(Reading time: 3 - 5 minutes)

நாடு அதை நாடு - கவிதாசன்

ந்தியா 2020 ல வல்லரசு ஆயிடும்னு யாரோ சொன்னதா நியாபகம் இருக்கு... நம்ம எல்லாருக்குமே உடனே மனசுக்குள்ள ஒரு பெரிய கேள்வி தோணும்... இதெல்லாம் நடக்கற காரியமா.....??? 10 வருசமா இததான சொல்லிட்டு இருகாங்க... இந்தியா வல்லரசு ஆகுதோ இல்லையோ இங்க இருக்கிற ஒரு சிலர் சீக்கிறம் Crorebathis ஆயிடுறாங்க. இந்தியா... ஆசியா கண்டத்தில் ஒரு துனைகண்டம் என்று சொல்லும் அலவிற்கு பெரிய நாடு.. 

ஒரு நாட்டின் சொத்து எது?? 

அந்நாட்டின் வளங்களா..?? அப்படி எண்ணிப்பார்த்தால் வளங்கள் சற்றே உள்ள நாடுகள் முன்னேறி உள்ளதே... அந்நாட்டின் இயற்கை சூழலா?? இயற்கையே அந்நாட்டின் அச்சுறுத்தலாய் உள்ள நாடும் முன்னேறியுள்ளதே... ஆதியிலே சேர்த்துவைத்த செல்வங்களா?? ஆதியில் நாடாகவே இல்லாத ஒன்று இன்று World Power என்று மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செய்யவில்லையா?? வேறு என்னவாக இருக்க முடியும்???

Naadu athai naaduநாடு என்று ஒன்று இருக்க முக்கிய கூறுகள் என்ன??? 

வரையறுக்கப்பட்ட எல்லைகள், தன்னாட்சி சுகந்திரம், இவற்றைவிட அடிப்படையானது அதன் மக்கள்.. ஒரு நாட்டின் சொத்து மக்கள்.. அதன் தொகை எவ்வளவுவாக இருந்தாலும், அவர்களின் ஈடுபாடின்றி Growth is impossible.. 

"ஒப்பிடுவது தவறான செயல்" சில மகான்கள் சொல்லை படித்திருக்கேன்.. நேற்று, இன்று, நாளை இவை அனைத்திலுமே ஒன்றாக வருவது காலம்.. இதை சற்று உற்று பார்த்தால் காலம் 24மணிநேரம் தான் ஆனால் அதன் விளைவாய் உண்டான வளர்ச்சி காலம்தாண்டி வாழ்பவை.. சோழர் காலத்து கோவில் இன்றும் பெரிதும் போற்றப்படவில்லையா?? பல்லவ காலத்து சிற்பங்கள் இன்றும் வியபூடவில்லையா?? தொன்மை நூல்கள் இன்று பல நூல்களுக்கு அடிப்படையாய் இல்லையா?? இவை அனைத்திலுமே இன்று நாம் காண்பது இன்றோடு ஒப்பிட்டு பார்க்கும் செயல்... ஏன்????

இன்று அவைகள் போல் வியப்பூட்ட நம் படைப்புகள் இல்லை... ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக பார்கிறேன்... 

மக்கள்தொகை பெருகிவிட்டது.. நாட்டின் GDP உயரந்ததாக சொல்கிறார்கள்.. But where is Development... Growth is taking place without Development... ஒரு உவமை எடுத்து கொள்வோம்... "எறும்பு ஒரு சிறிய உயிரினத்தை சார்ந்தது... அதன் உருவமும் அவ்வாறே... ஆனால் அதன் செயல் அதன் பலத்தை தாண்டி... Individual ability is excelling whilst Team ability is fascinating...” இதை தான் நாம் கற்று கொள்ளவேண்டிய பாடம்... 

வளர்ச்சிக்கு நம் ஒவ்வொருவரின் ஈடுபாடும் அத்தியவசமனது.. முன்னேற்றத்திற்கு ஒற்றுமை என்னும் Cooperation அவசியமானது.. சிறு எறும்பு என்று எண்ணுகிறோம் அதன் செயல்கள் பள்ளிபாடத்தை அனுபவமாய் காட்டுகிறது.. "பாதை தவறாத பயணம், தவறினாலும் மீண்டும் வரும் பண்பு... சோர்வடையாத குணம்.." இடையூறு ஏற்படினும் அதை அற்புதமாய் அணுகும் முறை... இப்படி ஒவ்வொரு உயிரினமும் மனிதனுக்கு ஒரு பாடமாய் எடுத்து சொல்கிறது அதன் வாழ்கைமுறையை.. 

"We have renovated ourselves as well as we have to Reform each of us... Then Growth and Development are not faraway Dream... ஒவ்வொருவரும் உழைப்போம்... வேறுபாடினை தகர்ப்போம்... ஓற்றுமையை எடுத்துரைப்போம்...."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.