(Reading time: 4 - 8 minutes)

மனிதனோ? மிருகமோ? - கவிதாசன்

Why the Apple has fallen down???? Newton னின்  கேள்வி..... 

Law  of Gravitation பிறந்தது.... பள்ளி பாடம் எனக்கு கற்று தந்தது...

"பறவையை கண்டான் விமானம் படைத்தான், எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்" இந்த பாடலை நான் கேட்கையில் மனிதன் கண்டுபிடித்த அனைத்திலும் இயற்கை இயந்துள்ளது என்பதை பாடலின் மூலம் கேட்டுணர்ந்தேன்.... 

Pigeon"பறவையை பாரு காலையில் விழிக்கும், காக்கையை பாரு கூடி பிழைக்கும்...., நம்மையும் பாரு நாடே சிரிக்கும்...." MGR நடிக்க இப்பாட்டை கேட்டு இருக்கேன், பார்த்தும் இருக்கேன்.... ஆனால் இந்த இடத்தில்  எனக்கு சிறு சஞ்சலம்  உண்டானது.... ஏன் ஒரு கவிஞரின் பாடல் மனிதனை பார்த்து மனிதனே சிரிப்பான் என்று குற்றம் சாற்றுகிறது  என்று....

காகம், புறா, நாய்... இவை எல்லாம் நமக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லும் அளவிற்கு அருகில் வந்தும், நம்மோடே கலந்த ஒன்றாய் உள்ளனவை...

பல கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன Newton ஏதோ ஒன்றை புதிதாக சொல்லவில்லை.. இயற்கையில் உள்ளதை, பிறர் கண்டு அதை விட்டு சென்றதை இவர் ஏன் என்று கேள்வி எழுப்பி அதற்கும் இவரே பதில் அளித்த நிகழ்வு தான் இன்றுகாதல் முதல் விஞ்ஞானம் வரை Gravity என்னும் தத்துவத்தை சொல்ல பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தியது... இவரும் மனிதன் தான்.... இப்படி காலம் கடந்து போற்றப்படும் உருவங்கள் உள்ளனர்....

சனிக்கிழமை ஆனா சிலர் கா கா என கத்தி காக்காவை கூப்டு சோறு வைப்பாங்க... அதே நேரம் அவர்கள் ஏதேனும் உலர்த்த தரையில் போட்டு இருக்கையில் காகம் வந்தால்..., சீ ..., போ ... என்று விரட்டுவார்கள்... சரி.., அது எப்படி இருந்தால் நமக்கென்ன.., மனிதர்களின் வாழ்வும், சிந்தனையும், தேவையை ஒட்டி தானே இருக்கு... Demand and Supply run the life and drive the Economy... இந்த காகம் ஏன் கவிஞரின் பார்வையில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியது....?? நம்மிடம் இல்லாதது அது இடம் என்ன இருக்கு??? 

கா  கா  கா  கா... என்று கூப்பிட்டால் தான் மட்டும் வருவதில்லை....தன் இனத்தோடு அவை வந்து அமர்ந்துண்ணும்.. தன் இனத்தவர் தவறினால் கூச்சலிட்டு அனைவரையும் அழைக்கும்... இதை கண்டு தான் கவிஞர்காக்கையை பாரு கூடி பிழைக்கும் என சொல்லி இருப்பார் போலும்... அப்படி என்றால் நாம் எல்லாம் ஒற்றுமை இன்றி வாழ்கிறோமா??? என கேள்வி மனதில் தோன்றலாம்...?? எனக்கும் தோன்றியது... அருகில் List of Castes in India என்ற சிறு நூல்  இருந்தது..., அதை கண்டேன்...., மௌனம் தான் எனக்கு மிஞ்சியது....

அங்க பாரு.... எவ்ளோ அழகா இருக்குல...!!!! 

