(Reading time: 2 - 4 minutes)

சிரிக்க.மட்டும்!!!!!!! - Anusha 

ரு தம்பதிக்கு மூன்று மகள்கள்.

மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார்.

தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார்.

Joke

இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார்.

அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார்.

அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது.

இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார்.

அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார்.

முன்றாவது மருமனுக்கும் இதே சோதணை.

திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை

மாமியார் கெஞ்சினார்.

ம் ஹும்.

பார்க்காதது போல் இருந்தார்.

மாப்பிள்ளை காப்பாற்றுங்கள் இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்.

காரும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் புள்ள வளர்திருக்கிறா பார்...புள்ள...ன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.

மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.

அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்....

ஒரு புத்தம் புதிய BMW  கார் வாசலில் நின்றது.

அருகில் சென்று பார்த்தால்.. .............

மாமனாரின் அன்புப் பரிசு என்ற வாசகம் காரில் தொங்கியது.


"ன் செயினை யார்மா பறிச்சது?"

"கறுப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார்"

வண்டியை அவன்தான் ஓட்டினானா?

இல்ல சார், ஓட்டினவன் பச்சை ஹெல்மெட் போட்டிருந்தான்.

சாட்சி யாராவது இருக்காங்களா?

சிவப்பு ஹெல்மெட் போட்டவரு இதை கண்ணால பாத்தாரு.

இப்படி சொன்னா எப்படிம்மா.. ஏதாவது அடையாளம் சொல்லு.

சாட்சி பின்னாடி உக்காந்திருந்த பொண்ணு வெள்ளை ஹெல்மெட் போட்டிருந்தாங்க சார்.

அட ஏம்மா...அதை போடாத யாருமே இல்லையா?

நான் மட்டும்தான் சார் போடலை.

அப்படியா? அப்போ உன்னோட லைசன்ஸையும், ஆர்-சி புக்கையும் எடு....

"ஸார்!!நான் ரோட்ல நடந்து வந்துகிட்டு இருந்தேன் சார்!!"


பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க

பொண்ணு வீட்டுக்காரங்க பையன் கிட்ட கேட்குறாங்க, “என்னப்பா பண்ற?”

பையன் – அட்மின்ல இருக்கேன் சார்

அப்படியா எந்த கம்பெனியில?

Whatsupல மூணு க்ரூப், பேஸ்புகல இரண்டு பேஜ் சார்!

!@#$%^&*()

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.