(Reading time: 3 - 6 minutes)

04. கீதம் சங்கீதம்.... - தேவி

Geetham sangeetham

ணக்கம் friends..

இந்த முறை நான் எடுத்துக் கொண்ட பாடல் மகாகணபதிம்.. இதை விநாயகர் சதுர்த்திக்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.. ஆனால் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது.

இந்த பாடல் கர்நாடக சங்கீதம் தெரியாத அநேகம் பேருக்கு தெரிய வர காரணம் .. சிந்துபைரவி படத்தில் நடிகர் சிவகுமார் கர்நாடக சங்கீத வித்வானாக அறிமுகமாகும் போது இந்த பாடல்தான் பாடுவார்.

இதை கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பின்னணி பாடியிருப்பார்.. நாட்டை ராகத்தில் அமைந்த இந்த பாடலுக்கு இளையராஜா அவர்களின் இசை மிகவும் பொருந்தி இருக்கும்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தொகுப்புகளில் ஒன்று தீக்ஷிதர் கிருதி... அதில் தான் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது,

நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று இந்த பாடல்.. விநாயகர் கீர்த்தனைகள் நிறைய கேட்டதில்லை.. கேட்ட ஒன்று இரண்டில் மிகவும் பிடித்தது மகாகணபதி பாடல் தான்.

நமக்கு பிடித்த விஷயங்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள ஆசைபடுவோம்.. எனக்கு பிடித்த இந்த பாடலை பற்றி தெரிந்து கொள்ள எண்ணி நான் வலைப்பூவில் தேடிய போது கிடைத்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

மஸ்க்ருத மொழியில் அமைந்த இந்த பாடலின் பொருள் ...

மகாகணபதி .. உங்களை மனமார வணங்குகிறேன்... வசிஷ்டர், வாமதேவர் போன்ற மகரிஷிகள் வணங்கிய உன்னை நானும் வணங்குகிறேன்..

மகாதேவன் சிவபெருமானின் மைந்தனும், குருகுகனகிய ஸ்கந்தனின் மரியாதைக்குரியவணும் நீ... ஆயிரம் கோடி பிரகாசமும், அழகும் நிறைந்த உன்னுடைய திருவுருவின் முன் அந்த மன்மதனும் இணையாக மாட்டான்.

காவியமும், நாடகமும் உனக்கு மிகவும் பிடிக்கும் .. மலையை போன்ற உனக்கு சின்ன எலியே வாகனம் ஆகும்.. கொழுக்கட்டை (மோதகம்) பிரியனும் நீ...

அப்பேற்பட்ட உன்னை .. சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.. “

இந்த பாடலின் பொருள் அறிந்து கொள்ளும்போது,

மஹா காவியநாடகாதி பிரியன்..  இந்த வரிகளுக்கு காரணமான விநாயகரின் பெருமைகள் பற்றி அறிய நேர்ந்தது. ..

மகாபாரதம் இயற்றியவர் வியாசர் என்பது நமக்கு தெரியும்.. வியாசர் சொல்ல சொல்ல அதை வேகமாக எழுதக் கூடிய ஆற்றல் நிறைந்தவர் யார் என்று தேடியபோது விநாயகர் அதற்கு ஒப்புக் கொண்டார். வியாசரும், விநாயகரும் ஒரு ஒப்பந்தத்தின் பேரில் தான் இதை இயற்றினார்கள்..

வியாசர் எந்த அளவு வேகமாக சொல்கிறாரோ அந்த அளவு வேகமாக எழுத வேண்டும். அதே சமயம் திருப்பி சொல்ல மாட்டார்.. இவை அனைத்தும் சுலோகங்களாக இருக்கும்..

விநாயகரோ நான் வேகமாக எழுதுகிறேன் .. ஆனால் எனக்கு ஒவ்வொரு ஸ்லோகங்களுக்கும் பொருளும் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

அதன் படியே இருவரும் எழுதிக் கொண்டிருந்தனர். எழுதிக் கொண்டிருக்கும் போது மகாவிஷ்ணுவின் விஷ்வ ரூபத்தை சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ... சொன்னார் வியாசர்.. அதை விநாயகரால் பொருத்தி பார்க்க முடியாமல் அவரிடம் வாதிடும் போது.. அவர் சொன்ன கருத்துக்களுக்கு ஒப்புதல் அளித்தார் விநாயகர்.

விநாயகர் யானை முகம் உடையவர்.. யானைகளுக்கு தந்தம் அழகு, கம்பீரம் .. உடையது.. மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஒரு பெருமை அவைகளுக்கு உண்டு.. அப்பேற்பட்ட தந்தங்களில் ஒன்றை உடைத்து எழுதுகோலாக உபயோகபடுத்தி விநாயகர் மிக புனிதமான மகாபாரதம் எழுதினர். அதை எழுதுவதற்கு மகா மேருவான இமயமலையை எடுத்துக் கொண்டார் என்பது வரலாறு..

இந்த விஷயங்கள் விநாயகருக்கு காவியங்களும், நாடகங்களும் எவ்வளவு பிரியம் என்பதை விளக்குகிறது...”

அந்த ஒரு வரிக்குள் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று வியந்து, அதை உங்களோடு நானும் தெரிந்து கொண்டேன்.

பாடல் வரிகளும், பாடலும் ...கீழே...

Ragam: Nattai

Talam: Aadhi

Parent Ragam: Chalanattai (36th melakartha)

Aa: S R3 G3 M1 P D3 N3 S

Av: S N3 P M1 R3 S

Composer: Muthuswamy Dikshitar

Language: Sanskrit


Mahaa ghanapathim sree mahaa ghanapathim

Sree mahaa ghanapathim manasaa smarami

Mahaa ghanapathim manasaa smaraami

Vasishta vaama thevathi vanthitha

Mahaa ghanapathim manasaa smaraami

 

Mahaa dhaeva sudham

Mahaa dhaeva sudham ghuru ghugha nudham

Maarakkotti prakaasam santham

Mahakaavya nattakkavipriyam

Mooshika vaahana mothaka priya

 

Mahaa ghanapathim manasaa smaraami

Vasishta vaama thevathi vanthitha mahaa ghanapathim

 

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 03

Geetham... Sangeetham - 05

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.