(Reading time: 2 - 3 minutes)

02. விசித்திர உலகம் – நாய்களுக்கு நன்றி...

ரொம்ப கார சாரமா ஆரம்பிச்சோம், இந்த தடவை ஒரு பீல் குட் விஷயம் படிப்போம்...

டிசம்பர் மாத தொடக்கத்தில் கனடாவை சேர்ந்த மோனிக் ஏட்டியெனின் செல்ல நாய்கள் கிரா, சான்சி இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வீட்டில் இருந்த சாக்லேட் பிஸ்கட் டப்பாக்களை கிழித்து எடுத்து சாப்பிட்டு வீட்டையே பிஸ்கட்டால் துவம்சம் செய்தன....

தன் சுட்டி நாய்களின் மீது கோபம் வந்த போதும் அதை காட்டிக் கொள்ளாமல், வீட்டின் கார்பெட்டை சுத்தம் செய்ய, தன் கணவர் கிறிஸ்டியனிடம் ஒரு கார்பெட் கிளீனரை வாங்கி வர அனுப்பினார் மோனிக்

கடையில் இருந்த போது, கிறிஸ்டியன் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்க முடிவு செய்தார்...!

அந்த லாட்டரி டிக்கட்டின் மூலம் அந்த தம்பதியினர் இப்போது 90 கோடி ரூபாய் வென்றுள்ளனர்!

ஆச்சர்யப் படும் விதமாக அந்த தம்பதியினர் இருவருமே தொடர்ந்து வேலைக்கு செல்வது என்று முடிவெடுத்துள்ளனர்...!

மாற போவது அவர்களின் அக்கவுன்ட்டில் இருக்கும் பணம் மட்டுமே அல்லாமல் அவர்கள் வாழ்க்கை முறையல்ல என்று சொல்லி இருக்கிறார்கள் இருவரும்...

திர்ஷ்டத்தை தேடி தேடி, ஒரு நாளுக்கு பத்து பதினைந்து லாட்டரி டிக்கட்கள் வாங்கி குவிக்கும் மக்கள் இருக்க, பேருக்கு லாட்டரி வாங்கிய கிறிஸ்டியனுக்கு யோகம் அடித்துள்ளது...!

கிறிஸ்டியன் அந்த கடை அன்று செல்ல காரணமாக இருந்த அந்த நாய்கள் மீட்கப்பட்ட விலங்குகள் என்பது குறிப்பிடதக்கது.

அதிர்ஷ்டம் கூட ரிசெர்ச் வேலை எல்லாம் செய்து தான் வீட்டு கதவை தட்டும் போலிருக்கிறது.

Dogs

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.