(Reading time: 4 - 8 minutes)

காதலர் தினத்தில் உங்கள் கணவரை அசத்த சில டிப்ஸ்!

Valentines day with Kids

ரு தோழி சிறிய குழந்தைகள் இருப்பதால் இந்த வருடம் வேலன்டைன்ஸ் டே எனும் காதலர் தினத்தில் ஒரு ஸ்பெஷலும் இல்லை என்றார்.

குழந்தைகள் இருந்தால் காதலர் தினம் சிறப்பில்லாமல் போக வேண்டுமா என்ன?

குடும்பம், பொறுப்புகள், வேலை என போய் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் இருக்கும் காதலை, நேசத்தை spice-up செய்ய கல்யாணத்திற்கு பிறகும் கூட இது போன்ற தினங்கள் தேவை தான்.

ரு சராசரி இந்திய குடும்பத்தில் மிகவும் ஹை-ஃபையாக போகாமல் சிம்பிளாக உங்கள் கணவரை காதலர் தினத்தில் அசத்த இதோ சில எளிய டிப்ஸ்.

குடும்ப டின்னர்

Valentines day with Kids

குழந்தைகளை ஏமாற்றி நீங்கள் ரொமான்ஸ் செய்வதெல்லாம் எளிதில்லை தான். எனவே அவர்களையும் இந்த கலாட்டாவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முறைக்காமல் மேலே படியுங்கள்

உங்கள் கணவருடன் தனியாக நேரம் செலவிட முடியவில்லை என்றாலும் குடும்பம் முழுவதும் சேர்ந்து நேரம் செலவிடுவதும் கூட ஸ்பெஷல் தான்.

டி.வி, பி.சி, லேப்டாப், மொபைல் எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆப் / ஆப் செய்து விட்டு கணவன், மனைவி குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக கொஞ்சம் ரிலாக்ஸ்டாக டின்னர் உண்ணுங்கள்.

சின்ன சின்ன போனஸ் டிப்ஸ்

டின்னர் ஐட்டம் அனைத்தும் உங்கள் கணவருக்கு பிடித்ததாக இருந்தால் இன்னும் ஸ்பெஷல்.

ற்ற நாட்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட சிம்பிளாக உங்கள் டைனிங் ரூம் அல்லது டேபிளை அலங்கரியுங்கள்... ஒன்றிரண்டு பலூன்கள் கூட போதும்...

சாதாரண டின்னராக இல்லாமல் மெழுகுவர்த்தி துணையோடு கேன்டில் லைட் டின்னராக்குங்கள்... உங்களுக்கு மட்டுமில்லை,உங்கள் குழந்தைகளுக்கும் இது பிடிக்கும்.

டின்னரை டல் அடிக்காமல் இருக்க பிக்னிக் ஆக மாற்றுங்கள்... லிவிங் ரூம் / ஹாலில் ஒரு படுக்கை விரிப்பை விரித்து உணவுகளை பரிமாறி கதை பேசி உண்ணுங்கள்....

குடும்ப சமையல்

Valentines day with Kids

குடும்பத்தோடு ஒன்றாக சாப்பிடுவது சரி, ஒரு மாற்றத்திற்கு குடும்பமாக சமையல் செய்து பாருங்கள்.

இதெல்லாம் நடப்பதா?

அப்புறம் யார் சமையலறையை சுத்தம் செய்து அடுக்கி வைப்பது?

போன்ற கேள்விகளை தூக்கி போடுங்கள்...

இந்த கூட்டு வேலை போல மகிழ்ச்சியான நேரத்தை உருவாக்குவது கடினம்.

இது உங்கள் இருவருக்குள் நல்ல ஒரு பிணைப்பையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் இது போன்ற கூட்டு குழுவாக வேலை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தும்.

பின்னோக்கி செல்லுங்கள்!

Valentines day with Kids

டைசியாக எப்போது உங்கள் திருமண விடியோ அல்லது போட்டோ ஆல்பத்தை பார்த்தீர்கள்???

