(Reading time: 2 - 3 minutes)

Health Tip #30 - கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்!

Eyes

ண்கள் மிக மிக முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. மென்மையான, அழகான கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்.

அழகு

தூக்கம்

கண்களின் அழகிற்கும் தூக்கத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

கண்கள் அழகாக இருக்க தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம்.

 

பாதுகாப்பு

உணவு

கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கண்களுக்கு மிகவும் அத்தியாவசியம். எனவே பால், பால் உணவுகள், கீரை, முட்டை, ஆரஞ், பச்சை காய்கறிகள் உட்கொள்ள வேண்டும்.

விலை குறைந்த, தரமில்லாத குளிர் கண்ணாடிகளை அணிவதை தவிர்க்கவும்.

கண்களில் சிறியதாக ஏதேனும் பிரச்சனை இருப்பதாக தோன்றினாலும் உடனே நல்ல கண் டாக்டரை கலந்தாலோசிக்கவும்.

 

பயிற்சி

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்களை இரண்டு திசையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும்.

அருகில் உள்ள பொருட்களை பார்த்து விட்டு, தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.

நீண்ட நேரம் கணினி பார்ப்பவர்கள் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பச்சை பசலேனும் புல்வெளிகள் அல்லது நீல நிற பொருட்கள் எதையேனும் பார்க்கலாம்.

 

குளிர்ச்சி

ஆரஞ் பழ சாறை பிரீசரில் வைத்து அது கட்டியான பின்பு, ஒரு துணியில் கட்டி வைத்து கண்களின் மேல் ஓதி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

 

இந்த குறிப்புகள் உங்கள் கண்களை பாதுகாக்க உதவும் என்று நம்புகிறோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.