(Reading time: 2 - 4 minutes)

Health Tip # 47 - தூக்கமின்மையை தடுக்கும் உணவுகள்

Insomnia

 

ப்ரெட்:

ப்ரெட் போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே 'இன்சுலின்' ஹார்மோனை தூண்டக் கூடியவை என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

இன்சுலின் மூளையிலிருக்கும் 'ட்ரிப்டோன்' மற்றும் 'செரடோனின்' எனும் ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்க செய்யும் சிக்னல்களை உருவாக்க கூடியவையாம். மூளையில் உற்பத்தி ஆகும் இந்த இரண்டு ரசாயனங்களும் தூக்கத்தை தூண்டி விடக் கூடியவை என்றும் சொல்கிறார்கள்.

 

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்களுடன் எல்ட்ரிப்டோபன் எனும் அமிலமும் இருக்கிறது.

இந்த எல்ட்ரிப்டோபன் அமிலம் தூக்கத்தை தூண்டும் 'செரடோனின்' ரசாயனத்தை உருவாக்க உதவக் கூடியது.

வாழைப்பழம் தூக்கத்தை தூண்டி விடுவதற்கு ஒரு நிஜ வாழ்க்கை சான்றும் இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த மூன்று வயது சிறுவன் ஆரோனுக்கு பிறந்தது முதலே தூக்கமின்மை பிரச்சனை இருந்தது. மருந்து மாத்திரைகள் என எதை எதையோ முயன்றும் பலனளிக்காமல் இறுதியில் ஆரோனுக்கு கை கொடுத்திருக்கிறது வாழைப்பழம். தினமும் இரவில் பாதி வாழைப்பழத்தை உண்டு தூங்க சென்றால் ஆரோன் மற்றவர்களை போல நார்மலாக தூங்கி விடுகிறானாம். இந்த செய்தியை இங்கிலாந்தில் புகழ் பெற்று விளங்கும் டெய்லி மெயில் பத்திரிக்கை 2014ல் வெளியிட்டது.

 

ஓட்ஸ்:

ப்ரெட் போலவே ஓட்ஸும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துவதால் தூக்கத்தையும் தூண்டி விடும் ஆற்றல் கொண்டது.

 

பால்:

ரவில் பால குடித்தால் உறக்கம் வரும் என்பது பல பல காலமாக நாம் கேள்வி பட்ட ஒரு விஷயம்.

வாழைப்பழத்தை போலவே பாலிலும் 'ட்ரிப்டோபன்' அமிலம் இருக்கிறது. கூடுதலாக பாலில் கால்சிய சத்தும் நிறைந்து இருப்பதால் நல்ல தூக்கத்தை தூண்டும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.

 

செர்ரி

செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் மெல்டோன்களுக்கு நம் தூக்க பழக்கத்தை ஒழுங்கு படுத்தும் சக்தி உள்ளது.

எனவே இரவில் செர்ரி பழங்கள் ஒன்றிரண்டை உண்டால் நல்ல தூக்கம் வரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.