(Reading time: 5 - 10 minutes)

நலமறிய ஆவல்..!! - 07 - பதநீர் - வசுமதி

Palm tree

பாட்டி..தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போ பாட்டி..இங்க போர் அடிக்குது..”

“கொஞ்சம் நேரம் கழிச்சு போலாம் கண்ணமா..இப்போ தானே இங்கே வந்திருக்கோம்..”

“பாட்டி ப்ளீஸ்..ரொம்ப போர் அடிக்கிது..”,சினுங்கினாள் ஷன்வி..

“பாப்பு தாத்தா கூட்டிட்டுப் போறேன் வாடா தங்கம்..”,என்றபடி அவளை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றார் ஷன்வியின் தாத்தா..

போகும் வழியெங்கும் அவள் காணும் அனைத்தையும் சுட்டிக் காட்டி அது என்ன இது என்ன என கேள்வி கேட்டு அவரை படுத்தி எடுத்துவிட்டாள் குழந்தை..

தாத்தா நம்ம தோட்டத்துல பனை மரம் இருக்கா..??”

“இருக்கு டா குட்டிமா..”

“என்னை அது இருக்கற எடத்துக்கு கூட்டிட்டு போறியா..??”

“அதுக்கென்னடா தங்கம்.. அங்க பாரு.. அதுதான் நீ கேட்ட பனைமரம்..”

“அது என்ன தாத்தா மரத்துல பானையை தொங்க விட்டிருக்காங்க..??”

“அது பதநீருக்காக குட்டிமா..”

“பதநீரா அப்படீனா..??”

“அது இந்த மரத்துல இருந்து கிடைக்கற ஒரு ஜூஸ்”

“மிக்ஸியில தானே ஜூஸ் செய்வாங்க..?? இவங்க ஏன் பானையை வெச்சிருக்காங்க..??”

“மிக்ஸியில ஜூஸ் போடற பழமெல்லாம் மரத்தில் இருந்து பறித்துக்கப்புறம் போடறது..ஆனால் பனை மரத்துல இருந்து மட்டும் தான் மரத்துல இருக்கறப்பவே ஜூஸ் போட முடியும்..”

“எப்படி தாத்தா..??”

“டூ டைப்ஸ்ல இந்த ஜூசை செய்யலாம் குட்டி..முதல் மெத்தட்.. பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதுல நாறையோ கயிறையோ கட்டி,அந்த பிஞ்சுடைய  வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக அந்த பிஞ்சோட ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) ஒழுகும்.. இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம்.. அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி..”

“நெக்ஸ்ட் மெத்தட் என்ன தாத்தா..??”

“முதல் மெத்தட் மாதிரி தான் இரண்டாவதும்.. என்ன ஒரு வித்தியாசம்னா சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க.. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் ரெடி.”

“இந்த பதநீர்னால என்ன யூஸ் தாத்தா..??”

“இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்.. பொங்கல் வைக்கலாம்.. கொழுக்கட்டை தயாரிக்கலாம்.. அவியல் அரிசி படைக்கலாம்..இந்த ஜூசை அப்படியே கூட குடிக்கலாம்.. யானை இருந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க அதே மாதிரி பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான்.. பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் அதனை பயன்படுத்தலாம்..”

“ஓ.. தாத்தா எனக்கு அந்த ஜூஸ் வேனும்..”,அடம்பிடித்தது குழந்தை..

“இரு கண்ணா இப்போ மரம் ஏற ஆளுங்க வருவாங்க.. உனக்கு கொண்டுவர சொல்லுறேன்..”

“சூப்பர் தாத்தா நீ..”,அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தது ஷன்வி..

வெகுநேரம் அவர்களை காக்க வைக்காமல் வந்து சேர்ந்தார் மரமேறி வடிவேலு..இரு கால்களையும் ஒரு கயிறால் பின்னிக்கொண்டு.. முதுகில் சிறு பை அதனை வயிற்றோடு பின்னிக் கொண்டு (இந்த பையிலதான் வெப்பென்ஸ் வெச்சிருந்தார்..அதாங்க கத்தி..)கண்ணிமைக்கும் நேரத்தில் மரத்தின் மேல் ஏறியவர் பிஞ்சு பனைகளை பிழிந்து பனம் பாலை அந்த பானைக்குள் சேமித்தார்.. தாத்தா கேட்டுக் கொண்டபடி பானையில் இருந்து கொஞ்சம் பாலை எடுத்து சிறு சம்பட்டதில் சேமித்தவர் விடிவிடுவென கீழ் இறங்கி அதைனை ஷன்வியிடம் தந்தார்..

ஆசை ஆசையாக அதனை பருக தொடங்கியவளின் முகம் அஷ்டகோணலாகி பிறகு சரியானது..

“என்ன தாத்தா இது.. குடிக்கும் போது ஒருமாதிரி டேஸ்ட் நல்லா இல்லை..ஆனால் இப்போ இனிக்குது..”,சப்புக் கொட்டினாள் ஷன்வி..

“அந்த டேஸ்ட் பேரு துவர்ப்பு டா.. குடிக்கறப்போ முதலில் கொஞ்சம் நல்லா இல்லாத மாதிரி தான் தெரியும்..குடிச்சப்புறம் தான் ஸ்வீட்னஸ் தெரியும்..”

“தாத்தா அப்பா ஒரு தடவை இதை சென்னையில் வாங்கி கொடுத்தாரு.. அது ஸ்வீட்டா இருந்துச்சு..”

“அப்போ அதுல சுகர் கலக்கி இருக்காங்கன்னு அர்த்தம்..”

“இதை குடிச்சா ரொம்ப நல்லதா தாத்தா..”

“ஆமா குட்டி.. பதநீர் உடல் உஷ்ணத்தை உடனே தணித்து உடலைக் குளிர வைக்கும்.. இதுல குழந்தைகளின் எடையைக் கூட்டும் சக்தியான இரும்புச்சத்து தயாமின், அஸ்கார்பிக் அமிலம், புரோட்டீன் இருக்கு..அதுமட்டும் இல்லாம உடலுக்குச் சக்தியைத் தரும் குளுகோஸ்.. எலும்பு, பல், நகங்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச்சத்து.. ரத்தத்தை விருத்தி செய்யும் ரிப்போ பிளோரான் சத்துனு நெறையா இருக்கு.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.