(Reading time: 3 - 5 minutes)

ஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 03 - தங்கமணி சுவாமினாதன்

Aanmigam

1.ஸ்முத்திரம்,கங்கை,சேது முதலிய புண்ணிய தீர்த்தங்களில் வீட்டிலோ மற்ற இடத்திலோ முதலில் ஸ்னானம் செய்த பிறகுதான் ஸ்னானம் செய்ய வேண்டும்.

2..நடுத்தர வயது பெண்கள் சிலர் ஏகாதசி விரதம் அனுஷ்ட்டிப்பது உண்டு.மாதவிலக்கு காலங்களில் ஏகாதசி விரதம் வந்தால் கட்டாயம் உபவாசம் இருக்கலாம்.பாபமில்லை புண்ணியமே.

3.பூஜைக்கு எந்த சாதனம் கிடைக்கவில்லையோ அதை மனதால் த்யானித்துக் கொள்வதாலேயே பூஜை பூர்ணமாகிவிடும்.

4.அமாவாசை இரவில் பாலும் பௌர்ணமி இரவில் அரிசி சம்பந்தமான உணவும் சாப்பிடுதல் கூடாது.

5.சூரியன் உதிக்கும் போதும் அஸ்தமிக்கும் போதும் சூரியனைப்  பார்க்கக்கூடாது.

6.கோயில்,புண்ணிய ஷேத்ரம்,கர்பவதி, வயதானோர்,குரு,குழந்தைகள் உள்ள வீடு இங்கெல்லாம் சென்றால் வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

7.இல்லாதவனுக்குக் கொடுக்கும் தானமும்,பூஜை இல்லாக் கோயிலுக்கு பூஜை செய்ய உதவுவதும், அனாதைப் பிரேத சம்ஸ்காரமும் அஸ்வமேத பலனைக் கொடுக்கும்.

8.மனைவியைக் கணவன் ஜாதகப் பெயரில் சொல்லி அழைக்கக் கூடாது.

9.குழந்தைகளுக்கு நதி,நட்சத்திரங்கள்,மரங்களின் பெயர்களை சூட்டக்கூடாது.(????????????)

10.ஒற்றை ருத்திராட்சத்தைக் கழுத்துக்குழிக்கு மேல் கட்ட வேண்டும்.கீழே இறங்கக் கூடாது அது எப்போதும் கழுத்தில் இருக்கலாம்.

11.ருத்திராட்சம்,துளசி மணி,ஸ்படிகம் போன்ற மாலைகளை ஜபம்,பூஜை,ஹோமம் போன்ற காலங்களைத் தவிற மற்ற நேரங்களில் அணியக் கூடாது.

12.சுமங்கலி ஸ்த்ரீகள் இரவில் பட்டினி இருக்கக்கூடாது.

13.கோயிலுக்குச் செல்லும் போதும்,பூஜை செய்யும் போதும் பெண்கள் முடியைத் தொங்கவிடாமல் நுனி முடிச்சுப் போடவேண்டும்.

14.ஒரு போதும் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படாத அன்னத்தை உண்ணக் கூடாது.கண்ணனை நினைக்காமல் அன்னத்தை வாயில் போடக் கூடாது,

15.வீட்டில் ஸ்வாமியிடம் ஏற்றிய தீபத்தை வாயினால் ஊதி அணைக்கக் கூடாது.விரலால் பால் தொட்டு வைத்தோ,குங்குமம் வைத்தோ,பூவாலோ கை அமர்த்தலாம். ஆண்கள் அணைப்பது மத்திமம்.

16.துளசி,வில்வம் இவ்ற்றை செவ்வாய்,வெள்ளி,அமாவாசை,பௌணமி,துவாதசி,ஸாயங்காலம், இரவு நேரம் பறிக்கக் கூடாது.

17.பஞ்சாங்கம் என்பதன் பொருள்---திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம்,கரணம் எனும் ஐந்து அங்கங்களைக் கொண்டதால் பஞ்சாங்கம்.

18.ஒரு காலினால் மற்றொரு காலினைத் தேய்த்து அலம்புதல் கூடாது.(???)

19.பூஜை செய்யும் போது பூத்தட்டை மடியில் வைத்து பூவெடுத்து பூஜை செய்யக் கூடாது.

20.வெறுங்கையில் பூப்பறித்துவந்து அதை இறைவனுக்கு பூஜை செய்யக் கூடாது.(????)

இந்தக் குறிப்புகளோடு இதனை முடித்துக் கொள்வோம்..இனி ஆன்மிகம் வேறு என்ன சொல்கிறது எளிதாக..அடுத்து வருவதில் பார்ப்போமா?..

ஆன்மிகம் வளரும்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.