(Reading time: 4 - 7 minutes)

இருக்கை யாருக்கு??? - கவிதாசன்

"பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே... உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்சிகள் உள்ளதனலே...."

பயணங்கள் என்றும் முடிவதில்லை, வாழ்க்கையில் கற்றல் என்றும் ஓய்வதில்லை.. 

வெயில் மண்டைய பொலகுதுட சாமி.... நாட்ல மழையால தான் பஞ்சம், வெயிலுக்கு பஞ்சமே இல்ல... இந்த நேரம் பாத்து தாம்பரம் போற ஒரு Bus கூடம் இல்ல.. 

Busபெரியவர் ஒருவர்:  தம்பி, வேளச்சேரி போற Bus வந்தா சொல்ரியப்பா...?

சரிங்க.. 70 D போகும்.. சற்று நேரத்தில் நான் போகவேண்டிய இடத்துக்கு Bus வந்துடுச்சு.., அவரிடம், நா கெளம்பறேன்.., நீங்க 70 D ல ஏறுங்க... 

பெரியவர்: சரிப்பா...

(மனசுக்குள்)ஜன்னல் ஓரம் சீட்டு இருந்தா நல்லாயிருக்கும்.. நல்ல வேல சீட்டு இருக்கு... 

பேருந்தில் கடைசி சீட் முழுவதும் ஆண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.. நான் பொதுவாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன்... Koyambedu பேருந்து நிலையத்தில் ஒரு பெண் ஏறி அமைதியாக நின்றிருந்தார்.. Smartphone, handbag இவற்றை காணும் போது படித்து, வேலை பார்க்கும் பெண் போல் தோன்றிற்று..  எல்லா இருக்கையிலும் ஆட்கள் இருந்தனர்..., கடைசி இருக்கையிலும்.. She doesn't ask anything.. அடுத்த நிலையத்தில் அவளுக்கு இடம்கிடைக்க அமர்ந்தாள்... Ashok Pillar நிலையத்தில் ஒரு அம்மா (சற்று வயதானவர்).. நடத்துனரிடம் கேட்டார், "இந்த கடைசி சீட் ladies க்கு தான, அவங்கள இடம்விட சொல்லுங்க"என்று.... 

நடத்துனர்: Sir, எந்திரிங்க.. இது ladies சீட்டு.. 

பயணி: அப்போ Gents க்கு சீட்டு இல்லையா??? Common Seat என்பதை அறியாத அவர் சொன்னார், இந்த side ல இருக்குற ladies ஆ எந்திரிக்க சொல்லுங்க.. 

நடத்துனர்: எங்க, ஆண்கள் னு போட்டு இருக்குற சீட்ட காமிங்க...??

( He had whistled and stopped the bus...) அந்த அம்மா கேட்குறாங்க, அவங்களுக்கு உரியத தருவதற்கு தான் நா இருக்கேன்...நீங்க போய் அரசாங்கத்துகிட்ட கேளுங்க.. அந்த அம்மா அமர்ந்த பின்னே மற்றும் பல பெண்கள் இருக்கையில் அமர்ந்தனர்...

இந்த சம்பவத்தை காணும் பொது, I remember the Story of Rosa Parks who refused to give up her seat to a White Man but she was forced to do that. Consequently, she had led Civil Rights Movement..  ஆனால் இங்கே பெண்ணுக்கு என்று ஒதுக்கிய இடத்தை ஆண் மறுப்பது... எனக்கு நன்றாக புரிந்தது..., எதற்கு பெண் உரிமை என்ற போராட்டமெல்லாம்... On this 21st century I'm witnessing a subjugation attitude of the so called male dominant society... 

படித்த பெண்: Hello, என்ன பேசுறிங்க??? இது Ladies seat... 

நான் ஆச்சிரியத்தோடு திரும்பி பார்த்தேன்... இவர்களா பேசுவது..., ஒரு கேள்வியும் கேட்காமல் நின்றவள் இப்பொழுது வாய் திறக்கிறாள்...  

Excuse me.. நீங்க work பண்றிங்களா???

படித்த பெண்: ஆமா... 

என்ன படிச்சி இருக்கீங்க??

படித்த பெண்: M Sc Cyber Crime.. எதுக்கு கேட்குறிங்க???

நீங்க ரொம்ப நேரம் நின்டு தான வந்திங்க.., அப்போ கேட்கவே இல்லையே.. இப்போ திடிர்னு பேசுநிங்க, "Ladies க்கு Reserved seat னு.." ஏன் நீங்க அப்போ கேட்கல??

படித்த பெண்: Usually, நா யாரட்சும் உட்கார்ந்து இருந்தா கேட்கமாட்டேன்... 

"உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனலே....."     Equality என்ற ஒன்றை நிலைநாட்ட  Reservation என்று ஒன்று.... ஆண்களே பெரியவர்கள், அவர்கள் முன்பு தலை குனிந்து நடக்க வேண்டிய, அவர்கள் அமர்ந்தால் இவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒன்றை உடைத்து.., பெண் பேருந்தில் சரிசமமாக அமர்வதுக்கு வழி செய்தது மட்டுமின்றி ஒரு உரிமை என்றே நிலையானது... வீட்டை விட்டு வெளியே போகாத பெண்கள் வேலைக்கு போக ஒரு துணையாய் உள்ளது.. அஞ்சி அஞ்சி வாழும் பெண்கள் அஞ்சாமல் சென்று வர பேருந்து பயணம் அமைய வழி வகுத்தது, நடத்துனர் துணைபுரிய.... 

         வீட்டுக்குள்ளே அமர்ந்து திருமணம் செய்து, அங்கேயும் வீட்டுக்குள்ளே இருப்பதுதான் பாதுகாப்போ??? இல்லை..., எங்கு, எப்பொழுது சென்றாலும் தன் உடலுக்கும். மனதுக்கும், சுய மரியாதைக்கும் எந்த அட்சுருத்தலும் இன்றி வாழ்வது தானே பாதுகாப்பு..., சுகந்திரம்... இவை அன்றி வேறு என்ன சுகந்திரம்.. பேசாமல் போவதால் பிரச்சனை இல்லை... பேசாமலே சென்றால் உரிமையே இல்லை... பேசி பேசி வந்ததுதான் சுகந்திரம்... உள்ளதை கேட்டு, உரியதை பெறுவோம்.. 

    "ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை" ஒரு அழகிய பாடல், அதன் உண்மை பொருளை உணர்ந்தால் அற்புதமான மாற்றங்கள் தோன்றும்.. 

        இருக்கைகாக ஒரு கதை என்று இல்லை இது... நாம் வளர்ந்துவிட்டோம், சமுதாயம் முன்னேறிவிட்டது, ஆணும் பெண்ணும் சமம், இங்கே வேறுபாடில்லை என்று நினைப்பில் பூசப்பட்ட கரை... Surf excel போடுவோமோ  அல்லது Rin போடுவோமோ தெரியவில்லை அந்த கரையை போக்க.. ஆனால் அது நீங்க வேண்டும்.. நான் கண்ட நிகழ்வு கனவாய் கூடம் தோன்றாமல் இருக்க செய்வோம்... ஆண் நான் பெண் நீ.., வேற்றுமை உடலால் மட்டுமே... உண்மை நாம் அனைவரும் ஒருவரே... மாற்றங்கள் மனங்களிலே உண்டானால் மகத்துவம் கண்முன்னே.... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.