(Reading time: 1 - 2 minutes)

மொபைல் போன் கலாட்டா  - ஜான்சி

fun

பெண் அலைபேசியில்: ஆம்புலன்ஸ் சர்வீசா? அவசரம்.. 

மறுமுனை: ஆமாங்க, சொல்லுங்க. 

பெண்: காப்பி குடிச்சிட்டு இருக்கும் போது டக்குன்னு தெரியாம காப்பி என் சேலையில் கொட்டிடுச்சு. 

மறுமுனை: இதுக்கு கண்டிப்பா ஆம்புலன்ஸ் வேணுமா மேடம்? 

பெண்: இல்ல, அத பார்த்துட்டு இருந்த என் வீட்டுகாரர் சத்தமா சிரிச்சாரு. 

மறுமுனை: புரியுதுங்க. ரெண்டே நிமிஷத்தில் வர்றோம்.அட்ரஸ் சொல்லுங்க..

 


திருமணம் முடிந்ததும் மாமனார் மருமகன் முருகேசுவிடம் வந்தார்.

கடைசி நேரத்தில் WhatsApp மூலம் நீங்கள் கேட்டிருந்த பரிசு விநோதமாக இருந்தது. இருந்தாலும் வாங்கிட்டேன், இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட 4 அண்டர் வேர்.

முருகேசுக்கு பயங்கர கோபம், நான் என்ன கேட்டா இந்தாள் என்ன வாங்கி தரான் பாருன்னு.

உடனே மொபலை எடுத்து வாட்ஸ்ப் ஓபன் பண்ணி பார்த்தாரு.

பார்த்த உடனே மயங்கி விழுந்துட்டாரு.

என்னடான்னு பார்த்தா மாப்பிள்ளை Ford Endeavour வேணும்னு மாமானாருக்கு மெஸேஜ் அனுப்பிருக்காரு.

ஆனா Auto correct options ல Four under wears னு மாறி போச்சு..

ROTFL

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.