(Reading time: 2 - 4 minutes)

உங்களுக்கு தெரியுமா பாலை எப்படி காய்ச்சனும்னு..?

Boiling milkல்லத்தரசிங்களே உங்களுக்கு பால் காய்ச்ச தெரியுமானு யாராவது கேட்டா இது என்ன கேள்வி? பால் கூடவா காய்ச்சத் தெரியாது? அது என்ன பெரிய விஷயமா? என்று சாதாரணமாகக் கேட்பார்கள்.

அப்படி கேட்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா தோழிகளே?

நீங்கள் எப்படி பால் காய்ச்சனும்னு உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன் தருகிற தகவல்களைப் படித்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு தெரியும் பால் காய்ச்சுவதன் அருமை என்ன என்று.!

  1. பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம்.
  2. காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.
  3. கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண்தான்.
  4. பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
  5. இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின் தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.
  6. பாலைக் காய்ச்சியதும் குடித்து விடவேண்டும். பாலை ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். பொதுவாக, எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சுடவைக்க வேண்டாம்.
  7. ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிட்ஜில் வைக்கலாம். காபி, டீ எனத் தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்துத் தயார் செய்யலாம்.

இனியாவது பால் காய்ச்சும் போது சத்துக்களை அழித்துவிடாமல் ஒழுங்காக பால் காய்ச்சலாம் தோழிகளே.

Disclaimer - This is an article that was received as a forward! We do not claim any rights on this content.

Sharing to spread the useful info to our readers!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.