(Reading time: 3 - 6 minutes)

சண்டைகள் வேண்டாம்... - டோனா

Peace

ன்ன கேட்கிறோம் நாங்கள்.. அமைதியை தானே.. போர் வேண்டாம்.. சண்டைகளும் வேண்டாம்.. எல்லையில் பதற்றங்களும் வேண்டாம்.. 

இங்கே உட்கார்ந்து குழந்தையைக் கொஞ்சி,, மனைவியை சீண்டி,, அப்பா அம்மாவிடம் செல்லம் கொண்டாடி எல்லோரோடும் சேர்ந்து உணவு வேளையில் நன்றாக உட்கார்ந்து சாப்பிடும் யாரேனும் ஒருவர் நினைப்பனரோ.. எல்லையில் நம்மைக் காக்க போராடுவோரை...???

பெரிதாக எதும் கேட்கவில்லை.. சிரித்து மகிழும் வேளையில் ஒரு நிமிடம் மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொள்ளுங்களேன்.. எல்லையில் இருக்கும் வீரர்களின் முகத்தில் ஒரு நொடிப் பொழுதேனும் புன்னகை உறைய வேண்டும் என..

ஒரு வருடத்தில் இந்திய எல்லையில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 90-ஆம்.. உங்களுக்கே தெரியும்.. பதற்றத்தைத் தணிக்க எண்ணிக்கையை பாதியாய்க் குறைத்திருப்பர் என்று..

டிசம்பர் 1, இந்து நாளிதழின் ஏதோ பக்கத்தில் ஒரு புகைப்படம்.. அதாவது ஒரு செல்பி.. கணவன் மனைவி.. அதில் அந்த கணவனின் கையில் இருந்த பிஞ்சு தன் அப்பாவின் காதைப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது.. இன்று அந்த அப்பா வீரமரணம்.. அப்பிஞ்சுக்கு என்னப் புரியும்..?? என்ன புரிந்திருக்கும்..

மீசைக் குத்த அப்பா முத்தம் கொடுத்து பிரிகையில் ஏதும் புரியாது கையை ஆட்டி விடைக் கொடுத்திருக்கும் அப்பிஞ்சு.. உலகம் புரியும் வயது வரும் வரை அதற்கு புரியாது தன் அப்பாவை இனி காண இயலாது என.. இது ஒரு சம்பவம் தான்..

யோசித்துப் பாருங்கள்.. இப்படி எத்தனை சம்பவங்கள்..?? எத்தனை இழப்புகள்..?? எத்தனைக் கதைகள்..?? எத்தனைக் கண்ணீர்கள்..??

தன் பிள்ளைத் தன்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் ஈன்றெடுத்து வளர்த்த மகன் இன்று நாட்டைக் காப்பாற்றச் சென்றுள்ளான் என பெருமகிழ்ச்சிக் கொண்டு தன் நரைத்த மீசையை முறுக்கிக் கொண்டு தன் கிராமத்தில் கெத்தாக வலம் வந்த அவன் அப்பா...

செல்லமாய் வளர்த்து,, தோழியாய்த் தோள் கொடுத்து,,பிரிவை ஏற்க முடியாமல்,, கண்களில் துளிர்த்த கண்ணீரை மறைக்க வழியின்றி,, அது வெளிநடப்பு செய்ததையும் அறியாமல் தன் மகன் செல்வதையே பார்த்து நின்ற அவன் அம்மா..

சின்ன சின்ன சண்டைகளிட்டாலும் அதில் இருந்த பாசத்தை ருசித்து,, வலியில்லா குட்டுகளை ரசித்து,, வழி மாறுகையில் கரம் பிடித்து வழிநடத்திய நாட்களை அசைப்போட்டப்படி கலங்கிய விழிகளுடன் விடைக் கொடுத்த அவன் தங்கை..

இப்படி எத்தனையோ... 

அவனது சொல்லப்படா காதல்கள்...

காதல் கனிந்து அடுத்த கட்டத்தை எதிர்நோக்கிய அவன் கனாக்கள்.. 

மஞ்சள் காய்ந்திடா அவன் மனைவியின் தாலி.. 

வளர்ந்தும் குழந்தையாய் பிரிவுத் துன்பத்தில் சிணுங்கிய அவளது குரல்.. 

இன்னும் அவன் காணாத பிஞ்சின் முகம்... 

அவன் மறுபடியும் கேட்க விரும்பும் அவன் குழந்தையின் மழலை இசை... 

எக்கணத்திலும் தோள் கொடுத்து தாங்கிய அவன் தோழனின் சந்திப்பு..

எக்கட்டத்திலும் அவன் உயர்வை மட்டும் விரும்பிய அவன் தோழியின் மடல்... 

இப்படி அவன் அனுபவிக்க ஆவலோடு காத்திருக்கும் சுகங்கள் எத்தனை எத்தனையோ...

அனைத்தும் தகர்க்கப்பட்டதென்னவோ ஒரு வினாடியில் தான்.. ஆனால் எதைக் குறித்தும் கவலைப்படாமல் தான் சுடப்பட்டாலும், தலைத் துண்டித்துக் கொல்லப்பட்டாலும், கொடுஞ்சிறையில் கொடூரமாய்க் கொல்லப்பட்டாலும் சாகையில் "நான் நாட்டுக்காய் என்னுயினை ஈந்தேன்" என்ற பெருமிதத்தில் தன் இறுதி மூச்சை அனுபவித்து ரசித்து விடுவான் அவன்..

சல்லிப்பைசா பெறாக் காதலுக்காய் காதலியையும் ஏன் குடும்பத்தையே கொலைச் செய்யத் துணியும் மனித மிருகங்களையும்,, பண முதலைகளையும்,, கொடூர பிசாசுகளையும் காத்தது போதும்...

இனியேனும் எங்களுக்காய் இன்னுயிரை ஈய்வதையும் வரமாய் எண்ணி எங்களைக் காக்கும் எங்கள் சகோதரனை,, மகனை,, நண்பனை,, அப்பாவை,, துணைவனைக் காக்க வேண்டி அமைதியை யாசிக்கிறோம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.