(Reading time: 3 - 5 minutes)

பல் டாக்டரை கேளுங்கள் - ஈறுகளை பராமரிக்காவிட்டால் புற்று நோய், இதய நோய், அல்சர் ஏற்படுமா?

To read this article in English click here!

teeth

கேள்வி 8:

ஈறுகளை சரியாக பராமரிக்காவிட்டால் புற்று நோய், இதய நோய், அல்சர் போன்ற வியாதிகள் ஏற்படும் என்று சொல்வது உண்மையா? - கோபி

ஈறு தொற்று

சில ஆய்வுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் ஈறு தொற்றுக்கும் இதய பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஈறு தொற்று இரத்த ஓட்டத்தின் மூலம் இதயத்திற்கும் பரவலாம்.

ஆனால் ஈறு தொற்றுக்கும் இதய கோளாறுக்கும் இடையே ஒரு திட்டவட்டமான இணையுறவு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.

றுகளில் காயம் அல்லது அழற்சி இருந்தால் புண் ஏற்படலாம். ஈறில் இருக்கும் காயம் நீண்ட காலம் இருந்தால் மட்டுமே புற்று நோய் வரும் வாய்ப்பு இருக்கிறது.

 

கேள்வி 9: 

பல் துலக்குவதற்கும் ஈறுகளை பராமரிப்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? - கோபி

ற்களை ஒழுங்காக துலக்காமல் இருந்தால், உணவு துகள்கள் எனப்படும் பிளாக் (plaque) பற்கள் மீது உருவாக கூடும். அதை அப்படியே நிறைய நாட்கள் விட்டு வைத்தால், அது டார்டார் (tartar) எனப்படும் கடினமான பொருளாக மாறிவிடும்.

இந்த பிளாக் மற்றும் டார்டார் ஈறுகளில் எரிச்சல் ஏற்படுத்தி அது சிவந்து, வீங்கி போக காரணமாக இருக்கிறது. இது போன்ற பாதிப்படைந்த ஈறுகளில் இருந்து ரத்த கசிவு ஏற்படலாம். இதற்கு சிகிச்சை செய்யாமல் இருந்தால், பற்களை இழக்கவும் நேரிடலாம்.

gums 

கேள்வி 10: 

ஈறுகளை பராமரிக்க சில குறிப்புகளை பகிருங்களேன். - கோபி

ஈறுகளை பராமரிக்க சில எளிய குறிப்புகள்:

  1. தினசரி 2 முறை பல் துலக்குங்கள்
  2. உணவு உண்ட பிறகு வாயை நன்கு கொப்பளியுங்கள்.
  3. பல்லில் உணவு சிக்கி இருந்தால் குண்டூசி, ஊக்கு, டூத் பிக் போன்றவற்றை பயன் படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக பிரஷ் பயன்படுத்துங்கள் அல்லது ப்லாஸ் (floss) செய்யுங்கள்.
  4. ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறையேனும் தவறாமல் பல் டாக்டரிடம் செல்லுங்கள்.
  5. புகை பிடிக்காதீர்கள்

 

உங்களின் பற்கள் சம்மந்தப்பட்ட கேள்விகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

டாக்டர் அனிதா பற்றி:

ல் டாக்டராக பதினைந்து ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் டாக்டர் அனிதா, கூடுவாஞ்சேரியில் உள்ள ஆதர்ஷ் டென்டல் கேர் கிளினிக்கின் நிறுவனர் ஆவார்.

கிளினிக் முகவரி:
Adarsh Dental Care
No. 100, AGK complex
GST Road
Guduvancheri
Tamilnadu, India 
Facebook - https://www.facebook.com/AdarshDentalCare

 

To read this article in English click here!

மற்ற பதிப்புகள்

பல் டாக்டரை கேளுங்கள் - பற்களை வெண்ணிற படுத்துதல்

பல் டாக்டரை கேளுங்கள் - மவுத்வாஷ் மற்றும் கிராம்பு பயன்படுத்தலாமா?

பல் டாக்டரை கேளுங்கள் - பற்கால்வாய் சிகிச்சை முறை மற்றும் பற்களை வெண்மையாக்க கேப் முறை சரியானது தானா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.