நினைவில்லையா???

கவலை படாதீர்கள். இந்த காதலர் தினத்திற்கு அதை தூசு தட்டி எடுங்கள்.

ஒரு வருடம் ஆகி இருந்தாலும் பத்து வருடம் ஆகி இருந்தாலும், இந்த போட்டோ, விடியோ பார்ப்பது போல் உண்டா!!!!

சினிமா காமெடி போல இதை வேற மீண்டும் பார்க்க வேண்டுமா என்று உங்கள் கணவர் நக்கல் செய்வார் என்று யோசிக்கிறீர்களா???
அப்படி நக்கல் / நையாண்டி செய்யும் கணவரிடம் அன்பை spice-up செய்ய முயற்சி செய்வீர்களா என்ன wink!

அந்த திருமண சேலை... வெட்கம்... பழைய நினைவுகள்.... கூடவே இப்போது உங்கள் குழந்தைகள் கேட்கும் கேள்விகள் என இந்த நேரம் கட்டாயம் உங்கள் இருவரையும் ரீ-சார்ஜ் செய்யும்.

எழுதுங்கள்...

Valentines day with Kids

டுங்கள் ஒரு பேப்பரை... உங்கள் கணவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன... அவரை எந்த அளவிற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எழுதுங்கள்....

கவிதையாக எழுத தெரியா [முடியா] விட்டாலும் பரவாயில்லை... உங்கள் மனதை எழுதுங்கள்.

அதை உங்கள் கணவரிடம் கொடுங்கள்...

இது போல் உங்கள் அன்பை வெளிபடுத்துவது உங்கள் கணவர் சந்தோஷமாக இருக்கிறாரா என தெரிந்துக் கொள்ள சில டிப்ஸ்ல் சொல்லி இருப்பது போல உங்கள் இருவருக்கு இடையில் இருக்கும் அன்பை அதிகமாக்கும்.

அது மட்டுமல்லாமல் உங்கள் கணவரின் குறைகளை தாண்டி அவருடைய நிறைகளை காணவும் இந்த முயற்சி உதவும்...

சின்ன போனஸ் டிப்ஸ்

உங்கள் காதல் கடிதத்தை நேரே அவரிடம் கொடுக்காமல் அவருடைய சட்டை பாக்கெட்டில், லஞ்ச் பாக்ஸில், இல்லை பைக் கீ / கார் ஸ்டீயரிங்கில் என வையுங்கள்...

Valentines day
இல்லை இதை கடிதமாக இல்லாமல் சிறு சிறு துணுக்குகளாக ஆங்காங்கே மறைத்து வைத்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்...

டி.வி டைம்

Valentines day with Kids

டுங்கள் அந்த ரிமோட்டை, போடுங்கள் அந்த டி.வி ஸ்விட்சை!

நம் ஊரில் இருக்கு பல பல சானல்களில் படங்கள், பாடல்கள், நிகழ்ச்சிகள் என உங்களுக்கு பிடித்ததாக ஏதாவது இருக்கும். அதில் எதையாவது தேர்வு செய்து அலுக்கும் வரை கதை பேசி பேசி பார்த்து மகிழுங்கள்.

குழந்தைகளிடம் இருந்து ரிமோட்டை வாங்குவது கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும், அழுது வடியாததாக, அனைவரும் ரசிக்க கூடியதாக தேர்வு செய்யுங்கள்.


ங்கள் இருவருக்கும் இடையேயான அன்பை ஒவ்வொரு நாளும் பகிர்ந்துக் கொண்டால் இது போல் ஸ்பெஷலாக அன்பை spice-up செய்ய வேண்டிய அவசியமில்லையே.

தினம் தினம் எப்படி உங்களிருவருக்காக என நேரம் செலவிடுவது என்றும் இருவருமாய் யோசியுங்கள்....

மகிழ்ச்சியாக வாழுங்கள்....!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.