(Reading time: 1 - 2 minutes)

தத்துவம்ஸ் - Anusha 

தத்துவம் 1:

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .

ஆனா, பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

Joke


தத்துவம் 2:

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,

மேன்யுவலாத்தான் (manual) டிரைவ் பண்ண முடியும் .


தத்துவம் 3:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,

ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

(Mind Voice - என்ன கொடுமை சார் இது !?!)


 

தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும் ஆனா.......

அதை வச்சு ரோடு போட முடியாது!

(Mind Voice - ஹலோ ! ஹலோ !!!!)


தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்...

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா..??

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(Mind Voice - டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)


தத்துவம் 6:

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்..

அதுக்காக, மன்டே அன்னைக்கு

மண்டைய போட முடியுமா ?

(Mind Voice - ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.