Jokes - Devi
பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.
ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...
முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்....
நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்....
*மாணவன்* : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்!
*ஆசிரியர்* : இப்பவாவது உணர்ந்தியே!
*மாணவன்* : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
*தொண்டன் 1*: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
*தொண்டன் 2*: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.
*மருத்துவர்* : ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு..
*பெண்* : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!
*தொண்டன்* : தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
*தலைவன்* : இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சிருக்கு...!
*மனைவி*: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
*கணவன்*: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தை பக்கத்துல போக சொன்னது?
எல்லா *stage*'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா *கோமா stage*'ல டான்ஸ் ஆட முடியுமா?
*டாக்டர்*: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
*நோயாளி*: ஏன் டாக்டர்?
*டாக்டர்*: ஸ்டெதஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே..