(Reading time: 3 - 6 minutes)

தொப்பையை குறைக்க ஐந்து நிமிட உடற்பயிற்சி - செட் - 01

Note:எந்த உடற்பயிற்சியை செய்ய தொடங்கும் முன்பும் உங்களின் டாக்டரிடம் பேசி அது உங்களுக்கு உகுந்ததா என்று தெரிந்துக் கொள்வது நல்லது.

bELLY FAT

யிற்று தொப்பை என்பது இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

குறிப்பாக முப்பதுகளில் இருக்கும் பெண்கள் தொப்பையினால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இந்த் காலக்கட்டத்தில் குழந்தை குடும்பம் வேலை என பல்வேறு பரிணாமங்களை ஏற்றுக் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களை பற்றியோ அவர்களின் உடலை பற்றியோ சிந்திக்க முடிவதில்லை. அப்படியே சிந்தித்தாலும் உடல் நலனுக்காக பிரத்தியேகமாக நேரம் செலவிட முடிவதில்லை.

ஆனால் அப்படி இருப்பது நல்லதில்லை. தொப்பையினால் பல பல உடல் நல சீர் கேடுகளும் ஏற்படுகின்றன.

எனவே தொப்பையை குறைக்கும் வழிமுறைகள் செய்வது நல்லது.

நேரமில்லை என சொல்பவர்களுக்கு உதவ தான் இந்த ஐந்து நிமிட தொப்பை குறைக்கும் உடற்பயிற்சி.

உணவு கட்டுபாடுடன், இந்த தொடரில் தொகுக்கப்படும் உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்தால் கட்டாயம் மாற்றம் தெரியும்.

தெப்படி ஐந்து நிமிடங்கள் செய்தால் மாற்றம் வரும் என்று கேட்கிறீர்களா? மந்திரம் மாயாஜாலம் எல்லாம் இல்லை. தொடர்ந்து தவறாமல் நீங்கள் இந்த பயிற்சிகளை செய்வது தான் முக்கியம்.

மேலும் சில மணித்துளிகள் உடற் பயிற்சி செய்ய உங்களுக்கு ஆவல் இருந்தால் கட்டாயம் வேறு பயிற்சிகளை செய்யலாம். நடப்பது, ஜாக்கிங், சைக்ளிங் போன்றவை கூட மிகவும் நல்லது.

ஐந்து நிமிடங்கள் தானே செய்து தான் பாருங்களேன்....!

ந்த உடற்பயிற்சிகளை செட்டாக செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்ற அட்டவணை இதோ:

உடற்பயிற்சி 1 – 1 நிமிடம்

உடற்பயிற்சி 2 – 1 நிமிடம்

உடற்பயிற்சி 1 – 1 நிமிடம்

உடற்பயிற்சி 2 – 1 நிமிடம்

உடற்பயிற்சி 1 – 1 நிமிடம்

மொத்தம் – 5 நிமிடங்கள்

உடற்பயிற்சி – 1 – Squat press

Squat press

இரண்டு dumbbellகளை (1 – 2 கிலோ எடையுள்ளவையே போதும்) எடுத்துக் கொண்டு, கைகளை மடித்து, உங்களின் தோள் மீது வைக்கவும். கால்களை சேர்த்து வைக்காமல் சற்றே விரித்து வைக்கவும்.

dumbbell இல்லையென்றால் வேறு கனமான பொருளை பயன்படுத்தலாம். ஆனால் கவனமாக இருங்கள் உங்களை அந்த பொருளினால் காயப் படுத்திக் கொள்ளாதீர்கள்.

கனமான பொருள் தூக்கி பழக்கமில்லை என்றால், முதலில் கனமான பொருள் இல்லாமல் கை விரல்களை மடித்துக் கொண்டு, இந்த பயிற்சியை செய்யுங்கள். உங்களுக்கு பழக்கமான பின் மெல்ல எடையை வைத்து செய்து பாருங்கள்.

முதுகை வளைக்காமல் மெல்ல உங்கள் உடலை கீழே இறக்கவும். [ உங்களின் காலின் மேற் பகுதி தரைக்கு இணைக் கோடாக வர வேண்டும்]. இது தான் squat position. இந்த நிலையில் ஒரு வினாடி இருக்கவும்.

பின் கைகளை மேலே நீட்டிய படி நேராக நிமிர்ந்து நிற்கவும்.

இது தான் squat press. இதை ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து செய்யவும்.

 

உடற்பயிற்சி – 2 – High Knees

High knees

நேராக நின்றுக் கொண்டு உங்களின் கைகளை மடித்து முன்னால் நீட்டவும்.

ஒரு காலை மடித்து உங்களின் கைகளை எட்டும் அளவிற்கு தூக்கவும்.

பின் அடுத்த காலை மடித்து அதையே செய்யவும்.

இது தான் high knees.

தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு இதையே செய்யுங்கள்.

டுத்த செட்டை அடுத்த வாரம் சொல்கிறேன், நீங்கள் இந்த முதல் செட்டை செய்து பாருங்கள். சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.