(Reading time: 3 - 5 minutes)

மனைவிளை கடுப்பேற்றும் கணவன்மார்களின் 9 பழக்கங்கள்

Husband Wife

1. உடைகள், ஈரமான டவல் எதையும் கட்டில், ஷோஃபா என்று எங்கேயாவது போடுவது!

Husband Wife

ந்திய ஆண்களிடம் பெரிதும் காணப்படும் பழக்கம் இது.

எத்தனை முறை சொன்னாலும், திட்டினாலும் (கத்தினாலும்) ஹுஹும்... ஒரு மாற்றமும் பார்க்க முடியாத ஒரு பழக்கம்.

மனைவிகளை அதிகமாக கடுப்பாக்கும் ஒரு பழக்கமும் கூட!!!!

 

2. சனி ஞாயிறு என்றாலே தூங்க மட்டுமே தான்!

Husband Wife

வெள்ளிக்கிழமை முடிந்து வார இறுதி நாட்கள் தொடங்குகிறதோ இல்லையோ, இவர்களின் தூக்க பயணம் தொடங்கி விடும்.

ஆனால் கிரிக்கெட்டிற்கு மட்டும் விதி விலக்கு உண்டு!

 

3. சாப்பிட அழைத்தால் 'வரேன்' என்ற பதில் மட்டும் வரும், ஆளை பார்க்க முடியாது!

Husband Wife

னைவி சூப்பர் 'குக்'கோ இல்லையோ, இவர்களுக்கு சாப்பிட அழைக்கும் நேரத்தில் தான் ஈ-மெயில் பார்க்க வேண்டி இருக்கும்... டிவி  பார்க்க வேண்டி இருக்கும்... இன்னும் இருக்கிற எல்லா வேலையும் இருக்கும்!!!!

உணவு ஆறி போன பின்பு வந்து, அதை எதை பற்றியும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிடும் சூப்பர் மேன்கள் .

 

4. வீட்டில் இருக்கும் நாட்களில் 'நோ ஷேவிங் / நோ குளியல்'!

Husband Wife

வேலைக்கு செல்லும் நாட்களில் 'பக்கா'வாக தோன்றுபவர்கள் வார இறுதி நாட்களில் சோம்பேறிகளாக மாறி ஷேவ் செய்வது, ஏன் குளிப்பது கூட இல்லை.

இது குறிப்பாக காதலித்து திருமணம் செய்தவர்களிடம் அதிகம் கேட்கப் படும் கம்ப்ளெயிண்ட்.

பின்னே காதலிக்கும் நாட்களில் 'சாக்லேட்' பாயாக பார்த்து பழகி போயிருப்பார்கள்!!!!

 

5. அவர்களின் பொருள் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது!

Husband Wife

வ்வளவு வேண்டுமென்றாலும் முயற்சி செய்து பாருங்கள்... ஹுஹும் கர்சீப் தொடங்கி, சாக்ஸ் வரை அவர்களின் பொருள் எதையுமே அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

எப்போதும் ஒரே இடத்தில நீங்கள் அடுக்கி வைத்தாலும் கூட அவர்களுக்கு அந்த இடம் நினைவிருக்காது!

 

6. நியூஸ்பேப்பர்!!!!

Husband Wife

லகில் வேறு எதுவுமே முக்கியம்  இல்லை என்பது போல நியூஸ் பேப்பர் படிப்பது...

சில சமயம் பாத்ரூமிற்கும் பேப்பரை எடுத்து சென்று, சில மணி நேரங்கள் இருந்து, மற்றவர் அனைவரையும் கடுப்பேற்றுவது.

 

7. குறட்டை விட்டு தூக்கத்தை கெடுப்பது!

Husband Wife

குறட்டை விட்டு தூக்கத்தை கெடுப்பது கூட  பரவாயில்லை,  காலையில் 'எனக்கு நீ இடமே தர மாட்டேங்குற... நான் சரியாவே தூங்கலை...." என்று மனைவியிடம் கம்ப்ளெயிண்ட் செய்வது!!!!

 

8. கட்டில் , நாற்காலி, ஷோஃபா என எங்கேயும் அமர்ந்து சாப்பிட்டு அலங்கோலப்படுத்துவது!!!

Husband Wife

ங்கே வேண்டுமென்றாலும் சாப்பிடலாம், சிந்தலாம், அங்கேயே மீண்டும் அமரலாம், படுத்தும் தூங்கலாம்.

கிர்ர்ர்ர்ர்.... மிகவும் கடுப்பேற்றும் பழக்கம் இது.

 

9. எதற்குமே நேரம் இல்லையென்றாலும் கிரிக்கெட்  / நியூசிற்கு மட்டும் நேரம் இருக்கும்!

Husband Wife

வீட்டு விஷயங்கள், குழந்தைகள் என எதை பற்றியும் பேசவோ, கேட்கவோ நேரமிருக்காது ஆனால், கிரிக்கெட் அல்லது நியூஸ் பார்க்க மட்டும் எப்படியோ நேரம் கிடைத்து விடும்!!!

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.