இன்றைய நகரத்தில் வாகனங்கள் போட்டிபோடுவது போல் இரண்டு பேருக்கு பெரும் போட்டி.... ஒருவர் வென்று அழகா Settle ஆயிட்டார்.. அவர்தான் புறா.. தோற்றவர் சிட்டு குறவி.... இடம் தேடி அலைகிறார்.... வீட்டில் புறா வளர்ப்பதும், படத்தில் புறாக்கு தானியம் இட்டாலும் நாம் அழகாக ரசிக்கிறோம்....!! அதை விட பெரிய மகிழ்ச்சி....??? என்ன...????  

காதல் ஜோடி அருகே நெருங்குகையில் இரு மலரோ...., அல்லது இரு புறாவோ முட்டிகொள்ளும்.....!!! கற்பனை.....:-). என் நண்பர் ஒருவர் சொன்னார் இரு புறாக்களை கண்ட பொழுது I remembered my Love னு... சிரிப்பு வந்தது.... மனிதன் தான் நாகரிகத்தின் அடையலாம் என்று மார்தட்டி கொள்ளும் இக்காலத்திலும்.., நாம் விலங்குகளையும் , பறவைகளையும்  கண்டு ஒப்பிடூ செய்கிறோம்.... ஏன் நம்மில் யாரும் அடையாளம் காட்டும் அளவிற்கு காதலை சொல்லவில்லையா???? அல்லது காவியத்தை கேட்டு, அதெல்லாம் உண்மையோ... பொய்யோ.., என்று எண்ணுகிறோமோ???

மனிதர்களில் இருக்கும் அடையாளம் பல நேரம் மறந்து விடபடுகிறது..... 

“உன்ன பெத்ததுக்கு ஒரு நாய பெத்து இருந்தா வாலாட்டிட்டு கூடவே சுத்தும்" பல இடத்தில்  கேட்டு இருக்கேன் பெற்றோர் சொல்ல.... நாய் மனிதற்கு பிள்ளையாய் பிறக்கபோவதில்லை.. அதன் வாலும் நிமிர போவதுமில்லை... ஆனால், நம் அனைவருக்கும் நாய் என்றால் கொள்ள பிரியம்... ஏன் ??? அதன் விசுவாசம் தானே...!! நாம் பல இடங்களில் வார்த்தையை தவறாக பயன்படுத்துவதுண்டு... "நன்றி கெட்ட நாயே" என்று மனிதனை பார்த்து சொல்வோம்... இது மட்டுமா...??? திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி சண்டை போடுவதை கண்டால்...., "நாய் மாறி அடிச்சிகிராங்கா பாரு" என்பார்கள்... எந்த நாயை கண்டார்கள் அவ்வாறு????  இதனால் தான் என்னவோ பல நாய்கள் மனிதரை கண்டாலே சினத்தோடு பார்க்கிறது போலும்.., "என்னை பார்த்து நன்றி கேட்டவன் என்கிறாயா"  என்பது போல்.. அணைத்து சொற்களுக்கும், நம் செயல்களுக்கும் விலங்குகள்  தான் இருக்கிறதா??? மனிதர்கள் இல்லையா????

 "Human is the Civilized animal/ Social animal" என Immanuel Kant சொல்லை படித்திருக்கிறேன்... இன்று Civilized / Social அந்த தொடரில் இருந்து காணமல் போக விலங்கு மட்டும் உள்ளது.., அவற்றிலும் விலங்கோடு ஒப்பிட்டால் நம் குணம் முழுமையும் காணமல் போய்விடும்.. பூமியிலே ஒரு இனம் உண்டு... மனித தன்மை என்னும் குணம் உண்டு.. அதுவே  எக்காலமும் கடக்கும் கருவி... மனித தன்மை நீங்கினால் நாம் எங்கே???? தேடுவதற்கு ISRO Satellites வராது NASA வும் இருக்காது.... செயல்கள் பல புரிகையில் மனிதனை சக மனிதன் போற்றிடுவோம்... அவர் அவர் தத்தம் சிறந்தவர் என்பதை உணர்த்திடுவோம்..:-) :-).

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.