(Reading time: 3 - 5 minutes)

பொது - வேடிக்கை - கவிதாசன்

ஹா......என்ன வேடிக்கை இது... என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லையே...!!! Penguin, Rabbit, Fish, Monkey..... Oh...!!! Penguinஅ  நான் Happy Feet, Penguins of Madagascarல தான் பாத்திருக்கேன்... அதெல்லாம் Antarctic போன்ற Glaciers, Snow இருக்கிற இடத்துல தான இருக்கும்...??? Rabbit அ எப்போவுமே நான் துள்ளி குதிச்சி ஓடுறத பாத்து வியந்திருக்கேன்..., எப்படி இவ்வளவு வேகமா ஓடுது ...!!!! நீரின்றி அமையாது உலகு- இந்த வசனத்துக்கு ஏற்ப வாழ்வது தான் மீன்... ஆனால் இன்று நீர் இல்லாமல் எப்படி வாழ்கிறது...!!! மிகவும் ஆச்சரியமாகா உள்ளது.... இதெல்லாம் கூட என்னால் ஒத்துக்கொள்ள முடிகிறது... குரங்கு...???? மரத்தில் தானே அதன் விளையாட்டு...., ஆடல்..., பாடல்...., துள்ளல்....., இன்று எப்படி அமைதியாக உள்ள்ளது.......!!!!

         எனக்கு ஏன் இவ்வளவு ஆச்சரியங்கள் மனதில்....??? புதிதாக அப்படி என்ன கண்டுவிட்டேன்.....??? எல்லா இடத்திலும் உள்ளது தானே இவையெல்லம்...... ஆம்..., என்று நாம் கூறிவிடலாம்.... வித்தியாசம் இருக்கிறது..... என்ன பெரிதாக இருக்கபோகிறது...??? ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..., அதில் எந்த சந்தேகமும் இல்லை...., ஆனால் அது எல்லாம் தவறான இடத்தில உள்ளது.... தவறான இடம் என்றால் நம் வீட்டிலோ, அல்லது நெற்பயிரில் கோதுமை விளையும் களை போலும் இல்லை.... பிறகு என்னவாக இருக்கும்????

         நமக்கு பழக்கப்பட்ட ஒன்று தான்....., மனிதர்கே உள்ள தனி சிறப்பில் தான்..... என்னவென்று யோசித்தால்.., எது எதுவோ மனதில் தோன்றும்... அதில் பல சிறப்பு மிக்க தன்மையும் உள்ளது., பிறரை சீச்சி.... என்று முகம் சுளிக்க வைக்கும் தன்மையும் உள்ளது.... ஆனால் இது நமக்காக இனிய விலங்குகளை அதன் சிறப்பை மாசுபடுத்தும் ஒரு செயல்.... இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்... நாம் பார்த்த ஒன்று, நாம் நிரப்பும் ஒன்று, நம்மால் அதன் தூய்மை இழந்த ஒன்று... அதுதான் மேற்சொன்ன விலங்காய் காட்சிதரும் குப்பைத்தொட்டிகள்.... 

         ரோட்டில் நடந்து செல்லையில... குப்பைதொட்டி... Shopping Malls உள்ளே சென்றால் குப்பைதொட்டி..... Multi complexes உள்ளே சென்று பார்த்தால் குப்பைதொட்டி... சிறு பிள்ளைகள் துள்ளி விளையாடும் Parkக்கு சென்றால் அங்கே விலங்காய் கணபதி குப்பைதொட்டி என்று சொல்லித்தரும் வேடிக்கை.... அனைத்திலும் இருப்பது இந்த விலங்குகள்.... I wondered whether these animals throwing their waste in human pockets or they were maintaining human effigies.... சற்று சிந்திக்கவேண்டிய சூழ்நிலை என்று நான் எண்ணினேன்... குப்பை போடும் பழக்கம் இல்லாத ஒன்று குப்பை வாங்கும் ஒன்றாய் மாறிவிட்டது... எதற்காக???? இந்த விலங்குகளால் கவரப்பட்டு மனிதர்கள் குப்பையை கண்ட இடத்திலெல்லாம் போடாமல் நம்மில்போட்டு சுற்றத்தை தூய்மையாக வைக்கட்டும் என்பது போல் தொன்றுகிறது.... 

        குப்பைபோடுபவரே குப்பை வாங்குபவராய் இருந்தால் நாம் அனைவரும் அந்த விலங்குபோல் தான் நிற்கவேண்டும்.... Swatch Bharat என்று நம் சுத்தத்திற்கு ஒரு அரசாங்க திட்டம்.... எவ்வளவு முன்னேறிவிட்டோம் நாம்...!!! திட்டம் வகுத்து நம் சுற்றத்தை தூய்மையாக வைக்கும் அளவிற்கு....!! விலங்கு போல் நாம் நிர்கபோவதும் இல்லை..., விலங்குகள் நம்மேல் Defamation case போடுவதும் இல்லை... ஆனால் நாம் அனைவரும் "செயல் ஒருவருக்கு அதன் சுமை மற்றொருவருக்கு" என்று காலத்தை நகர்த்துகிறோம்... எண்ணுவோம் சற்று எதிர்நோக்கி... விட்டு செல்லுவோம் நல்தொரு சுற்றத்தை எதிர்காலத்திற்கு.... :-) :-). 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.