(Reading time: 2 - 3 minutes)

Health Tip # 49 - டிப்ரெஷன் எனும் மன உளைச்சலை கடந்து வருவது எப்படி?

Depression

மன உளைச்சல் ஏன் ஏற்படுகிறது?

ன உளைச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கின்றன.

மனதிற்கு நெருங்கியவரின் இழப்பு, விவாகரத்து, பிஸ்னஸ் நஷ்டங்கள், வேலையில் பிரச்சனைகள், வேலையின்மை, குடிப் பழக்கம் என எத்தனை எத்தனையோ காரணங்களை சொல்லலாம்.

இன்றைய இயந்திர கதி வாழ்க்கையில் மன உளைச்சல் இல்லாதவங்க யாருமே இல்லை என்று கூட சொல்லலாம்.

மன உளைச்சலின் பின் விளைவுகள்:

த்த அழுத்தம், டயாபிடீஸ் எனும் சர்க்கரை நோய், ஞாபக சக்தி குறைதல், உடல் தளர்ந்து போதல், ரத்த குழாய்கள் பிரச்சனை என மன உளைச்சலால் பல பல பின் விளைவுகள் உண்டு.

இப்படி நம் அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் உளைச்சலில் இருந்து வெளி வருவது எப்படி?

உளைச்சலில் இருந்து வெளி வருவது எப்படி?

ன உளைச்சலில் இருந்து வெளிவர முயற்சி செய்து வாழும் முறையை சற்றே மாற்ற வேண்டும்.

1. யோகா, தியானம் செய்வது

2. உறவினர்கள் / நண்பர்களுடன் கதை பேசுவது

3. நெடு நாள் தொடர்பில்லாமல் இருக்கும் பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்புக் கொள்ள முயற்சி செய்வது

4. கோபத்தை குறைக்க முயற்சி செய்வது

5. நகைச்சுவை துணுக்குகள் படித்து அல்லது நகைச்சுவை படங்கள் பார்த்து வாய் விட்டு சிரிப்பது

6. புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கத்தை மெல்ல குறைத்து தவிர்த்து விடுவது.

7. உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவது

இதை எல்லாம் செய்தால் மன அமைதி ஏற்பட்டு மன உளைச்சல் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது.

முயற்சி செய்து பாருங்கள்!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.