(Reading time: 4 - 7 minutes)

04. நலமறிய ஆவல்..!! - வசுமதி

Bakery

"லைட்டா பசிக்கற மாதிரி இருக்கு... ***பேக்கரிக்கு / ***கேக் ஷாப்க்கு / ***பீட்ஸா ஷாப்க்கு போலாம்.." அல்லது "அங்கிருந்து ஏதாவது வாங்கிட்டு வரலாம்.. "

பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கூறும் பிரபலமான வார்த்தைகள்..

பேக்கரி ஐட்டம்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அதை தயாரிக்க பயன்படும் ஒரு பொருளை பற்றிப் பார்ப்போம்..

மார்கரின் (MARGARINE)

போலி வெண்ணை (மார்கரின்) என்று அறியப்படும் தாவர வெண்ணை தாவர கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது..பொதுவாக மார்கரின் குக்கீஸ் மற்றும் கேக்குகள் தயாரிக்க பயன்படுத்தபடுவது ஆகும்... வெண்ணை காஸ்ட்டிலியான பொருள் என்பதால் இதற்கு பதிலாக மார்கரின் கடைகளில் பயன்படுத்தப் படுகின்றது..

இது செரிமானத்தை கட்டுப்படுத்துவது மட்டும் இல்லாமல் நல்ல கொலஸ்ட்ரால் சுரப்பதையும் கட்டுப்படுத்தும்..

பப்ஸ்.. பிஸ்கேட்ஸ்.. பீட்சா.. பர்கர்.. கேக்ஸ்..

தில் எதுவாக இருந்தாலும் இதன் பேஸ் மைதாதான்... இந்த பேஸை எப்படி தயாரிக்கறாங்கன்னு பார்ப்போம்..

பன், பர்கர், பப்ஸ், கேக், பிரட் தயாரிக்க மைதா மாவு, சர்க்கரை, உப்பு, மார்கரின் / டால்டா / நெய் / வெண்ணை, ஈஸ்ட், தண்ணீர், முட்டை, கேக் ஜெல், எசென்ஸ், வெள்ளை எள், சிபி எனப்படும் வேதிப்பொருள், டூட்டி புரூட்டி துண்டுகள் தேவைப்படுகின்றன.

தயாரிக்கும் உணவுக்கேற்ப, பொருட்களை மிக்ஸிங் மெஷினில் போட்டு 15 நிமிடம் இயக்கினால் மிருதுவான மாவு கிடைக்கும். அதை பல்வேறு அளவு டப்பாக்களில் நிரப்பி, 45 நிமிடங்கள் ஊற வைத்தால், மாவு புஸ்ஸென்று உப்பியிருக்கும்.

பின்னர் டப்பாக்களை டிராலியில் அடுக்கி, ட்ராலியை ஓவன் மெஷினில் வைத்து மூட வேண்டும். குறிப்பிட்ட வெப்பநிலையில் அரை மணி நேரம் இயக்கினால், மாவு வெந்து பன், பிரட், கேக் தயார்.

ன் மாவின் மேல் வெள்ளை எள் தூவி வேக வைத்தால் அது பர்கர் பன்.

சாதா பப்ஸ் தயாரிக்க மாவுக்கலவையை மெல்லியதாக தேய்த்து அதன் மேல் மார்கரின் தடவி, பல மடிப்புகளாக மடித்து டப்பாக்களில் ஊற வைத்து, வேக வைக்க வேண்டும்.

உள்ளே அவித்த முட்டை, காய்கறிகள், சிக்கன், பனீர், காளான் வைத்து வேக வைத்தால் பலவிதமான பப்ஸ்கள் கிடைக்கும்.

ப்பொழுது கடைகளில் கோதுமை பிரெட், ஓட்ஸ் பிரெட் என வகை வகையாக விற்கப்படுகிறதே அது ஹெல்த்தியானது இல்லையா என்று பலர் கேட்கலாம்..

நார்மல் பிரெட்டுக்கும் ஓட்ஸ் / கோதுமை பிரெட்டுக்கும் உள்ள ஒரே வித்யாசம் - நார்மல் ப்ரெட்டில் 100% மைதா என்றால் ஓட்ஸ் / கோதுமை பிரெட்களில் மைதா 70% கோதுமை/ஓட்ஸ் 30% ..

மாதந்தோறும் 25 நாளில் உத்தேசமாக 53 ஆயிரம் பன், 2,600 பிரட் (பெரியது), 5,300 பிரட் (சிறியது), 10,600 பப்ஸ், 650 முட்டை பப்ஸ், 355 கிலோ கேக் என சராசரியாக ஒரு பேக்கரியில் தயாரிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்..

 பன் ரூ3, பெரிய பிரட் ரூ30, சிறிய பிரட் ரூ15, சாதா பப்ஸ் ரூ4.50, முட்டை பப்ஸ் ரூ6, கேக் கிலோ ரூ90க்கு விற்க பட்டால் பேக்கரிகளுக்கு இதன் மூலம் மாத வருவாய் ரூ4 லட்சம். உற்பத்தி செலவு ரூ3 லட்சம். மாத லாபம் ரூ1 லட்சம்.

ஆனால் இதை தினமும் வாங்கி உண்ணும் நமக்கு..??

அடுத்த பதிவில் பாஸ்ட் புட் உணவுகளை பற்றி பார்ப்போம்..

ந்த நாலு எபிசோடா இதை பண்ணாதே இதை சாப்பிடாதே அப்படினு எழுதி எனக்கு போர் அடிக்குது (உங்க மைண்ட் வாய்ஸும் அது தான்னு எனக்கும் புரியுது.. ) சோ போர் எ சேன்ஜ் ஒவ்வொரு எபிசோட்லையும் இலவசமாக சில டிப்ஸ்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன்..

இதோ இன்றைய டிப்ஸ்..

*** வாழைப்பழத் தோலைக் கண்ணாடி குத்திய இடங்களில் வைத்து கட்டினால் ரத்தப்போக்கு நிற்பதோடு, விரைவில் குணமாகும்.

*** சின்ன வெங்காயத்தை உரித்து நெய் விட்டு வதக்கி இரவு நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

*** முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

*** சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

*** மோர்க்குழம்பு செய்யும்போது கொஞ்சம் அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். கமகமவேன வாசனையோடு ருசியாகவும் இருக்கும். இதேபோல் சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சேர்த்தாலும் மோர்க்குழம்பு ருசியாக இருக்கும்.

நலமறிய ஆவல்...

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1112}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.