Health Tip #20 - பெருங்காயம்
அன்றாடம் சமையலில் நாம் பயன்படுத்தும் பெருங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
- பெருங்காயத்தில் புரத சத்துக்கள் (proteins) அதிகம் உள்ளது. எனவே சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு புரத சத்து கிடைக்க இது உதவுகிறது.
- பெருங்காயம் நம் உடல் நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளை தடுக்கும். எனவே இது நரம்பு கோளாறுகளுக்கும் மிக நல்ல மருந்து.
- பெருங்காயம் வாய் துர்நாற்றம் மற்றும் வாயு கோளாறுகள் நீங்க உதவுகிறது.
- பெருங்காயம் தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் விரைவில் ஜீரணம் செய்து விடுகிறது.
- பெருங்காயம் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும் உதவுகிறது
- பெருங்காயம் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.
- பெருங்காயம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. அதனால் தான் பிரசிவித்தவுடன் பெண்களுக்கு இதை பத்திய உணவில் சேர்த்துக் கொடுப்பார்கள்.