெரிந்துக் கொண்டால் பந்தா இல்லாமல் ‘சாரி’ சொல்கிறவரா என்றும் கவனியுங்கள்....

தவறே செய்யாவிட்டாலும், உங்கள் இருவரின் ஊடல் தீர்ந்த பின், உங்களிடம் சற்றே கோபமாக பேசியதை பற்றி விளக்கமளிப்பவரா....?

 

09. உங்களின் விருப்பு வெறுப்புக்கு மதிப்பளிப்பவரா?

வரின் விருப்பு வெறுப்புகளை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதை போலவே, உங்களின் விருப்பு வெறுப்புகளையும் புரிந்துக், கொண்டு அதற்கும் மதிப்பளிப்பவரா?

உதாரணமாக, ஹோட்டலுக்கு சென்றிருக்கும் போது அவருக்கு பிடிக்கும் என்று உங்களுக்கும் சேர்த்து பிரைட் ரைஸ் ஆர்டர் செய்யாமல், உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை கேட்டு பின் ஆர்டர் செய்கிறாரா என்று கவனியுங்கள்...

இது சின்ன உதாரணமே...

சினிமா, இசை, விளையாட்டு, புத்தகம் என அனைத்திலும் உங்களின் விருப்பு வெறுப்புக்கு மதிப்பளிப்பவரா?

 

10. நேர்மையானவரா???

ங்களிடம் சொல்லும் சத்தியங்களை நிறைவேற்றுபவர் தானா???

இல்லையென்றாலும் அதை நேர்மையாக உங்களிடம் ஏற்றுக் கொள்ளவேனும் செய்கிறாரா?

உண்மை இல்லாத இடத்தில நம்பிக்கை ஏற்படுவது கடினம்... நம்பிக்கை இல்லாத அன்பு நிறைவானதாக இருக்க முடியாது...

 

11. உங்களுக்கு தெரியாததை மிகை படுத்தாமல் இருப்பவரா?

ங்களுக்கு தெரியாத விஷயங்களை பற்றி சொல்லி உங்களை கேலி, கிண்டல் செய்யாமல் அதை இயல்பாக ஏற்றுக் கொண்டு, உங்களுக்கு விருப்பமிருந்தால் அதை உங்களுக்கு பொறுமையாக எடுத்து சொல்லும் பண்புள்ளவரா?

 

12. உங்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்பவரா?

நீங்கள் மூட் அவுட்டாகவோ, வேறு எந்த காரணத்திற்க்காகவோ கோபமாக இருக்கும் போது, அதை புரிந்துக் கொண்டு, உங்களை இயல்பாக்க முயற்சி எடுப்பவரா???


 

து உங்களின் வாழ்க்கை.... சிந்தித்து முடிவெடுங்கள்... சந்தோஷம் பொங்க வாழுங்கள்.... smile

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.