(Reading time: 3 - 6 minutes)

06. கீதம் சங்கீதம்.... - தேவி

Geetham sangeetham

ஹாய்.. பிரெண்ட்ஸ்

இந்த தீபாவளி நன்னாளில் மற்றும் ஒரு கீதத்தோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

இன்றைக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல் பிரம்மமொகடே.. பற்றிய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன் ..

இந்த பாடல் தெலுகு மொழியில் அன்னமாச்சார்யா அவர்களால் இயற்றப்பட்ட கீர்த்தனை.. அன்னமாச்சார்யா அவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளுக்கும் முன்னோடியாக வாழ்ந்தவர். அன்னமய்யா ராமானுஜர் கொள்கைகளாலும் , ஆழ்வார்களின் பாடல்களாலும் கவரப்பட்டு வைஷ்ணவத்தின் மேல் பக்தி கொண்டவர். இவர் ஏழுமலையான் மீது மிகுந்த பக்தி கொண்டு பாடல்களாக இயற்றினார்.

இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா ,சங்கீர்த்தனம், போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

“சுபத்ரா கல்யாணம்” என்ற தெலுகு இலக்கியத்தை இயற்றிய முதல் பெண் புலவர் அன்னமையா அவர்களின் மனைவி திம்மக்கா ...

அன்னமையா இயற்றிய பாடல்கள் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் வரை பரவாமல் இருந்தது. பிறகு ஏழுமலையான் கோவில் உண்டியல் எதிரில் ஒரு அறையில் இவருடைய பாடல்கள் கிடைக்க பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகள் பல மிகவும் பிரபலமானவை.. அதில் மிக முக்கியமான “பிரம்மமொகடே” என்ற இந்த கீர்த்தனை மிகவும் புகழ் பெற்றது.

பிரம்மமொகடே இந்த பாடல் வரிகள் இறைவன் ஒன்றுதான்.. என்ற கருத்தை வலியுறுத்தி அமையபெற்றது.

தூக்கம் என்பது ராஜாவிற்கும், வேலைக்காரனுக்கும் ஒன்றுதான். எந்த வேறுபாடும் கிடையாது. இன்ப, துன்பம் என்பதும் எல்லா உயிர்களுக்கும் , தேவதைகளுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் ஒன்றுதான்.. ஏழை, பணக்காரன் எல்லோருக்கும் இரவு, பகல் என்பதும் ஒன்றுதான். நல்ல உணவை ருசிக்க ஒரு நாக்கும், கெட்டு போனதை ஒதுக்க நாக்கு ஒன்றும் கிடையாது.. நாக்கு ஒன்றுதான். அந்த உணவின் நறுமணமும், குணமும் காற்றில் கலந்து நல்லதை நாக்கு ஏற்றுக் கொள்ளவும், கெட்டு போனதை ஒதுக்கவும் வைக்கிறது. மிகபெரிய விலங்கு யானைக்கும், உருவத்தில் சிறிய பூனைக்கும் சூரியன் ஒன்றாகத்தான் ஒளிர்கிறது.. அதை போல் நம் இன்பம் , துன்பம் அனைத்திற்கும் துணை நிற்பவன் அந்த ஏழுமலையான் ஒருவனே “

அந்த ஏழுமலையான் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை இந்த பாடல் தெளிவாக எடுத்து உரைக்கிறது.

இந்த பாடல் திருமதி சுதா ரகுநாதன் குரலில் நான் அதிகமாக கேட்டிருக்கிறேன். பாவமும், வார்த்தை உச்சரிப்புகளும் நன்றாக இருக்கும். தெலுகு கீர்த்தனை என்பதால் எளிதாக உச்சரிக்கும் வண்ணம் ஆங்கிலத்தில் கொடுத்து இருக்கிறேன்.

தீபாவளி என்பது – தீப ஒளி என்பது ஆகும்.. நம் மனதில் இருக்கும் ஆணவம், சுயநலம் என்ற இருளை, இறைவனின் நாமம் என்னும் தீபம் மூலம் அகற்றி பிரகாசிப்போம் .

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

 

thandanana abi (brahma okaTE)
raagam: bowLi

15 maayamaaLava gowLa janya
Aa: S R1 G3 P D1 S
Av: S N3 D1 P G3 R1 S

OR

naadanaamakriyaa

15 maayamaaLava gowLa janya
Aa: S R1 G3 M1 P D1 N3
Av: N3 D1 P M1 G3 R1 S N3

taaLam: aadi
Composer: Annamaacaarya
Language: Telugu

pallavi

tandanAnA Ahi tandanAnA purE tandanAna bhALa tandanAnA bhaLA
brahmamokaTE para brahmamokaTE brahmamokaTE para brahmamokaTE

caraNam 1

kanduvagu hInAdhikamu lindulEvu andariki shrI harE antarAtmA
indulO jantukulamu intA okaTE andariki shrI harE antarAtmA

caraNam 2

ninDAra rAjU nidrincu nidrayu okaTE anDanE baNTu nidra adiyu okaTE
meNDaina brahmANuDu meTTu bhUmi okaTE caNDAlundEti sari bhUmi okaTE

caraNam 3

anugu dEvatalakunu ala kAma sukhamokaTE ghanakITa pashuvulaku kAma sukham okaTE
dIna mahOrAtramulu tegi dhanAdyuna-kokaTE vonara nirupEdakunu okaTE aviyu

caraNam 4

koralu SiSTnnamulu gonu nAkkalokaTE tirugu duSTAnnamulu dinu nAkkalokaTE
paragu durgandhamulapai vAyuvokaTE varusha parimaLamupai vAyuvokaTE

caraNam 5

kaDagi Enugu mIda kAyu eNda okaTE pudami suanakamu mIda bolayu-nendokaTE
kaDu puNyalanu pApa karmulanu sarigAva jaDiyu shrI venkaTEShvaru nAma-mokaTE

 

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 05

Geetham... Sangeetham - 07

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.