(Reading time: 3 - 5 minutes)

ஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 05 - தங்கமணி சுவாமினாதன்

Aanmigam

1.நதிகளில் நீராடும்போது ஜலம் வரும் திசை நோக்கியும்,குளம் ஏரி,கிணறுகளில் நீராடும் போது சூரியனை நோக்கியும்,கோயிலின் குளத்தில் நீராடும் போது கோயில் இறைவனை நோக்கியும் நீராட வேண்டும்.

2.எண்ணை ஸ்னானம் தீபாவளி தவிற மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்கு முன் செய்யக்கூடாது.

3.சுவாமியிடம் மற்றும் கோயில்களில் எரியும் விளக்கின் திரி,எண்ணை,எரிந்த திரி இவற்றைக் விரலால் தொடக் கூடாது,ஏதாவது சிறு குச்சிகளையே பயன் படுத்த வேண்டும்.

4.மனிதன் ஆயுளை விரும்பினாலும்,செல்வத்தை விரும்பினாலும், மோட்சத்தை விரும்பினாலும் எப்போதும் விபூதியைத் தரிக்க வேண்டும்.

5.விபூதி ப்ரஹாசப் படுத்துவதால் "பஸிதம்"எனவும்,பாபத்தைப் போக்குவதால் "பஸ்மம்"எனவும், செல்வத்தைத் தருவதால் "பூதி" எனவும் நம்மை ரக்ஷிப்பதால்" ரக்ஷை" எனவும் வழங்கப்படுகிறது.

6.வீட்டில் 6 அங்குலத்திற்கு மேல் உள்ள சிலைகளை வைத்து பூஜிக்கக் கூடாது.

7.பிரதோஷம்,மாதப்பிறப்பு,சிவராத்திரி,நவராத்திரி,தட்சினாயண,உத்திராயண,பௌர்ணமி, அமாவாசை போன்ற புண்ணிய காலங்களில் கோயிலுக்குச் செல்வதும் பூஜைகள் செய்வதும் மிகுந்த பலனைக் கொடுக்கும்.

8.பசுவிற்கும் கன்றிற்கும், தம்பதிகளுக்கும், குரு சிஷ்யர்களுக்கும், சிவன் நந்திக்கும், செம்மறியாடுகளுக்கு இடையேயும் போனால் செய்த புண்ணியங்கலெல்லாம் போய்விடும்.

9.ஸ்த்ரீகள் பூஷணிக்காயை உடைத்தல் கூடாது.

10.பசுவின் பின்புறம், யானை, ஆடு, குதிரைகளின் முகம், சுமங்கலிப் பெண்கள் எப்போதும் சுத்தம்.

11.சங்கு, தங்கம், மணி, வெற்றிலை, முத்து, சந்தனக்கட்டை இவற்றை பூமியில் வைக்கக் கூடாது.

12கோயிலில்.ஸ்வாமிக்கு அபிஷேகம் நடக்கும் போதும் திரையிடப் பட்டிருக்கும் போதும் ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் செய்தல் கூடாது.

12.வினாயகர்,முருகன், சிவன்,அம்பாளுக்கு----மூன்று முறையும்

விஷ்ணுவுக்கு--....நான்கு முறையும்

சன்யாசிகளுக்கு---நான்கு முறையும்

மனிதர்களுக்கு-----ஒரு முறையும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

13.ஸ்னானம் செய்யாதவரையும், படுத்திருப்பவரையும்,சாப்பிடுபவரையும்,ஜபம் செய்பவரையும், குழந்தையைக் கையில் வைத்திருப்பவரையும் நமஸ்கரித்தல் கூடாது.

14.பந்தியில் அமர்ந்து சாப்பிடும்போது மற்றவர் சாப்பிட்டு முடிக்கும் முன் எழுந்திருக்கக் கூடாது. அப்படி எழவேண்டுமெனில் நான் எழுந்து கொள்கிறேன் எனச் சொல்லி விட்டு எழவேண்டும்.இல்லா விடில் மற்றவர் செய்த பாபம் வந்து சேரும். (பக்கத்திலிருப்பவர் காது படவாவது சொல்லவேண்டியதுதான்.. கத்தவா முடியும்?)

15.ஸ்த்ரீகள் அங்கப் பிரதக்ஷிணம் செய்தல் கூடாது.(??????)

***ஆன்மிகம் தரும் குறிப்புகள் இன்னும் நிறைய இருக்கிறது ,ஆயினும் தற்கால நடைமுறை வாழ்க்கையில் அவ்ற்றையெல்லாம் பின்பற்றுதல் இயலுமா என்ற சந்தேகத்தில் அவற்றை விட்டுவிடுகிறேன்.

மந்திர,தந்திரக் கதைகளுக்கு எக்காலத்திலும் மவுசு உண்டு. இக்கதைகளில்வரும் மந்திரவாதியின் உயிர் 7 கடல்,7 மலை,7 தீவு தாண்டி ஒரு மரப் பொந்தில் இருப்பதாகப் படிபோம்.அப்படி 7 கடல், 7 மலை,7 தீவு இருந்ததா? ஈரேழு பதி நான்கு உலகம் யாவை?அடுத்த முறை பார்ப்போமா?

நன்றி....

ஆன்மிகம் வளரும்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.