(Reading time: 3 - 5 minutes)

ரிட்டையர்மென்ட்டுக்கு பிறகு...

Happiness

 

வேலையில் இருந்து ரிட்டையர் ஆகும் நேரம் மனதில் சஞ்சலம் தோன்றுவது இயல்பு.

குடும்பத்தினர் இனி நம்மை மதிப்பார்களா என்பன போன்ற கேள்விகளும், ரிடையர் ஆகிவிட்டேன், இனி என்ன என்றகுழப்பங்களும் மனதை குடையலாம்...

ஆனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் இப்படி குழம்பாமல் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க, இரண்டு வருடங்களுக்கு முன் டீச்சராக இருந்து ஓய்வுப் பெற்ற நம் டீம் மெம்பர் ஒருவரின் சித்தி பகிர்ந்த சில டிப்ஸ்...!


பெரியவர் என்பதற்காக எப்பொழுதும் அறிவுரை ஒன்றை மட்டும் சொல்வதை தவிர்க்க வேண்டும். தேவைப்படும் போது மட்டும் அறிவுரை பகிர வேண்டும்.

த்தனை நெருங்கிய உறவினர் என்றாலும் எந்த விதத்திலும் அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள் அதே நேரம் தேவைக்கு அதிகமாக விட்டும் கொடுக்காதீர்கள்.

பிள்ளைகளின் வாழ்க்கையை பற்றி நீங்கள் யோசித்தது போலவே உங்களின் வாழ்வை பற்றியும் இப்போது மனதில் வையுங்கள்.

யதான காலத்தை குழந்தை பருவத்துடன் ஒப்பிடுவார்கள். எனவே கள்ளம் கபடமில்லாத குழந்தைகளை போல மகிழ்ச்சியாக இருப்பது மற்றவர்கள் உங்களை விரும்ப செய்யும்.

கடந்த கால சோகங்களை பற்றியே பேசுவது, சிலரை வெறுப்பது, எதற்கெடுத்தாலும் குறை சொல்வது என்றிருந்தால் தேவை இல்லாத மன வருத்தமே வந்து சேரும்.

பழைய நிகழ்வுகளை நினைத்து விரக்தியோடு இருப்பது, சோகமாக இருப்பது எல்லாம் மற்றவர்களை சங்கடப்பட, கடுப்படைய செய்யும்.

எதையும் கடந்து வர முயற்சி செய்யுங்கள்.

உங்களுடன் நேரம் செலவிட விரும்பும் பேரக் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் உரையாடுங்கள், டிவியில் உங்களுக்கு பிடித்த நிகழ்சிகளை பாருங்கள், பிடித்த பாடல்களை கேட்டு ரசியுங்கள்..

இதய கதவுகளை திறந்து விடுங்கள்... மனம் லேசாகும்...!

னுபவ அறிவுக்கு நிகர் எதுவுமே இல்லை ஆனால் நம் சொந்த அனுபவ அறிவு எல்லோருக்கும் பொறுந்தும் என முடிவு செய்து நம் அனுபவங்களை மற்றவர் மீது திணிக்காமல் இருக்க பழக வேண்டும்.

யது பேதமில்லாமல் நம் உடலில் தோன்றும் ஆரோக்கிய குறைபாடுகளுக்கு பெரும்பாலும் நம் மனமே காரணம்.. மனதில் கவலைகள் இருந்தால், தானாக உடலில் அசதியும் வியாதிகளும் வரும். எனவே மனதை மகிழ்சியாக வைத்து பழக வேண்டும்.

முடிந்த அளவில் நம்மை சுற்றி இருக்கும் மற்றவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.

ரு கூட்டுக்குள் உங்களை குறுக்கிக் கொள்ளாமல் உங்களின் சிறு வயது ஆசைகளை, பொழுதுபோக்குகளை தூசு தட்டி வெளி கொண்டு வாருங்கள்.

பிக்னிக், தோட்டக்கலை, பயணங்கள் என உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். வாக்கிங் செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிடுங்கள்.

ரிட்டையர் ஆகியாச்சு, இனி அவ்வளவு தான் என் வாழ்க்கை என்பது போன்ற எண்ணங்களை தூக்கி எறியுங்கள்..

டலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.


வாழ்க்கை இனிமையானது.

கடமைகள் அனைத்தையும் நிறைவு செய்து மன நிறைவுடனும் அமைதியுடனும் நீங்கள் வாழ வேண்டிய வருடங்கள் ரிட்டையர்மென்ட்டுக்கு பிறகு வரும் வருடங்கள்.

எனவே மனதில் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வாழுங்கள்!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.