(Reading time: 3 - 5 minutes)

நகரத்தில் நான் - கவிதாசன்

Nagarathil naan

சுவாரசியங்கள், மகிழ்ச்சி நிறைந்ததுதான் வாழ்க்கை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்... அதை எந்த அளவிற்கு நாம் உணர்ந்திருப்போம் என்று என்னால் யூகிக்கமுடியவில்லை... ஏதற்காக யூகிக்க வேண்டும் ???? வாழும் போதே அதை உணர்ந்தால் ??? வாழ்க்கை இன்பமாக இருக்கும் அல்லவா ???

 சிரிப்பு...!! கேட்கையிலே சிரிப்பு வருகிறது அல்லவா .....?? மனிதர்கள் மட்டுமே சிரிக்க தெரிந்த மிருகம் என்னும் பாடல் என்னுள் தோன்றுகிறது... ஏன் இப்போது சிரிப்பை பற்றி பேசுகிறேன் என்று நினைகிறிங்களா ??? காரணம் உள்ளது... 

"இடம் பெருக நெருக்கம் குறையும்..." இதை எதை கொண்டுவேண்டுமனாலும் நிருபித்து காட்டலாம்.. "When the size of a particle increases its interatomic space decreases". சிறு வீட்டில் தாய், தந்தை, குழந்தை... இவர்கள் ஒரு அறை  வீட்டில் இருந்தால் அவர்களின் நெருக்கம் அதிகம், பழகும் நேரமும் அதிகம்.. ஆனால்  இன்று...... சற்று எண்ணி பாருங்கள்... நகரமயமான சமுகத்தில் ஒவ்வொறு குழந்தைக்கும் பெற்றோர்க்கும் ஒரு அறை... வாழ்கை அவர்களுக்குள் கொடுத்தல் வாங்கலோடு நடைபோடுகிறது.... Videogames, kids games என்று அறைக்குள் வாழ்கை....

சற்று உலாவி வர வெளியில் சென்றேன்... நகரம் அல்லவா... இருக்கும் இடத்தில்லெல்லாம் கடைகள், வீடுகள்.., போதாதென்று அவர்கள் weekends ஓவ்விற்காக Parks (Recreational centres).. சாலையை கடக்க கைவீசி நடக்க தொடங்கினேன்... டமாரென்று ஒரு Scooty என் மீது மோதியது... Sorry ணா பாக்காம வந்துட்டேன்னு  சொன்னேன்.... Scotty கண்ணாடி திரும்பியது... என்னவோ...., கை மட்டும் முன்னே சென்றதால் உடல் தப்பித்து கொண்டது... அவர் போனார்.... அண்ணா நான் பாத்துட்டு தான் வந்தேன்... இது One Way அவர் தப்பா வந்துட்டார் னு அருகில் வந்து என்னை விசாரித்த ஒருவரிடம் சொன்னேன்... நான் பாக்காமல் போனது இந்த பக்கம் வண்டி வரும் என்பது... Obey Traffic Rules Board மட்டும் கம்பங்களில் தொங்குகிறது ஆங்காங்கே....!!!! 

Fountains, Grass bed.., அழகிய காட்சிகள்... சாரல்... சில்லென்று இருந்தது.... சிரிப்பு சத்தம் காதில் வில சென்று பார்த்தேன்.... Wow Wow.....!!!!! "Birds of same feather flock together" என்பதற்கேற்ப குழந்தைகள் எல்லாம் ஒன்று கூடி விளையாடி சிரித்து கொண்டிருந்தர்கள்... வேற்றுமை இல்லை, ஏற்ற தாழ்வு இல்லை.... அற்புதம் அற்புதம்.... அங்கே ஒரு பெண் குழந்தை அதன் உயரத்தை விட பெரியதாக உள்ள கம்பி மேல் ஏற முயற்சித்து கொண்டிருந்தது.... எத்தனை அருமை...!!!! சிறந்த பாடங்கள் சொல்லி கொடுப்பது குழந்தைகளே..!!!!! சற்று சிந்தித்தேன்... என்ன ....??? ஏன்...??? 

எப்பொழுதும் குழந்தைகள் தங்கள் நிலையில் அப்டியே இருந்துவிடுவதில்லை... அடுத்து என்ன... அடுத்து என்ன....அடுத்து என்று புதுசு புதுசா சிறு விஷயங்கள் செய்வது அவர்களின் குணாதிசயம் என்று உணர்ந்தேன்.... பிள்ளைகளாய் இருந்து தான் பெரியவர் ஆனோம்... வளர்ந்தோம்... ஆனால்... ஆனால் .... கட்டுபாடுகள் கட்டிபோட்டு வளர்த்து விட்டது.... இங்கே சிரிப்பு உள்ளது, சுவாரசியங்கள் உள்ளது... கண்டு மகிழ்ந்தேன்....:-):-). எண்ணி நெகிழ்ந்தேன்...:-):-)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.