(Reading time: 4 - 7 minutes)

03. கீதம் சங்கீதம்.... - தேவி

Geetham sangeetham

ஹாய் friends ..

ரொம்ப கேப் ஆயிடுச்சோ.. மீண்டும் வந்து விட்டேன்,

மகாவிஷ்ணு மனிதனாக அவதாரம் செய்து இந்த உலகத்துக்கு நிறைய வாழ்க்கை வழி முறைகளை சொன்னது ராமவதாரம்.. மற்றும் கிருஷ்ணாவதாரம் .. இரண்டிலும் தான்.

ராமர், கிருஷ்ணர் ரெண்டு பேர் பிறந்ததையும் நம்ம குடும்பத்தில் குழந்தை பிறந்தால் எப்படிகொண்டடுறோமோ அதே போல்தான் அவர்கள் அவதார திருநாளையும் கொண்டாடுறோம்..

ராமருக்கு பருப்பு பாயாசமும், பானகம், நீர் மோர்தான். கிருஷ்ணருக்கு தனி கொண்டாட்டம் தான்.

அதே கிருஷ்ணர் பிறந்ததற்கு.. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் லே பண்ற அத்தனை பட்சணம், பால், தயிர், வெண்ணை , பழங்கள் எல்லாமே அவருக்கு நெய்வேத்தியம் பண்ணி கொண்டாடறோம்..

கிருஷ்ணர யாருமே ஒரு கடவுளா பார்க்க மாட்டோம்.. நம்ம வீட்டில் விளையாடுற குழந்தையாத்தான் பார்க்கிறோம். அவர் குழந்தையாய் இருக்கும் போது செய்யும் குறும்பு, விளையாடும் காலத்தில் கட்டும் தோழமை, அர்ஜுனனை அத்தை மகனாக பார்க்காமல் உற்ற தோழனாக வழிகாட்டுவது, பாண்டவர்களுக்கு நியாயம் கிடைக்க போராடுவது, போரில் அர்ஜுனனுக்கு குருவாய் கீதையை உபதேசித்தது என அவர் லீலைகளை நாம் பட்டியல் இட முடியாது.

அப்ப்றேபட்ட கிருஷ்ணர் அவதரித்த நாள் கோகுலாஷ்டமி வருகிறது. எனக்கு கிருஷ்ணர் பாடல்கள் மிகவும் பிடிக்கும். குழலூதி, அலைபாயுதே, தீராத விளையாட்டு பிள்ளை, ஜகதோதரனா, கிருஷ்ணா நீ , இப்படி நிறைய பாட்டுக்கள் இருக்கு. அதுலே எனக்கு மிகவும் பிடித்த பாடல் “பால் வடியும் முகம் நினைந்து “ ..

இந்த பாடல் வரிகள் ஊத்துக்காடு திரு.வேங்கட சுப்பையர்... அவர்களால் எழுதப்பட்டது. இது நாட்டை குறிஞ்சி ராகத்தில் பாடப்பட்டுள்ளது.

ஊத்துக்காடு அவர்கள் சிறு வயதிலேயே அருகில் இருந்த குருவிடம் பாட்டு கற்றுக் கொண்டவர், மிகவும் சீக்கிரமே இவரின் பயிற்சி நிறைவடைந்த நிலையில், இவர் அந்த கண்ணனையே தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு பாடல்கள் இயற்றினார்.

கண்ணனின் திருவிளையாடல்களைப் புனைந்து எண்ணற்ற பாடல்களை இயற்றத் தொடங்கினார். சில காலத்தின் பின்னர் தாயார் இறந்ததும் உலக வாழ்வில் பற்றற்று இறுதி வரை துறவியாகவே வாழ்ந்தவர்.

“ பால் வடியும் முகம் “ நிறைய பேர் இந்த பாடல ரொம்ப அழகா பாடிருக்காங்க. அதுலே திரு.கே.ஜே.யேசுதாஸ்.. அவர்களின் குரலில் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பல்லவியே சரணம் ... இளையராஜா அவர்களின் இசையில் ஒருவர் வாழும் ஆலயம்... படத்தில் வரும் பாடல்

கண்ணாமூச்சி ஏனடா ... கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ரஹ்மான் அவர்களின் இசையில்

இந்த இரண்டு பாடல்களும் .. பால் வடியும் முகம் பாடலில் உருவாகும் அந்த சுக உணர்வினை கொடுக்கும். கண்ணாமூச்சி ஏனடா பாடலில் வரும் வரிகள் கூட இந்த பாடலில் கூறப்பட்டுள்ள அதே வரிகளை நினைவுபடுத்தும்.

ஊத்துக்காடு அவர்கள் கண்ணனை அனுபவித்து அழகாக இந்த பாடலை இயற்றியுள்ளார்.

ஒவ்வொரு வரியும் கண்ணனை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தவது போல் தோன்றும்.

கானமயிலாடும் மோனக் குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே..

இந்த வரிகள் அப்படிப்பட்ட ஒரு இடத்திலே கண்ணன் குழல் ஊதுவது போல .. ஒரு பிரமையை உண்டாக்கும்.

அதை கேட்டு கனிந்து உருக ஒரு பிறவி இல்லாமல், பிறக்கும் பிறவி எல்லாம் அப்படிப்பட்ட வரம் வேண்டும் என்ற வரிகள் நம்மையும் அப்படிப்பட்ட வரத்தை கேட்க வைக்கும் என்று நம்புகிறேன்..

பல்லவி

பால்வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவச மிக வாகுதே (கண்ணா)

அனுபல்லவி

நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா
எந்தன் நெஞ்சம் குடி கொண்டு
அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும்
சிந்தனை    செல்லாதொழிய (பால்வடியும்)

சரணம்

வான முகட்டில் சட்று
மனம் வந்து நோக்கினும்
(உன்) மோன முகம் வந்து தோனுதே

தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
(உன்) சிரித்த முகம் வந்து காணுதே

கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் (அங்கு)
உன் கான குழலோசை மயக்குதே

கருத்த குழலொடு நிறுத்த மயிலிற-
கிறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும்
நீல நதியோடும் வனத்திலே

குழல் முதல் எழிலிசை குழைய வரும் இசையில்
குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு
நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே
கதித்த  பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நினைவினோடு
பிறவி பிறவி தோறும்
கனிந்துருக வரம் தருக பரம் கருணை (பால்வடியும்)

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 02

Geetham... Sangeetham - 04

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.